Thursday, January 28, 2010

mp3cut - ஆன்லைனில் Mp3 ரிங்டோன் வெட்ட

வணக்கம் நண்பர்களே,
நாம் நமக்கு பிடித்தமான ringtone வைக்க திரைப்பட பாடல்களில் இருந்து கட் செய்து எடுப்போம்.இதற்க்கு பல மென்பொருள்கள் உண்டு. உதாரணமாக நான் கூட Audacity என்ற ஒரு மென்பொருள் பற்றி பதிவிட்டு உள்ளேன்.

ஆனால் இந்த மென்பொருளில் கூட ringtone கட் செய்வது சிறிது கடினமாக இருக்கும். எளிதாக ஆன்லைனில் ரிங்டோன் கட் செய்ய இந்த தளம் உதவி புரிகிறது.தளத்தின் பெயர் mp3cut.

கட் செய்ய முதலில் உங்களுக்கு பிடித்தமான mp3 ஐ இந்த தளத்தில் upload செய்ய வேண்டும். upload செய்த பின் கீழ்க்கண்டவாறு தோன்றும்

இதில் உங்களுக்கு தேவையான இடத்தில் இருந்து தேவையான் இடம் வரை தேர்வு செய்து கொள்ளவும். உதாரணமாக 18 வது வினாடியில் இருந்து 41 வது விநாடி வரை தேர்வு செய்துள்ளேன். பின் Split and Download என்ற பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். அவ்வளவே !

தள முகவரி : http://mp3cut.net/

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Tuesday, January 26, 2010

Youtube மற்றும் Metacafe களில் இருந்து தரவிறக்கம் செய்ய சிறந்த மென்பொருள்

நண்பர்களே,
Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.இருந்தாலும் சமீபத்தில் நான் உபயோகிக்கும் இந்த மென்பொருள் நன்றாக உள்ளது. youtube, metacafe மட்டுமில்லாது MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo!, Metacafe, Spike, Megarotic (unlimited), Yahoo!, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE போன்ற தளங்களில் இருந்தும் வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவுகிறது.



டவுன்லோட் செய்யும் போதே நமக்கு தேவையான கோப்பு வடிவில் டவுன்லோட் செய்யலாம்.உதாரணமாக youtube ல் இருந்து வீடியோக்கள் FLV கோப்பு வடிவத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்கும் அதை டவுன்லோட் செய்யும் போதே AVI, MP4,WMV போன்ற வடிவங்களில் மாற்றி டவுன்லோட் செய்யலாம்.

மேலும் இது கோப்புகளை தனியே வேறு கோப்பு வடிவில் மாற்றும் வசதிகளையும் கொண்டுள்ளது.உங்கள் மொபைல் போன்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோகளை மாற்றி கொள்ளும் வசதி உள்ளது.மேலும் வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் பிரிக்கும் வசதியும் உள்ளது.


இந்த மென்பொருள் மூலம் எந்த தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு சென்று பார்க்க.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்.


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Friday, January 22, 2010

Symptom Search - நோய் அறிகுறிகளின் தேடல்

பரபரப்பான உலகத்தில் இயங்கி கொண்டிருக்கும் நமக்கு தினமும் நமது உடலை நாம் சரியாக கவனிக்க நேரமில்லை.இதனாலயே பலவித நோய்கள் வருகின்றன.சாதாரண தலைவலி என்று நினைத்து மருத்துவரிடம் செல்லாமல் மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவது பிரச்சனையில் கொண்டு போய் விடலாம்.சாதாரண தலைவலி என விட்டுவிடாமல் என்னவென்று பார்ப்பதே நலம். நாம் தேடு இயந்திரத்த்ில் எதைஎதையோ தேடுகிறோம்,சில அறிகுறிகளுக்கு ஏற்ப அது என்ன நோயாக இருக்கலாம் மற்றும் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை Symptom Search என்ற தளம் வழங்குகிறது. உங்களுக்கு வரும் தலைவலி,தோள்வலி என எவையானாலும் இதில் வழங்கினால் அறிகுறிகளுக்கு ஏற்ப என்னவாக இருக்கலாம் என தருகிறது.


இதன் மூலம் மேலும் ஒரு நன்மை இருக்கிறது.சிலர் சாதாரண உடல் நல கோளாறுகளுக்கு கூட ஏதாவது நினைத்து கொண்டு பயப்படுவர்.இதில் உங்கள் கோளாறுகளை வழங்கி என்னவென்று தெரிந்து கொள்வதன் மூலம் வீண் பயத்தை தவிர்க்கலாம். வலைத்தள சுட்டி

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Thursday, January 7, 2010

iBin - பென் டிரைவ்களுக்கான Recycle Bin

Recycle Bin பற்றி அனைவரும் அறிந்திருப்பர். நாம் Delete செய்யும் கோப்புகளை தற்காலிகமாக இங்கே இருக்கும்.நாம் தவறுதலாக Delete செய்யும் கோப்புகளை இங்கிருந்து எடுத்து விடலாம்.ஆனால் பென் டிரைவ் உபயோகிப்பவர்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்புகளை Delete செய்தால் இங்கே இருக்காது. பின் பென் டிரைவ்ல் இருந்து Delete செய்த கோப்புகளை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென் டிரைவ்களுக்கு Recycle Bin போல செயல்படுகிறது.

முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற கோப்பை உங்கள் பென் டிரைவ்ல் copy செய்து கொள்க.இது வெறும் 216kb அளவு கொண்டதுதான். முதன் முதலில் ஒரு கோப்பை delete செய்யும் போது iBin உங்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்பை delete செய்து விடவா? அல்லது iBin Folderல் தற்காலிகமாக வைத்து கொள்ளவா? என கேட்கும்.


Dump into iBin என்பதை கிளிக் செய்தால் உங்கள் பென் டிரைவ்ல் iBin என்ற Folder ஐ உருவாக்கும். இது தான் உங்கள் பென் டிரைவ்களுக்கான Recycle Bin Folder. இது உங்கள் பென் டிரைவ் இன் அளவிலிருந்து 10% எடுத்து கொள்ளும். வேண்டுமென்றால் நாம் அளவை நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்க்கு உங்கள் System Tray ல் உள்ள iBin Icon ஐ கிளிக் செய்க
இதில் Custom Options என்பதை கிளிக் செய்க.இப்பொது கீழ்க்கண்ட Window தோன்றும் .
இதில் சென்று உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். மேலும் பல வசதிகளும் உள்ளன. எளிதாக நாம் Delete செய்த கோப்புகளை பார்க்கவோ அல்லது நீக்கவோ Dumping Management என்பதை கிளிக் செய்க .கீழ்க்கண்ட Window தோன்றும் .
இதன் மூலம் கோப்புகளை நீக்கவோ அல்லது மீண்டும் சேமிக்கவோ முடியும் .

இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Wednesday, December 30, 2009

பயன்படுத்தி பாருங்கள் - 2


Portable Apps


மென்பொருள்களில் Portable Software என பல இடங்களில் நாம் கேள்விப்பட்டதுண்டு . ஒரு மென்பொருளை நாம் கணிணியில் பயன்படுத்த வேண்டும் என்றால் முதலில் அந்த மென்பொருளை நாம் நிறுவ அதாவது Install செய்ய வேண்டும் .இதற்க்கு அந்த மென்பொருள் வடிவமைத்தவர்கள் தரும் Setup நிறுவியை கொண்டு நிறுவ வேண்டும் . நிறுவும் போது மென்பொருள் இயங்க தேவையான கோப்புகள் அனைத்தும் நமது கணிணியில் நிறுவப்பட்டு பின் இயங்கும் . இதை வேறு ஒரு கணிணியில் பயன்படுத்த வேண்டும் என்றால் அங்கும் நிறுவவேண்டும் .

ஒரு மென்பொருளின் Portable என்றால் அந்த மென்பொருளை நிறுவ அதாவது Install செய்யாமல் நேரடியாக இயக்குவது ஆகும் . இதன் பயன் என்னவென்றால் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்களை CD,Pen Drive போன்றவற்றில் எடுத்து சென்று வேறு எந்த கணிணியிலும் நிறுவ வேண்டிய அவசியம் இல்லாமல் CD,Pen Drive இல் இருந்தே அப்படியே இயக்கி பயன்படுத்தலாம் .

இப்படி பயன்படுத்த நமக்கு நாம் பயன்படுத்தும் மென்பொருள்களின் Portable வகை வேண்டும் . பிரபல மென்பொருள்களின் portable வடிவம் இந்த இணைய தளத்தில் கிடைக்கிறது .




Win Patrol


உங்கள் கணிணியில் என்னென்ன மென்பொருள்கள் இயங்குகின்றன , எத்தனை Services உபயோகத்தில் உள்ளன , உங்கள் கணிணி இயங்க ஆரம்பிக்கும் போது என்னென்ன மென்பொருள்கள் இயங்க ஆரம்பிக்கின்றன மற்றும் கணிணியில் உள்ள Hidden Files ஆகியவற்றை காட்டுகிறது . மிகவும் பயனுள்ள மென்பொருள் பயன்படுத்தி பாருங்கள் . இதை இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்.


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Monday, December 28, 2009

MultiFox நெருப்புநரியில் ஒரே நேரத்தில் இரு ஜிமெயில் கணக்குகள்


Gmail இன்று பலரால் உபயோகிக்க படும் ஈமெயில் வசதிகளில் முதன்மையாக இருக்கிறது . பெரும்பாலான அனைவரும் தற்போது ஜிமெயில் கணக்கு வைத்துள்ளார்கள். மேலும் பெரும்பாலானவர்கள் பல ஜிமெயில் கணக்கு வைத்திருப்பார்கள் .

உதாரணமாக Blogger பயன்படுத்துபவர்கள் அதுகென்று தனி கணக்கு வைத்திருப்பார்கள் . இது போல தேவைக்கேற்ப அவரவர் தனி தனி கணக்குகள் வைத்திருப்பார்கள் .

ஆனால் நெருப்புநரி Firfox மட்டுமில்லாது எந்த இணைய உலவியுளும் ஒரே நேரத்தில் இரு கணக்குகளை பயன்படுத்த முடியாது . Multifox என்ற இந்த நெருப்புநரி-Firefox Addon மூலமாக ஒரே நேரத்தில் இரு கணக்குகளை பயன்படுத்த முடியும் .

இதற்க்கு முதலில் இந்த நெருப்புநரி-Firefox Addon ஐ உங்கள் நெருப்புநரி-Firefox இல் நிறுவ வேண்டும் . இதை இங்கிருந்து நிறுவலாம்.

இதை நிறுவும் போது நெருப்பு நரி Firefox இல் கீழ்க்கண்ட கேள்வியை எழுப்பலாம் . அதற்க்கு Allow என்ற பட்டனை கிளிக் செய்க. படத்தை கிளிக் செய்த பெரிதாக்கி பார்க்க

நிறுவிய பின் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றுக


நெருப்புநரி-Firefox இல் File -> New Identity Profile என்பதை கிளிக் செய்க .


கிளிக் செய்த பின் புதிய நெருப்புநரி-Firefox Window ஒன்று தோன்றும் . அதில் மற்றொரு ஜிமெயில் கணக்கை பயன்படுத்துங்கள் . அதில் எத்தனையாவது Window என அதன் AddresBar இல் தோன்றும் .


நீங்கள் ஐந்து ஜிமெயில் கணக்குகள் வைத்திருந்தால் ஐந்து தடவை நெருப்புநரி-Firefox இல் File -> New Identity Profile என்பதை கிளிக் செய்க .

ஒவ்வொரு Windowவிழும் தனி தனி ஜிமெயில் கணக்கு பயன்படுத்தலாம் . மேலும் விபரங்களுக்கு http://br.mozdev.org/multifox/

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Monday, December 21, 2009

பயன்படுத்தி பாருங்கள் - 1

Monitor Off
நாம் அலுவலகத்திலோ ,வீட்டிலோ கணிணியை பயன்படுத்தும் போது எங்காவது செல்ல நேர்ந்தால் கணிணியின் திரையை அணைத்து விட்டு செல்வோம் அல்லது Screensaver ஓட விட்டு செல்வோம் . திரையை அணைக்க நாம் திரையில் உள்ள பட்டனை அழுத்தி விட்டு செல்வோம் . இதற்க்கு பதிலாக ஒரே கிளிக்கில் திரையை அணைக்க மற்றும் Screensaver ஓட விட இந்த மென்பொருள் உதவுகிறது .

இதன் உதவி கொண்டு நீங்கள் கணிணி திரையை அணைக்க ஏதாவது பட்டனை தேர்வு செய்து கொள்ளாம் . உதாரணமாக Ctrl + Shift +1 என உங்கள் வசதிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம் . Screensaver இயக்குவதற்கும் ஏதாவது பட்டனை தேர்வு செய்து கொள்ளாம். இல்லாவிடில் ஒரே கிளிக் மூலம் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம் .

மேலும் இதில் கிளிக் செய்த பிறகு எவளவு நேரம் கழித்து திரையை அணைக்க வேண்டும் அல்லது Screensaver இயங்க வேண்டும் என சொல்லிவிடலாம் .


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்




Windows Access Panel
நாம் Control Panel வழியாக சென்று சில Windows இயக்கங்களை இயக்குவோம் . உதாரணமாக Service Manager,RegEdit போன்ற பல Applications Control Panel லில் மூலமாக இயக்க முடியும் . மேலும் Chkdisk,Disk cleanup போன்ற பல Application களை windows menuவில் தேடிபிடித்து சென்று இயக்க வேண்டும் . இதற்க்கு பதிலாக Windows Access Panel என்ற மென்பொருள் இவைகளை சுலபமாக இயக்க உதவி புரிகிறது .


இது போன்ற Applicationகளை தொகுத்து விரைவாக இயக்க வழி புரிகிறது . இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Wednesday, December 16, 2009

விரைவாக கோப்புகளை காப்பி செய்ய

நாம் கணிணியில் பலவிதமான கோப்புகள் வைத்திருப்போம் . அவற்றை நம் வசதிக்கேற்றவாறு அடிக்கடி இடமாற்றம் செய்வோம் . அப்படி இடமாற்றம் செய்யும் போது ஒரு Drive விட்டு ஒரு Drive காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது அதாவது உதாரணமாக Drive(C:) லிருந்து Drive(E:) காப்பி அல்லது இடமாற்றம் செய்யும் போது சற்று வேகம் குறைவாக இருக்கும். மேலும் இடமாற்றம் செய்யப்படும் கோப்பு பெரிதாக இருப்பின் மேலும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும் .

TeraCopy என்னும் மென்பொருள் விரைவாக காப்பி செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய உதவுகிறது . இது சாதாரணமாக காப்பி மற்றும் இடமாற்றம் செய்வதை காட்டிலும் விரைவாக செய்கிறது .இதற்க்கு முதலில் TerCopy மென்பொருளை நிறுவிய பின் இடமாற்றமோ காப்பியோ செய்யவேண்டிய கோப்பின் மீது Right Click செய்து அதில் TeraCopy என்பதை கிளிக் செய்க


பின் தோன்றும் Window வில் Copy அல்லது Move வசதியை தேர்வு செய்க.மேலும் கோப்பை இடமாற்றமோ காப்பியோ செய்ய வேண்டிய இடத்தையும் தேர்வு செய்க .


தேர்வு செய்த பின் TeraCopy இடமாற்றமோ அல்லது காப்பியோ செய்வதை தொடங்கி விடும் . மேலும் இதில் இடமாற்றத்தையோ காப்பியையோ தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் Pause வசதியும் உண்டு .





இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்