Sunday, December 2, 2012

Torch - புதிய குரோமியம் ப்ரௌசெர்

குரோம்(Google Chrome) ப்ரௌசெர்(Browser) பற்றி அனைவருக்கும் தெரியும். தற்போது முன்னணி ப்ரௌசராக விளங்குகிறது. அறிமுகமான சில வருடங்களிலே முதன்மையாக விளங்கிய Firefox ஐ பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளது. குரோம் உருவான குரோமியம் நுட்பத்தை கடைபிடித்து வந்துள்ள புது ப்ரௌசெர் Torch. இதற்கும் குரோமிற்கும் வித்தியாசம் இதில் உள்ள புதிய வசதிகளே.இது குரோமில் உள்ள அனைத்து வசதிகளுடன் மேலும் மூன்று முக்கியமான வசதிகளை கொண்டு வந்துள்ளது. அவை Share,Media மற்றும் Torrent.
முதல் வசதி Share. உங்களுக்கு பிடித்த வலைதளங்களையோ , வலைப்பூ பக்கங்களையோ எளிதாக Share என்ற பட்டனை கிளிக் செய்து Twitter மற்றும் Facebook தளங்களில் ஷேர் செய்து கொள்ளலாம்.

இரண்டாவது youtube போன்ற வீடியோ தளங்களில் இருந்து வீடியோகளை வேறு எந்த மென்பொருள் இல்லாமல் இதன் மூலமே டவுன்லோட் செய்து கொள்ளலாம். வீடியோ உள்ள வலைப்பக்கத்துக்கு வந்தவுடன் Media என்ற பட்டன் Video என மாறியிருக்கும். பின் Video என்ற பட்டனை கிளிக் செய்து வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மூன்றாவது Torrent மூலம் நீங்கள் டவுன்லோட் செய்யும் வசதியையும் தருகிறது. வேறு Torrent மூலம் டவுன்லோட் செய்யும் மென்பொருள் இல்லாமல் இதிலேயே செய்து கொள்ள முடியும்.

குரோம்(Google Chrome) ப்ரௌசெரையும் ,குரோமில் உள்ள வசதிகளோடு மேலும் உள்ள இந்த வசதிகளை விரும்புவோர்களுக்கு இந்த ப்ரௌசெர் பெரிதும் பயன்படும். இந்த ப்ரௌசரை பற்றிய வீடியோவை கீழே காணலாம். டவுன்லோட் செய்ய Torch Web Browser

Thursday, November 22, 2012

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 2

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க –  பாகம் 1 என்ற முதல் பதிவில் டவுன்லோட் செய்த திரைப்படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க வேண்டுமானால் அவை எவ்வகை வீடியோ கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் எவ்வகை வீடியோ கோப்பாக மற்றும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் இலவச மென்பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு DivX,XviD வீடியோ கோப்புகளாக மாற்றுவது மற்றும் எவ்வாறு டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக பற்றி பார்ப்போம்.

முதலில் DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயருக்கு எந்தவொரு வீடியோ கோப்புகளிலிருந்து டிவிடி(DVD) அமைப்பு வீடியோ கோப்புகளாக மாற்றுவது பற்றி பார்ப்போம். இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள் உள்ளன. சில சிறந்த இலவச மென்பொருள்களே உள்ளன. அவற்றில் ஒன்று DVDFlick. இந்த மென்பொருளை இந்த Download DVD Flick சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி கொள்க.

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 1

தினமும் இணையத்தில் திரைப்படங்களை பலர் டவுன்லோட் செய்கிறோம். டவுன்லோட் செய்த படங்களை பார்க்க கணிணியில் பல வீடியோ பிளேயர்கள் உள்ளன. உதாரணமாக KM Player , VLC Media Player போன்ற பிளேயர்கள் எவ்வித திரைப்படங்களையும் , வீடியோகளையும் பார்க்க உதவுகின்றன.

சிலருக்கு கணிணியில் பார்ப்பது பிடிக்காது. வீட்டில் டிவியில் பார்க்கவே விரும்புவர். டிவியில் வீட்டில் உள்ளவர்களுடன் அல்லது  நண்பர்களுடன் பார்பதற்க்கு டிவியே சிறந்தது. இதற்கு டிவிடி பிளேயர் துணைபுரிகிறது. தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் பென் டிரைவ் வசதியோடு வருகிறது. இதன் மூலம் எளிதாக டவுன்லோட் செய்த திரைப்படங்களை பென் டிரைவ் மூலம் எளிதாக டிவிடி பிளேயர் துணை கொண்டு டிவியில் பார்க்கலாம்.

ஃபயர்பாக்ஸில் புதிய வசதி - ஃபேஸ்புக்

பிரபல உலவியான(Browser) ஃபயர்பாக்ஸ் தற்போது அதன் புதிய  பதிப்பான Firefox 17.0  வெளியிட்டுள்ளது. இந்த பதிப்பில் ஒரு முக்கியமான வசதியை இணைத்துள்ளது. அந்த வசதி என்னவென்றால் தற்போது தினமும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாகி கொண்டிருக்கிற facebook ஐ ஃபயர்பாக்ஸில் இணைத்துள்ளது. இதன் மூலம் உங்கள் facebook இன் messages,friends request மற்றும் chat ஆகியவற்றை facebook தளத்திற்கு செல்லாமலே பயன்படுத்தி கொள்ளலாம்.

இந்த வசதியை கொண்டு வர நீங்கள் Firefox 17 டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் அல்லது அப்டேட் செய்து கொள்ளுங்கள். பின்னர் கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து சென்று வரும் facebook வலைபக்கத்தில் Turn on என்பதை கிளிக் செய்தால் இந்த வசதி உங்கள் ஃபயர்பாக்ஸில் வந்து விடும்.

Enable Facebook Messanger for Firefox



 அல்லது உங்கள் ஃபயர்பாக்ஸ் addressbarல் about:config என்று டைப் செய்து Enter செய்க. கீழே உள்ளது போல் எச்சரிக்கை செய்தி வரும். I'll be careful. I promise என்பதை கிளிக் செய்து தொடர்ந்து செல்க.

பின்னர் வரும் search பாக்ஸில் social.enabled என்று டைப் செய்து Enter செய்தால் கீழே உள்ளது போல் வரும். இதில் value என்பது  false என இருக்கும்.டபுள் கிளிக்(double click) செய்தால் true என மாறிவிடும். தற்போது facebook வசதி உங்கள் ஃபயர்பாக்ஸில் வந்து விடும். இந்த வசதி வேண்டாம் என்றால் false என மாற்றி கொள்க.


இந்த வசதி நீக்க கீழே உள்ள வழியையும் பின்பற்றலாம்.

Saturday, April 30, 2011

ScreenShotக்கு மற்றொரு எளிய சிறந்த மென்பொருள்

ஏற்கனவே Screen Shots எடுக்க உதவும் மென்பொருள் பற்றி அண்மையில் இந்த பதிவை Screenshot எடுக்க சிறந்த மென்பொருள் எழுதினேன். ஏற்கனவே எழுதிய அந்த மென்பொருள் கடினமாக இருக்கிறது என்றால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.மிக எளிமையாக உள்ளது. இந்த மென்பொருளிலும் முழுத்திரை,குறிப்பிட்ட திரை,திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மௌஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும்.

நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.


Sunday, April 17, 2011

மைக்ரோசாப்ட் வைரஸ் சேஃப்டி ஸ்கேனர்


மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே Microsoft Security Essentials என்னும் ஆண்டி வைரஸ் மென்பொருளை தந்துள்ளது. இது மற்ற ஆண்டி வைரஸ் மென்பொருள்களை போலவே உங்கள் கணிணியில் நிறுவி இயக்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனமே தந்தாலும் பலர் பிற இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களையே நிறுவி பயன்படுத்துகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் மற்றொரு ஆண்டி வைரஸ் மென்பொருள் Microsoft Safety Scanner. இந்த மென்பொருளை நீங்கள் நிறுவ தேவை இல்லை, டவுன்லோட் செய்து அப்படியே கிளிக் செய்து இயக்க கூடிய போர்டபில்(Portable) மென்பொருள். உங்கள் கணிணியில் ஆண்டி வைரஸ் இருந்தும் வைரஸ் வந்தாலோ அல்லது இருக்கலாம் என நீங்கள் நினைத்தாலோ இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணிணியை ஸ்கேன் செய்து வைரசை நீக்கலாம்.

இந்த மென்பொருள் 70MB அளவு கொண்டது. தற்போது வரை உள்ள அறியப்பட்ட அனைத்து வைரஸ் பற்றிய விபரங்களையும், அதை நீக்கவும் செய்கிறது. இதை நிறுவிய பின் தோன்றும் திரையில் என்னமுறையில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்தாலே போதும் , ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கி விடும்.




ஆனால் இந்த மென்பொருளில் உள்ள குறை என்னவென்றால் நீங்கள் இதனை அப்டேட் (update)செய்ய இயலாது.மேலும் இதனை டவுன்லோட் செய்த 10 நாட்களுக்கு மேல் இயங்காது.மீண்டும் ஒருமுறை அண்மைய வைரஸ் பற்றிய விபரங்கள் கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். அதாவது மீண்டும் 70mb கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

ஆனால் இதனால் என்ன பயன் என்றால் உங்கள் கணிணியில் எதிர்பாராத விதமாக வைரஸ் தாக்கி உங்கள் ஆண்டி வைரஸ் இயங்காமல் போனாலோ, இந்த மென்பொருளை உடனே டவுன்லோட் செய்து இயக்கி வைரஸ்களை நீக்கலாம். இது போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் வைரஸ் எளிதில் தாக்காது. இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

Browse All - Lucky Limat | Download Microsoft Safety Scanner

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Friday, March 18, 2011

அழகான டெஸ்க்டாப் கடிகாரம்

பலருக்கு விண்டோஸ் கணிணியின் டெஸ்க்டாப் பகுதியை அழகாக வைத்து கொள்ள விரும்புவர். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 டெஸ்க்டாப் பகுதிகளை பல வழிகளில் அழகு படுத்தலாம். மேலும் டெஸ்க்டாப்பில் அழகான கடிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும். பல கடிகார மென்பொருள்கள் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களுக்கு உள்ளன. அவற்றில் சிறிய அழகான கடிகாரத்தை பார்ப்போம்.



அழகாக எளிய வடிவில் தேதி , நாள் மற்றும் நேரத்தை காட்டுகிறது.மேலும் உங்களுக்கு தேவையான தோற்றத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.



விரும்பும் இடத்தில் வைத்து கொள்ளும் வசதியும் உள்ளது.



டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

Horloger - Advanced clock for windows7 and windows Vista


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Sunday, March 13, 2011

Screenshot எடுக்க சிறந்த மென்பொருள்

Screenshot எடுப்பதற்கு விண்டோஸில் Print Screen வசதி இருந்தாலும் அதில் பல வசதிகள் இருப்பதில்லை.உதாரணமாக உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக எடுக்க முடியாது. முழு திரையையும் எடுத்து பின் அதில் இருந்து வெட்டி எடுக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் மௌஸ் உடன் எடுக்க விரும்பினால் முடியாது.

இதனாலேயே தனி மென்பொருள்கள் உதவியை நாட வேண்டியுள்ளது. பல இலவச மென்பொருள்கள் உள்ளன. பல வசதிகள் சில மென்பொருள்களில் இருந்தாலும் அவைகள் எளிதாக இருப்பதில்லை. Shotty என்ற இந்த மென்பொருள் எளிதாக Screenshot எடுக்க உதவுகிறது.



இதனை இயக்குவது எளிது.நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.



Ctrl + Prt Scr கிளிக் செய்தும் எடுக்கலாம்.வேண்டுமானால் நம் வசதிக்கு ஏற்ப பட்டனை மாற்றி கொள்ளலாம்.

Screen என்பதை கிளிக் செய்தால் முழு திரையும் , Region என்பதை கிளிக் செய்தால் திரையில் குறிப்பிட்ட பகுதியையும் , LQ Window என்பதை கிளிக் செய்தால் சற்று குறைந்த குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும், HQ Window என்பதை கிளிக் செய்தால் நல்ல குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும் Screenshot எடுக்கலாம்.

மேலும் பல திரைகள் இருப்பின் எந்த திரையை எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.



எடுக்கப்பட்ட Screenshot இல் மேலும் பல திருத்தங்களை அல்லது மாற்றங்களையும் செய்ய வசதி தருகிறது.



இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Shotty - Take high quality screenshots


அன்புடன்,
லக்கி லிமட்