Thursday, April 29, 2010

iColorFolder - உங்கள் Folderக்கு அழகாக கலர் கொடுக்க

நண்பர்களே,
இது Windows பயன்படுத்துபவர்களுக்காக ஒரு Softபொருள்.உங்கள் கணினியில் பல கோப்புகள் இருக்கும் அவைகள் பல Folderகளில் நீங்கள் வைத்துருப்பீர்கள்.அவைகள் திரைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ,புகைப்படங்கள் இருக்கும் Folderஆகவோ அல்லது உங்கள் பர்சனல் கோப்புகள் இருக்கும் Folderஆகவோ இருக்கலாம்.

ஒரு சமயத்தில் உங்களிடம் பல கோப்புகள் பல Folderகளில் இருக்கலாம்.அப்படி இருக்கையில் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் Folderஐ கண்டுபிடிக்க சிரமமாக இருக்கும் அப்போது அடிக்கடி பயன்படுத்தும் Folderகளுக்கு தனியாக தனி கலரில் இருந்தால் எளிதாக இருக்கும் .இதற்க்கு இந்த iColorFolder என்ற Softபொருள் உதவுகிறது.



இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் folder மீது Right Click செய்து Color Label என்பதை தேர்வு செய்து உங்களுக்கு பிடித்த கலரை தேர்வு செய்து கொள்ளலாம்.கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க



இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய சுட்டி


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்Browse Comics - காமிக்ஸ் உலவல்

Tuesday, April 20, 2010

ஜிமெயிலில் கோப்புகளை இணைக்க புதிய வசதி

நண்பர்களே,
ஜிமெயிலை அறியாதவர்கள் இருக்க முடியாது.தற்போது அதிகம் பயன்படுத்தப்படும் ஈமெயில் ஜிமெயில் எனலாம்.ஜிமெயிலில் கணக்கு இல்லாதவர்கள் இல்லை எனும் நிலை உள்ளது.


ஜிமெயில் கணக்கில் 20MB கோப்புகளை இணைத்து அனுப்பலாம் என்பது அனைவரும் அறிந்ததே.கோப்புகளை இணைக்க ஜிமெயில் புது வசதியை தந்துள்ளது.இதற்க்கு முன்னர் கோப்புகளை இணைக்க அந்த கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்து இணைக்க வேண்டும்.ஆனால் தற்போது Drag and Drop வசதி மூலம் இணைக்கலாம்.அதாவது கோப்பை நமது மௌஸ் வைத்து தேர்வு செய்து இழுத்து கொண்டு வந்தாலே போதும்.

இதற்க்கு வசதியாக முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க.இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும்.பின் இணைக்க வேண்டிய கோப்பை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும். கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க.



தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Thursday, April 15, 2010

Dexpot - ஒன்றிற்கு மேற்பட்ட Desktopகள்

நண்பர்களே ,
Windows க்கான ஒரு பயனுள்ள softபொருள் Dexpot ஆகும்.Windows பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கு பிடித்த மாதிரி Desktop ஐ மாற்றி கொள்வர்.உதாரணமாக நமக்கு பிடித்த புகைப்படங்களை Background ஆக வைத்து கொள்வது, நமக்கு தேவையான மென்பொருள்களின் Shotcut வைத்து கொள்வது.மேலும் விதவிதமான desktop themes நிறுவிகொள்வது போன்றவை.

சில பேர் Background ஐ மாற்றி கொண்டே இருப்பர்.ஒரு desktopக்கே இப்படி என்றால் பல desktopகள் இருந்தால் எப்படி இருக்கும்.நமக்கு பிடித்த மாதிரி பல டெஸ்க்டாப் இருந்தால் உதாரணமாக நான்கு இருந்தால் ஒவொன்றையும் ஒவ்வொரு மாதிரி வைத்து கொள்ளலாம்.Dexpot என்ற Softபொருள் இந்த வசதியை தருகிறது.


இதை நிறுவிய பின் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட Desktopகள் வைத்து கொள்ளலாம்.ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வைத்து கொள்ளலாம்.Linuxல் workspace என இருக்கும் வசதியை போல் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த Softபொருளின் உதவி கொண்டு 20 Desktopகள் வரை வைத்து கொள்ளலாம்.

மிக எளிதாக எந்த டெஸ்க்டாப் வேண்டுமானாலும் மாறிகொள்ளலாம்.அலுவலகத்தில் இதை பயன்படுத்தி ஒன்றில் அலுவலக வேலைகளையும்,மற்றொன்றில் உங்களது மற்ற வேலைகலையோ அல்லது பொழுதுபோக்குகளையோ பார்த்து கொள்ளலாம்.


இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Saturday, April 10, 2010

Launchy - Start Menuவை மறந்து விடுங்கள்

நண்பர்களே,
Windows ல் Start Menu அனைவருக்கும் தெரிந்ததே. நிறுவிய அனைத்து மென்பொருட்களையும் நாம் திறக்க உதவுகிறது. மென்பொருள்கள்,Control Panel,My Computer போன்ற அனைத்தையும் இதன் மூலம் சென்றடையமுடியும்.

ஆனால் பல மென்பொருள்கள் நிறுவிய உள்ள நண்பர்களுக்கு start menu பயன்படுத்தும் போது நமக்கு வேண்டிய மென்பொருளை தேடி பிடித்து கிளிக் செய்து நிறுவ வேண்டும். Launchy என்ற Softபொருள் இதனை எளிதாக்குகிறது. Start Menuவையே நீங்கள் பயன்படுத்த தேவையில்லை.இந்த மென்பொருளை நிறுவிய பின் இதை(Alt+Space) இயக்கினால் கீழே உள்ளது போல் தோன்றும்.


இதில் நமக்கு தேவையான மென்பொருளின் முதல் சில எழுத்துகளை டைப் செய்தால் போதும் நிறுவியிருக்கும் மென்பொருள்களை பட்டியலிடும். அதில் நமக்கு தேவையான மென்பொருளை கிளிக் செய்து உடனே திறந்து விடலாம்.இதன் மூலம் எளிதாக வேகமாக திறக்கலாம்.


இந்த softபொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Friday, April 9, 2010

Skip Screen - நெருப்புநரியில் டவுன்லோட் தளங்களில் காத்திருப்பதை தவிர்க்க

இணையத்தில் கோப்புகளை பதிவேற்ற ,இறக்க RapidShare, Megaupload, Mediafire, zShare போன்ற பல தளங்கள் உள்ளன . இவற்றில் இருந்து நாம் பல வகையான கோப்புகளை தினமும் டவுன்லோட் செய்கிறோம். இவைகளில் இருந்து கோப்புகளை டவுன்லோட் செய்யும் பொது சில வினாடிகள் காத்திருந்து பின் தான் டவுன்லோட் செய்ய முடியும் .


இதனால் அந்த விநாடி வரை காத்திருந்து பின் தான் டவுன்லோட் சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும் . இது சற்று சலிப்பை உண்டு பண்ணும் . இதை தவிர்க்க நெருப்பு நரியில் skipscreen என்ற add-on உதவுகிறது.

இதை நெருப்பு நரியில் நிறுவிய பின் உங்கள் டவுன்லோட் சுட்டியை நெருப்புநரியில் கொடுத்தால் போதும் காத்திருந்து கிளிக் செய்ய வேண்டியது இல்லை. இந்த skipscreen என்ற add-on அனைத்தையும் பார்த்து கொள்ளும். டவுன்லோட் சுட்டி கொடுத்தபின் கீழே உள்ளது போல் விண்டோ தோன்றும்.



பின் நாம் வேறு தளங்களை பார்க்க சென்றுவிடலாம். நேரம் முடிந்த பின் கோப்புகள் டவுன்லோட் பண்ண நமக்கு கிடைத்து விடும் . இந்த நெருப்பு நரி add-on பயன்படும் தளங்கள்

# Rapidshare (don't click! it's automatic!)
# Megaupload (captcha action coming soon!)
# Mediafire
# Uploaded.to
# zShare (now with a "listen-first" option!)
# Sharebee
# DepositFiles
# Sendspace
# Divshare
# Linkbucks
# Link-protector



இதை நெருப்பு நரியில் நிறுவ சுட்டி


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்