Sunday, February 28, 2010

வலைதளங்களில் உள்ள எந்தவொரு கோப்பையும் பதிவிறக்க - File2HD

நண்பர்களே,
நாம் தினமும் நிறைய வலைத்தளங்களுக்கு செல்கிறோம். அவற்றில் உங்களுக்கு பிடித்த புகைப்படங்கள்,பாடல்கள்,படங்கள் போன்ற பல கோப்புகள் இருக்கலாம்.இவைகள் அந்த அந்த வளதலங்களோடு இணைக்கப்பட்டிருக்கும். அவைகளை டவுன்லோட் செய்ய File2HD என்ற தளம் உதவுகிறது.



இந்த தளத்திற்கு சென்று தேவையான வலைத்தள முகவரியை கொடுத்து அந்த தளத்தில் இணைக்கப்பட்டுள்ள புகைப்படமா,பாடல்களா அல்லது பிற கோப்புகளா என தேர்வு செய்து
Get Files என்ற பட்டனை கிளிக்கினால் அந்த தளத்தில் உள்ள புகைப்படம்,பாடல்கல் அல்லது பிற கோப்புகளின் சுட்டிகள் கீழ்க்கண்ட முறையில் காட்டப்படும். உதாரணமாக எனது வலைப்பூவில் உள்ள புகைப்படங்களின் சுட்டிகள் கீழே காட்டபடுகிறது.



இந்த சுட்டிகளை கிளிக் செய்து நீங்கள் கோப்புகளை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.வலைத்தள சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்
D5KYMK8QUYBX

Friday, February 26, 2010

நீங்கள் பிறந்த வருடத்தில் என்ன நடந்தது? - What Happened In My Birth Year

வணக்கம் நண்பர்களே,
ஒரு வருடத்தில் எல்லாராலும் மறக்க முடியாத ஒரு நாள் நமது பிறந்தநாள் ஆகும்.என்ன தான் கஷ்டங்கள் இருந்தாலும் நமது பிறந்த நாளில் நமக்கு ஒரு வித மகிழ்ச்சி வருவது உண்மை.

ஆனால் நாம் பிறந்த வருடத்தில் என்ன முக்கியமான நிகழ்வுகள் நடந்தது என நாம் அறிந்திருக்க மாட்டோம். whathappenedinmybirthyear என்ற தளம் நமது பிறந்த வருடத்தில் நடந்ததை பட்டியலிடுகிறது.



இந்த தளத்திற்கு சென்று உங்கள் பிறந்த வருடத்தை மட்டும் டைப் செய்தால் போதும்.



உதாரணமாக 1982 என கொடுத்தால் 1982 ல் என்ன கண்டுபுடிப்புகள் நிகழ்ந்தது , என்ன திரைப்படம் , என்ன புத்தகம் அனைவரையும் கவர்ந்தது என பட்டியலிடுகிறது. நல்ல வித்தியாசமான தளம் . சென்று பாருங்கள்.

வலைதள சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....




அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Tuesday, February 23, 2010

Unlocker - அழிக்க முடியாத கோப்புகளை அழிக்க


நண்பர்களே,
நாம் சில நேரங்களில் கணிணியில் சந்திக்கும் ஒரு பிரச்சனை சில கோப்புகளை அழிக்க(Delete) நாம் விரும்பி நாம் அழித்தால் அழியாமல் நமக்கு எரிச்சலை உண்டு பண்ணும. வேறொரு செயல் அந்த கோப்பை பயன்படுத்தி கொண்டு இருப்பதாக நமக்கு பிழை செய்தி வரும்.அதாவது கீழ்க்கண்டவாறு தோன்றும்



இத்தகைய கோப்புகளை அழிக்க Unlocker என்ற மென்பொருள் உதவுகிறது.இந்த மென்பொருளை நிறுவிய பின் அழிக்க முடியாத கோப்பின் மீது Right கிளிக் செய்யவும்.அதில் என்பதை தேர்வு செய்யவும்.


தேர்வு செய்தால் அந்த கோப்பை தற்போது பயன்படுத்தி கொண்டிருக்கும் செயல்களை காட்டும்.


அதில் Unlock என்ற பட்டன் மூலம் அந்த செயல்களை நிறுத்தி அந்த கோப்பை அளிக்கலாம்.இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்யலாம்.



அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

பயன்படுத்தி பாருங்கள் - 4

instacalc

இத்தளம் ஆன்லைனிலேயே எளிதாக Calculator வசத்ியை தருகிறது. எளிதாக பயன்படுத்தும் வகையில் சாதாரண கணக்குகள் முதல் அறிவியல் கணக்குகள் வரை போடுமாறு உள்ளது.சாதாரண Calculator போல் நீங்கள் பட்டன்களை தேட தேவையில்லை 5+5 என டைப் செய்தாலே போதும் 10 என விடை தந்துவிடும். மேலும் இதை உங்கள் Blog ல் கூட இணைத்து கொள்ளலாம்.


Photovisi

இத்தளம் உங்களுக்கு பிடித்த புகைப்படங்களை Collage என்னும் பல புகைப்படங்களை ஒரே புகைப்படத்த்ில் கொண்டு வர உதவுகிறது.


audiko

எளிதாக Ringtone வெட்ட மற்றொரு தளம்



RIOT

Digital கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அளவில்(Size) பெரிதாக இருக்கும்.அது போன்ற புகைப்படங்களை அதன் Quality மாறாது சிறிய அளவாக மாற்ற(Resize) இந்த மென்பொருள் உதவுகிறது.


dkmSUDOKU

ஆன்லைனிலேயே sudoku விளையாட சிறந்த தளம்




அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Tuesday, February 16, 2010

ஏன் நிறுத்த வேண்டும்?

நண்பர்களே,
தற்போது புகை பிடிப்பது வாலிப வயதில் ஒரு கட்டாய பழக்கமாக மாறி வருகிறது. நாளுக்கு நாள் புகை பிடிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே தான் வருகிறது.விளையாட்டாக புகை விடுவதாக ஆரம்பிக்கும் பழக்கம் முதலில் நமக்கு அடிமையாக இருக்கிறது பின் போக போக அதற்க்கு அடிமையாக வேண்டிய நிலைமை வந்து விடும்.

பலர் இதன் விளைவு தெரிந்தாலும் புகை பழக்கத்தை விட முடியாமல் இருக்கின்றனர். சிலர் பயத்தால் விட்டு விடுகின்றனர்.புகை பிடிப்பதை அதனால் ஏற்படும் விளைவுகளை காணும் போது பயத்தால் விட்டுவிடுகின்றனர் ஆனால் சில நபர்களுக்கு காலம் கடந்து விடுகிறது.

தினமும் சில நேரங்களில் புகைப்பவர்கள் உதாரணமாக அலுவலக இடைவேளை,சாப்பிட பிறகு,டீ குடிக்கும் போது என பழகுபவர்கள் ஒரு நாள் அந்த நேரங்களில் புகை பிடிக்க முடியாவிட்டாலும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.எனவே ஆரம்பித்திலேயே புகை பிடிப்பதை நிறுத்துவது தான் சரியானது.

whyquit என்ற தளம் இதற்குரிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.புகை பிடித்தால் என்னென்ன நோய்கள் வரும் , எப்படியெல்லாம் விளைவுகள் இருக்கும் என கூறுகிறது.மேலும் எப்படி புகை பழக்கத்தை விடுவது மேலும் நிறுத்தினால் என்னென்ன நன்மைகள் வரும் என்பதை கட்டுகிறது.

நீங்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் கண்டிப்பாக பார்க்க வேண்டிய தளம்.உங்கள் நண்பர்கள் புகை பிடிப்பவர்களாக இருந்தால் அவர்களுக்கு காட்டுங்கள்.வலைதள சுட்டி

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Saturday, February 13, 2010

ஆன்லைனில் பியானோ வாசியுங்கள்

நம்மில் பலருக்கு பியானோ வாசிக்க ஆர்வம் இருக்கலாம்.ஆனால் நிறைய பணம் செலவழித்து அவ்வளவு பெரிய பியானோ வாங்க விரும்பாமல் இருக்கலாம். இதோ ஆன்லைனில் பியானோ வாசிக்கலாம். Virtual Piano என்ற தளம் இதற்க்கு உதவி புரிகிறது.



உங்கள் விசைபலகையை பியானோ Keys போல உபயோகித்து வாசிக்கலாம்.நீங்களே ஒரு இசை கம்போஸ் செய்து கேட்க்கலாம்.இதன் மூலம் நீங்கள் ஒரு பியானோ வாசிக்கும் அனுபவத்தை பெறலாம். இந்த தளத்தில் மற்றவர்கள் கம்போஸ் செய்த இசையையும் வாசித்து பழகலாம்.

மேலும் நாம் வாசித்து பழக அவர்களே சில இசை வாசிக்க உதவி புரிகிறார்கள். சில இசைகளுக்கான keys தருகிறார்கள்.


இந்த இசைதளத்தை உங்கள் தோழர்களுக்கும் முக்கியமாக தோழிகளுக்கும் அறிமுகபடுத்துங்கள்.

வலைதள சுட்டி : http://www.cmagics.com/beta/piano/

இதே போல் மற்றொரு தளம்

நண்பர்களே,

வலைதள சுட்டி : http://www.thevirtualpiano.com/



அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Saturday, February 6, 2010

இது உங்கள் கணிணியை பயமுறுத்தும் மென்பொருள்

நண்பர்களே,
Dr.Windows என்ற பேரை கண்டவுடன் நீங்கள் ஏதோ கணிணியை பாதுகாக்கும் ஒரு மென்பொருள் என நினைக்கலாம். ஆனால் அது தான் இல்லை. இது உங்கள் நண்பர்களை பயமுறுத்தி ஏமாற்றி விளையாட உதவும் ஒரு மென்பொருள்.எப்படி என்று பார்ப்போம்.

இந்த மென்பொருளை நிறுவியவுடன் இந்த மென்பொருள் உங்கள் கணிணியை பாதுகாப்பது போல் தோன்ற வைக்கும். உதாரணமாக கீழே உள்ள படங்களை பார்க்க


"Protection Enabled" ,"Dr.Windows is loaded and protecting this computer" என்று நமது கணிணியை பாதுகாப்பது போல் காட்டும். ஆனால் அது உண்மையில்லை. இந்த மென்பொருளின் வேலையே இது போல பொய்யான,விளையாட்டான அல்லது பயமுறுத்தும் செய்திகளை காட்டுவது தான்.உதாரணமாக கீழே உள்ள படத்தை பார்க்க


மேலே உள்ள Restart என்ற பட்டனை நீங்கள் அழுத்தினாலும் உங்கள் கணிணி Restart ஆகாது. அந்த திரை மட்டுமே Close ஆகும். இது போல் பல பொய்யான பயமுறுத்தும் செய்தியை மட்டுமே காட்டும். இதை உங்கள் கணிணியிலோ அல்லது உங்கள் நண்பர்கள் கணிணியிலோ அவர்களுக்கு தெரியாமல் நிறுவி அவர்களை பயமுறுத்தலாம்.


இதில் எத்தனை நிமிடங்களுக்கு ஒருமுறை இதே போல் செய்திகள் வரவேண்டும் என நீங்கள் அமைத்து கொள்ளலாம். நீங்களே உங்களை நண்பர்களை பயமுறுத்த ஒரு செய்தி உருவாக்கி கொள்ளலாம். உங்கள் கணிணியில் மென்பொருள் நிறுவிய இடத்திற்கு சென்று C:\Program Files\DrWindows\Dialogs என்ற Folder ல் உள்ள .cfg என்று கோப்புகளை Edit செய்து நீங்களே ஒரு செய்தி உருவாக்கி கொள்ளலாம் அல்லது நீங்களே கீழே உள்ளது போல் ஒரு கோப்பு உருவாக்கி கொள்ளலாம். உதாரணமாக

Sample Dialog Coffee.cfg:

Title: Fatal Error
Text: Low level of coffee or wrong kind of coffee detected.\nTake a break and refill your cup.
Bitmap: images\cup.ico
Wave: sounds\Windows XP Battery Low.wav
Button: Oh, yes, thanks
Button: Remind me
Button: More Info


மேலும் இதை உங்கள் நண்பர் கண்டுபுடிக்காமல் இருக்க Options வசதியை மறைத்து கொள்ளலாம். வேண்டுமென்றால் Ctrl + Right Mouse Key அழுத்தி வரவழைத்து கொள்ளலாம்.



இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


பதிவுகளை இமெயிலில் பெற உங்கள் ஈமெயில் முகவரியை பதிவு செய்யுங்கள்.


Friday, February 5, 2010

பயன்படுத்தி பாருங்கள் - 3

நண்பர்களே,
நாம் அனைவரும் Gtalk,Yahoo Messenger அல்லது Msn Messenger இவற்றில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக பயன்படுத்துவோம். ஆனால் அலுவலகங்களில் இதை பயன்படுத்த தடை விதித்துருப்பார்கள். மேலும் ஜிமெயில்,யாஹூ ஆகிய வலைத்தளங்களையும் பயன்படுத்த முடியாவிடில் வெப் மெசஞ்சர்ஸ் பயன்படுத்தலாம். இந்த வகை வலைத்தளங்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் மெசஞ்சர் இல்லாமல் பயன்படுத்த உதவுகின்றன.

பெரும்பாலானவர்கள் Meebo என்பதை பயன்படுத்துவார்கள். ஆனால் அலுவலகங்களில் இதையும் இப்போது தடை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இவ்வசதியைதரும் Meebo மற்றும் வேறு தளங்கள் பற்றி இங்கு பார்க்கலாம்.

Meebo

I Love IM

Kool IM

ebuddy


MessengerFX



அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Wednesday, February 3, 2010

CamStudio - உங்கள் கணிணி நடவடிக்கைகளை வீடியோவாக பதிவு செய்ய



வணக்கம் வலைப்பூ நண்பர்களே,
கணிணியில் Screenshot எடுப்பதற்கு பல மென்பொருள்கள் உண்டு. மேலும் கணினியில் உள்ள Print Screen வசதி மூலமும் Screenshot எடுக்கலாம்.ஆனால் இதன் மூலம் உங்கள் கணிணியில் உங்கள் நடவடிக்கைகளை வீடியோவாக மாற்ற இயலாது.புகைப்படம் மட்டுமே எடுக்க முடியும்.

நீங்கள் ஏதாவது உங்கள் நடவடிக்கைகளை உதாரணமாக நீங்கள் ஒரு மென்பொருள் நிறுவுவதை முழுமையாக ஒரு வீடியோவாக பதிவு செய்ய விரும்பினால் இந்த மென்பொருளை பயன்படுத்தலாம்.இதோடு உங்கள் குரலையும் அதாவது வீடியோவாக பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதையும் பதிவு செய்யலாம்.

இந்த மென்பொருளை நிறுவிய பின் அதில் உள்ள Record சிவப்பு பட்டனை அழுத்தினால் அதிலிருந்து உங்கள் நடவடிக்கைகளை பதிவு செய்ய ஆரம்பித்து விடும். உங்கள் தேவையான போது Stop பட்டனை அழுத்தி நிறுத்தி விட்டு வீடியோவாக Save செய்து கொள்ளலாம். நடவடிக்கைகளை பதிவு செய்யும் போது நீங்கள் பேசுவதை வேண்டுமானால் பதிவு செய்து கொள்ளலாம். தேவையில்லையென்றால் வெறும் வீடியோ மட்டும் கூட பதிவு செய்து கொள்ளலாம்.

இதில் பல வசதிகள் உண்டு. நீங்கள் உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதி அல்லது முழு திரை வடிவில் கூட Record செய்யலாம்.





இந்த மென்பொருள் ஒரு இலவச மென்பொருள்,பயன்படுத்தி பாருங்கள்.இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்