Monday, August 31, 2009

சிறந்த செல்போன் Games,Application,Themes,Ringtones டவுன்லோட் செய்ய

உங்கள் செல்போனில் வித விதமான Games,Ringtones,Application,Themes வேண்டுமா? இவையெல்லாம் டவுன்லோட் செய்ய நிறைய தளங்கள் உள்ளன. மேலும் நீங்களாகவே உங்கள் செல்போனிற்கு Ringtone,Theme உருவாக்க வேண்டுமா ?. அவற்றில் எனக்கு தெரிந்த சில சிறந்த தளங்கள் பற்றி இங்கே கூறுகிறேன்.


http://www.zedge.net/

இத்தளத்தில் உங்களுக்கென்று தனி User Account உருவாக்கி கொண்டு நீங்கள் உலவலாம் . இத்தளம் இலவசமாக Games,Application,Themes,Ringtones வழங்குகிறது .
இத்தளத்தில் அனைத்து வகையான செல்போனிற்கும் பொருந்தும் வகையில் Themes எண்ணற்ற வகையில் உள்ளன . உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம் .

நீங்கள் Login செய்த பின் உங்கள் செல்போன் மாடலை கீழ்க்கண்ட முறையில் தேர்வு செய்தால் போதும் உங்கள் செல்போனிற்கு ஏற்றவாறு Games,Application,Themes,Ringtones மட்டுமே டவுன்லோட் செய்யமாறு காண்பிக்கப்படும் .

மேலும் இத்தளத்தில் ஒரு சிறப்பம்சம் உண்டு . நீங்களே உங்கள் ரசனைக்கு ஏற்றவாறு Themes,Ringtones உருவாக்கி கொள்ளலாம் . அதற்கும் இத்தளத்தில் வசதி உள்ளது .









www.ipmart-forum.com/

இத்தளம் ஒரு Forum வகையை சேர்ந்தது . இத்தளத்திலும் உங்களுக்கென்று தனி User Account உருவாக்கி கொள்ள வேண்டும் .
இத்தளத்தில் Games,Applications அனைத்தும் அனைத்து வகையான செல்போன்களுக்கும் கிடைக்கிறது . புதியதாக அறிமுகமாகும் Games உடனடியாக இங்குள்ள Users மூலமாக ஏற்றப்பட்டு நமக்கு கிடைக்கிறது . Mobile Games வெளிஇடும் பிரபலமான கம்பெனிகளின் Games இங்கே கிடைக்கிறது .

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் அல்லது Tamil10ல் அல்லது உலவு ல் பதிவு இடுங்கள் .

அன்புடன் ,
லக்கி லிமட்

Friday, August 28, 2009

Rapidshare இல் இருந்து டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்கள்


Rapidshare தளத்தை அறியாதவர்கள் தற்போது இருக்க முடியாது. Files சேகரித்து வைக்கும் பிரபலமான தளமாக செயல்பட்டுவருகிறது.மேலும் Files டவுன்லோட் செய்ய உதவுகிறது.இதில் Files டவுன்லோட் செய்ய இரு முறைகள் உள்ளன.

ஒன்று பணம் செலுத்தி Premium உறுப்பினராக சேர்ந்து Files டவுன்லோட் செய்யலாம் . மற்றொன்று உறுப்பினராக சேராமல் இலவசமாக டவுன்லோட் செய்யலாம்.இரண்டாவது முறையில் பல கட்டுப்பாடுகள் உள்ளன.ஒரு முறை டவுன்லோட் செய்த பிறகு மீண்டும் அடுத்த File டவுன்லோட் செய்ய முடியாது . சிறிது நேரம்கழித்தே செய்ய முடியும் . மேலும் குறிப்பிட்ட அளவு Files மட்டுமே ஒரு நாளில் டவுன்லோட் செய்ய முடியும் .

ஒரு வீடியோ டவுன்லோட் செய்ய வேண்டுமானால் அது ஒன்றுக்கு மேற்பட்ட Files ஆக பிரித்து Rapidshare தளத்தில் Upload செய்ய பட்டிருக்கும்.எனவே அதை ஒன்றன் பின் ஒன்றாக டவுன்லோட் செய்ய வேண்டும்.ஒன்றை டவுன்லோட் செய்த பின் சிறிது நேரம் கழித்து அடுத்த ஒன்றை டவுன்லோட் செய்ய வேண்டும்.இதை ஒன்றன் பின் ஒன்றாக நாம் தான் செய்ய வேண்டும். இது சில நேரம் நமக்கு அலுப்பை உண்டு பண்ணும்.இதற்காகவே சில மென்பொருள்கள் உள்ளன.அவற்றில் சிறந்த இரண்டு மென்பொருள்களை பற்றி இங்கே காணலாம்.


jdownloader


Rapidshare மற்றும் Megaupload ஆகிய இரண்டு தளங்களில் இருந்து Files டவுன்லோட் செய்ய jDownloader உதவுகிறது.இது Java பயன்படுத்தி எழுதப்பட்ட ஒரு மென்பொருள்.இதன் மூலம் நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டிய Files சுட்டிகளை இதில் கொடுத்து விட்டால் அதுவே அனைத்து Files உம் டவுன்லோட் செய்து தந்து விடும்.ஒவ்வொரு File டவுன்லோட் இடையே எவ்வளவு நேரம் காத்திருந்து டவுன்லோட் செய்ய வேண்டும் என்பதை நாம் தெரிவித்தால் போதும் அதுவே குறிப்பிட்ட இடைவெளியில் Files செய்து கொடுத்து விடும்.

நீங்கள் ஒரு வீடியோ டவுன்லோட் செய்யவேண்டுமானால் அனைத்து Links உம் இதில் கொடுத்து விட்டு சென்று விடலாம். ஒவ்வொரு முறையும் ஒரு டவுன்லோட் முடிந்த பின் கொடுக்க தேவையில்லை.இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க.

RAD (Rapidshare Auto Downloader)



jDownloader போலவே இன்னொரு மென்பொருள் RAD.இதுவும் Rapidshare தளத்தில் இருந்து Files டவுன்லோட் செய்ய உதவுகிறது.jDownloader போலவே அனைத்து வசதிகளும் இதிலும் உள்ளது.இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


Lovingly,
Lucky Limat

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் அல்லது Tamil10ல் பதிவு இடுங்கள் .

Wednesday, August 26, 2009

Proxy Websites - அலுவலகத்தில் தடைசெய்யப்பட்ட வலைத்தளங்களை பார்க்க


தற்போது பெரும்பான்மையான அலுவலகங்களில் Orkut போன்ற வலை தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன . தற்போது Orkut வலைத்தளம் மிக பிரபலம். அதை போலவே அனைத்து அலுவலகங்களிலும் தடையும் செய்யப்பட்டுள்ளது . Orkut ரசிகர்கள் நமது இந்தியாவில் மிகவும் அதிகம். இதற்க்கு சில வலைத்தளங்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றை Anonymous Proxy Websites என அழைக்கப்படுகின்றன. எனக்கு தெரிந்த சில Proxy Websites சிலவற்றை இங்கே கூறுகின்றேன்.

இந்த வலைதளங்களில் சென்று நீங்கள் பார்க்க வேண்டிய வலை தள முகவரியை டைப் செய்தால் ஓகே செய்தால் தடைசெய்யப்பட்ட வலைத்தளத்தை பார்க்கலாம். ஆனால் இந்த Anonymous Proxy Websites ஐ உங்கள் அலுவலகங்களில் தடை செய்யபட்டிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது.

மிகவும் பாதுகாப்பான பர்சனல் Mail வைத்திருக்கும் GMail அல்லது மற்ற மெயில் வலைத்தளங்களை இதன் மூலம் பார்க்க வேண்டாம் என பலரால் கூறப்படுகிறது. எனவே உங்களுக்கு பார்க்க வேண்டிய மிகவும் முக்கியமில்லாத தடைசெய்யப்பட்ட வலைத்தளங்களை மட்டும் பார்க்க உபயோகித்து கொள்ளவும்.

வலை தள சுட்டிகள் :

http://kproxy.com/


http://www.cooltunnel.com/



Lovingly,
Lucky Limat

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் பதிவு இடுங்கள் .

Thursday, August 20, 2009

பிரபல Magazineல் உங்கள் Photo

உங்கள் Photo பிரபலமாக வந்துகொண்டிருக்கும் Magazine அட்டைப்படத்தில் வர ஆசையா? இதோ அதற்கான ஒரு வலைத்தளம்.
இந்த தளத்திற்கு சென்றால் பல பிரபல Magazine அட்டை படங்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அவற்றில் ஒன்றை தேர்வு செய்து பின் உங்கள் புகைப்படத்தை upload செய்ய வேண்டும்.
Upload செய்த பின் கீழ்க்கண்டWindow ல் உங்கள் புகைப்படம் இடது புறம் தோன்றும். வலது புறம ்பல அட்டை படங்கள் இருக்கும் . வலது புறத்தில் உள்ள உங்களுக்கு பிடித்த படத்தை தேர்வு செய்தால் இடது புறம் உங்கள் புகைப்படம் அந்த Magazine அட்டை படத்தில் இருப்பது போல்தோன்றும்.


அந்த அட்டை படத்திற்கு ஏற்றவாறு உங்கள் புகைப்படத்தை Adjust செய்து கொள்ள கீழே Options கொடுக்கப்பட்டிருக்கும்.
எல்லாம் சரி செய்த பின் Save&Continue Click செய்தால் முழு அட்டைப்படம் உங்கள் புகைப்படத்துடன்கிடைக்கும் .பின் அந்த புகைப்படத்தின் மேல் Right Click செய்து Save Image As தேர்வு செய்து உங்கள் Computer ல் சேமித்து உங்கள் நண்பர்களிடம் காண்பித்து அல்லது உங்களது நண்பர்களுடைய புகைப்படத்தைஇதே போல் அமைத்து அவர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

தள முகவரி : http://www.magmypic.com/

Lovingly,
Lucky Limat

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் பதிவு இடுங்கள் .

Monday, August 17, 2009

Audacity - பிடித்த Ringtone Cut செய்ய உதவும் மென்பொருள்

நீங்கள் செல்போனில் அடிக்கடி பிடித்த Ringtone மற்றுபவரா ? இதோ உங்களுக்கான ஒரு உபயோகமான மென்பொருள் .Audacity - இந்த மென்பொருள் உங்களுக்கு பிடித்த பாடலில் இருந்து பிடித்த இசை , பாடல் வரிகள் ஆகியவற்றை Cut செய்து உங்கள் செல்போனில் Ringtone ஆகா வைத்து கொள்ள உதவுகிறது. இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் .

மேலும் Cut செய்த பாடல்களை MP3 ஆகா மாற்றி Ringtone ஆகா உபயோகித்து கொள்ளலாம் . ஆனால் MP3 ஆகா மாற்ற மற்றொரு Plugin ஒன்றை இதனுடன் இணைத்து செயல்படுத்த வேண்டும். இதனை பற்றி காண்போம் .

Cut செய்த பாடல்களை MP3 ஆகா மாற்ற libmp3lame என்ற Plugin தேவைப்படும். இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் . டவுன்லோட் செய்தால் libmp3lame-win-3.98.2.zip என்ற கோப்பு கிடைக்கும். அதை Winzip உபயோகப்படுத்தி Extract செய்தால் , lame_enc.dll என்ற கோப்பு கிடைக்கும். இதை உங்கள் கம்ப்யூட்டரில் எங்கு வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். உங்கள் audacity மென்பொருள் Install ஆன Folder இல் வைத்து கொண்டால் இலகுவாக இருக்கும் .

பின் முதல் முறை பாடலை Cut செய்த பின் File -> Export Selection என்பதை தேர்வு செய்க.
முதன் முறை MP3 ஆகா மற்றும் போது , lame_enc.dll என்ற கோப்பு இருக்கும் இடத்தை தேர்வு செய்ய வேண்டும். அவ்வளவே ! இதை ஒரே ஒரு முறை தேர்வு செய்தால் போதும்.நீங்கள் விரும்பிய இசையை Ringtone ஆகா உபயோகித்து மகிழலாம்.
மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க









Lovingly,
Lucky Limat

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் பதிவு இடுங்கள் .