Saturday, April 30, 2011

ScreenShotக்கு மற்றொரு எளிய சிறந்த மென்பொருள்

ஏற்கனவே Screen Shots எடுக்க உதவும் மென்பொருள் பற்றி அண்மையில் இந்த பதிவை Screenshot எடுக்க சிறந்த மென்பொருள் எழுதினேன். ஏற்கனவே எழுதிய அந்த மென்பொருள் கடினமாக இருக்கிறது என்றால் இந்த மென்பொருளை பயன்படுத்தி பாருங்கள்.மிக எளிமையாக உள்ளது. இந்த மென்பொருளிலும் முழுத்திரை,குறிப்பிட்ட திரை,திரையில் குறிப்பிட்ட பகுதி மற்றும் மௌஸ் தெரிய வேண்டுமானால் அதனுடனும் எடுக்க முடியும்.

நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை வலது கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.


Sunday, April 17, 2011

மைக்ரோசாப்ட் வைரஸ் சேஃப்டி ஸ்கேனர்


மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏற்கனவே Microsoft Security Essentials என்னும் ஆண்டி வைரஸ் மென்பொருளை தந்துள்ளது. இது மற்ற ஆண்டி வைரஸ் மென்பொருள்களை போலவே உங்கள் கணிணியில் நிறுவி இயக்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனமே தந்தாலும் பலர் பிற இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்களையே நிறுவி பயன்படுத்துகின்றனர்.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தரும் மற்றொரு ஆண்டி வைரஸ் மென்பொருள் Microsoft Safety Scanner. இந்த மென்பொருளை நீங்கள் நிறுவ தேவை இல்லை, டவுன்லோட் செய்து அப்படியே கிளிக் செய்து இயக்க கூடிய போர்டபில்(Portable) மென்பொருள். உங்கள் கணிணியில் ஆண்டி வைரஸ் இருந்தும் வைரஸ் வந்தாலோ அல்லது இருக்கலாம் என நீங்கள் நினைத்தாலோ இந்த மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கணிணியை ஸ்கேன் செய்து வைரசை நீக்கலாம்.

இந்த மென்பொருள் 70MB அளவு கொண்டது. தற்போது வரை உள்ள அறியப்பட்ட அனைத்து வைரஸ் பற்றிய விபரங்களையும், அதை நீக்கவும் செய்கிறது. இதை நிறுவிய பின் தோன்றும் திரையில் என்னமுறையில் ஸ்கேன் செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்தாலே போதும் , ஸ்கேன் செய்து வைரஸ்களை நீக்கி விடும்.




ஆனால் இந்த மென்பொருளில் உள்ள குறை என்னவென்றால் நீங்கள் இதனை அப்டேட் (update)செய்ய இயலாது.மேலும் இதனை டவுன்லோட் செய்த 10 நாட்களுக்கு மேல் இயங்காது.மீண்டும் ஒருமுறை அண்மைய வைரஸ் பற்றிய விபரங்கள் கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும். அதாவது மீண்டும் 70mb கொண்ட பதிப்பை டவுன்லோட் செய்ய வேண்டும்.

ஆனால் இதனால் என்ன பயன் என்றால் உங்கள் கணிணியில் எதிர்பாராத விதமாக வைரஸ் தாக்கி உங்கள் ஆண்டி வைரஸ் இயங்காமல் போனாலோ, இந்த மென்பொருளை உடனே டவுன்லோட் செய்து இயக்கி வைரஸ்களை நீக்கலாம். இது போர்ட்டபிள் மென்பொருள் என்பதால் வைரஸ் எளிதில் தாக்காது. இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்யலாம்.

Browse All - Lucky Limat | Download Microsoft Safety Scanner

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Friday, March 18, 2011

அழகான டெஸ்க்டாப் கடிகாரம்

பலருக்கு விண்டோஸ் கணிணியின் டெஸ்க்டாப் பகுதியை அழகாக வைத்து கொள்ள விரும்புவர். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 டெஸ்க்டாப் பகுதிகளை பல வழிகளில் அழகு படுத்தலாம். மேலும் டெஸ்க்டாப்பில் அழகான கடிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும். பல கடிகார மென்பொருள்கள் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களுக்கு உள்ளன. அவற்றில் சிறிய அழகான கடிகாரத்தை பார்ப்போம்.



அழகாக எளிய வடிவில் தேதி , நாள் மற்றும் நேரத்தை காட்டுகிறது.மேலும் உங்களுக்கு தேவையான தோற்றத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.



விரும்பும் இடத்தில் வைத்து கொள்ளும் வசதியும் உள்ளது.



டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

Horloger - Advanced clock for windows7 and windows Vista


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Sunday, March 13, 2011

Screenshot எடுக்க சிறந்த மென்பொருள்

Screenshot எடுப்பதற்கு விண்டோஸில் Print Screen வசதி இருந்தாலும் அதில் பல வசதிகள் இருப்பதில்லை.உதாரணமாக உங்கள் கணிணி திரையில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் தனியாக எடுக்க முடியாது. முழு திரையையும் எடுத்து பின் அதில் இருந்து வெட்டி எடுக்க வேண்டும். மேலும் நீங்கள் உங்கள் மௌஸ் உடன் எடுக்க விரும்பினால் முடியாது.

இதனாலேயே தனி மென்பொருள்கள் உதவியை நாட வேண்டியுள்ளது. பல இலவச மென்பொருள்கள் உள்ளன. பல வசதிகள் சில மென்பொருள்களில் இருந்தாலும் அவைகள் எளிதாக இருப்பதில்லை. Shotty என்ற இந்த மென்பொருள் எளிதாக Screenshot எடுக்க உதவுகிறது.



இதனை இயக்குவது எளிது.நிறுவிய பின் Trayயில் உள்ள ஐகானை கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட திரையில் எந்தமாதிரி Screenshot எடுக்கவேண்டும் என்பதை தேர்வு செய்தால் அதன் போல் Screenshot எடுக்க பட்டு விடும்.



Ctrl + Prt Scr கிளிக் செய்தும் எடுக்கலாம்.வேண்டுமானால் நம் வசதிக்கு ஏற்ப பட்டனை மாற்றி கொள்ளலாம்.

Screen என்பதை கிளிக் செய்தால் முழு திரையும் , Region என்பதை கிளிக் செய்தால் திரையில் குறிப்பிட்ட பகுதியையும் , LQ Window என்பதை கிளிக் செய்தால் சற்று குறைந்த குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும், HQ Window என்பதை கிளிக் செய்தால் நல்ல குவாலிடியில் குறிப்பிட்ட திரையையும் Screenshot எடுக்கலாம்.

மேலும் பல திரைகள் இருப்பின் எந்த திரையை எடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்ளலாம்.



எடுக்கப்பட்ட Screenshot இல் மேலும் பல திருத்தங்களை அல்லது மாற்றங்களையும் செய்ய வசதி தருகிறது.



இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

Shotty - Take high quality screenshots


அன்புடன்,
லக்கி லிமட்

திரைபடங்களுக்கு சப்டைட்டில் தேட

இணையத்தில் நாம் பல திரைப்படங்களை டவுன்லோட் செய்கிறோம். அவை ஆங்கில படங்களாகவோ அல்லது பிற மொழி படங்களாகவோ இருக்கலாம். ஆங்கில படங்களை சப்டைட்டிலோடு தற்போது அதிகமானோர் பார்க்கின்றனர். மேலும் பிற மொழி படங்களான கொரிய, ஸ்பானிஷ் மொழி படங்களை சப்டைட்டிலோடு பார்த்தால் எளிதாக புரிந்து பார்க்க முடியும்.

திரைபடங்களுக்கு சப்டைட்டில் தரும் பல தளங்கள் உள்ளன. அவற்றில் பிரபலமானவை Opensubtitle,Subscene. இவை தவிர பல தளங்கள் உள்ளன. அனைத்து படங்களின் சப்டைட்டில்களும் ஒரே தளத்தில் கிடைப்பதில்லை. எனவே அவற்றை தேட வேண்டியதிருக்கும். TinySubs என்ற வலைத்தளம் இதனை எளிதாக்குகிறது.



31 சப்டைட்டில் தரும் வலைதளங்களில் இருந்து சப்டைட்டில் தேட மற்றும் டவுன்லோட் செய்ய உதவுகிறது. மேலும் குறிப்பிட்ட ஒரு தளத்தில் தேடவும் உதவுகிறது.



மேலும் உங்கள் நெருப்புநரி மற்றும் குரோம் உலவிகளில் இதனை நீட்சியாக நிறுவி எளிதாக பயன்படுத்தலாம்.

வலைதளத்திற்கு செல்ல TinySubs Subtitle Search Engine

குரோம் நீட்சியாக நிறுவ Chrome Extension

நெருப்புநரி நீட்சியாக நிறுவ Firefox Addon


அன்புடன்,
லக்கி லிமட்

Monday, February 21, 2011

வீடியோ கேம் - பழி வாங்கும் பறவைகள்



ஐபோன்(iPhone) விளையாட்டாக அறிமுகபடுத்தப்பட்ட இந்த வீடியோ கேம் ஐபோன் கேம்களிலேயே கொடி கட்டி பறந்தது. ஐபோன் கேம் டவுன்லோட் தளமான ஐடியூன்ஸ்(iTunes) தளத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட கேம்களில் ஒன்று. தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் விளையாட அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.

இந்த விளையாட்டின் கதை பழிவாங்கல் தான். வில்லன்களான பன்றிகள் பறவைகளின் முட்டைகளை களவாடி சென்று விட கோபமான பறவைகள் பன்றிகளை பழிவாங்குகின்றன.பன்றிகள் இரும்பு,கல் மற்றும் ஐஸ் ஆகிவற்றில் ஆன கட்டிடங்களில் ஒளிந்து கொள்ள பறவைகள் தங்களை கவன் வில்லின் மூலம் ஏறிய செய்து கட்டிடங்களை இடித்து பன்றிகளை கொல்கின்றன.






முதலில் எளிதாக உடையும் கட்டிடங்கள் பின் அடுத்தடுத்த லெவல் செல்ல செல்ல நமது திறமைக்கு சவால் விடுகின்றன. எங்கே இடித்தால் கட்டிடம் உடையும்,எந்த பறவையை கொண்டு உடைத்தால் உடையும் என யோசித்து விளையாட வேண்டியது உள்ளது.கட்டிடத்தை உடைக்க ஆறு விதமான பறவைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான இயல்புகளை கொண்டுள்ளன.







சிவப்பு பறவையிடம் சிறப்பான இயல்பு எதுவுமில்லை நேரே சென்று இலக்கை தாக்கும்.

நீல நிற பறவை பாய்ந்தவுடன் மீண்டும் ஒரு கிளிக் செய்தால் மூன்றாக சென்று தாக்கும்.இது ஐஸ் கட்டிகளை உடைக்க வல்லது.

மஞ்சள் பறவை மரகட்டைகளை உடைக்க வல்லது.பாய்ந்தவுடன் மீண்டும் ஒரு கிளிக் செய்தால் படு வேகமாக செல்லும்.தொலைதூர இலக்கை தாக்கவும் சிறந்தது.

கறுப்பு பறவை கற்களை உடைக்க வல்லது.இலக்கை அடைந்து வெடிக்கும் இயல்பு உடையது.

வெள்ளை பறவை பாய்ந்தவுடன் மீண்டும் ஒரு கிளிக் செய்தால் முட்டை இட்டு வெடிக்க செய்யும்.

பச்சை பறவை பூமராங் இயல்பு கொண்டது. பூமராங் போல் திரும்பி வந்து தாக்கும்.



இந்த விளையாட்டு அனைவரையும் கவரும். மேலும் இந்த விளையாட்டு தனியாக கிராபிக்ஸ் கார்டு எதுவும் தேவையில்லை. ஆனால் உங்களது Display driver இதற்க்கு உடன்பட வேண்டும் இல்லாவிடில் இயங்காது. எனது XP SP2 இல் இயங்கவில்லை. ஆனால் Windows 7 இயங்குதளத்தில் SlimDriver கொண்டு Display driver அப்டேட் செய்த பின் இயங்குகிறது. மற்றொரு விஷயம் இது இலவசம் கிடையாது. ஆனால் டோர்ரன்ட் தேடினால் கிடைக்கிறது.மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க.

Rovio - Angry Birds


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, February 17, 2011

டிரைவர்களை நிறுவ,அப்டேட் செய்ய இலவச மென்பொருள்

உங்கள் கணிணியில் ஒலி வரவில்லையா ,சில கேம்களை விளையாட முடியவில்லையா இவைகளுக்கு காரணம் தேவையான கணிணி டிரைவர்கள்(Drivers) உங்கள் கணிணியில் இல்லாமல் இருக்கலாம் அல்லது பழுதடைந்து போயிருக்கலாம்.புதிதாக விண்டோஸ் நிறுவிய பின்னர் சில நேரங்களில் டிரைவர்கள் இல்லாமல் போகலாம். இவற்றை உங்கள் கணிணிக்கு ஏற்ற டிரைவர்களை கண்டு பிடித்து நிறுவுவது கடினம். slimdriver என்ற இந்த மென்பொருள் இந்த வேலையை எளிதாக்குகிறது.

எனது கணிணியில் ஒரு கேம் விளையாட முடியவில்லை பல நாளாக ஏதோ display டிரைவர் இல்லை என வந்தது.எந்த டிரைவர் என அறிய முடியவில்லை.மேலும் கணிணியில் ஒலி வந்தது ஆனால் யாருடனாவது head phone இல் chatல் பேசும் போது அதில் ஒலி வரவில்லை ஆனால் speakerல் வந்தது.இந்த இரு பிரச்சனைகளையும் இந்த slimdriver மூலம் எளிதாக தீர்க்க முடிந்தது. இந்த மென்பொருளின் இலவச பதிப்பே போதுமானது.




இந்த மென்பொருளை நிறுவிய பின் start scan என்பதை கிளிக் செய்தால் உங்கள் கணிணியில் இல்லாத அல்லது அப்டேட் செய்ய வேண்டிய டிரைவர்களை காட்டும்.அதில் உங்களுக்கு தேவையான டிரைவர்களை download update என்பதை கிளிக் செய்து நிறுவி கொள்ளவும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க
DriverUpdate.net -Update Drivers for Windows 7, XP, and Vista

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Friday, February 11, 2011

கூகுளின் தமிழ் விசைபலகை - மீள்பதிவு

கூகிள் பிற மொழிகளுக்கான விசைபலகை மென்பொருளை தருகிறது. இதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமலே இனி நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம் . இதன் பெயர் Google IME. இது தனியாக வேறு எங்கும் செல்லாமல் எங்கு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அங்கு செய்யலாம். உதாரணமாக நீங்கள் Notepadல் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமானால் செய்யலாம் , வலைப்பூவில் பதிவு போடும் போதும் பயன்படுத்தலாம் .



இதை இங்கிருந்து( Download Google IME ) டவுன்லோட் செய்து கொள்க .


டவுன்லோட் செய்த பின் உங்கள் கணிணியில் நிறுவவும் . நிறுவிய பின் WindowsXPல் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றுக .

உங்கள் கணிணியில் Task Bar ல் Right Click செய்து Language Bar என்னும் வசதியை தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதி உங்களுக்கு வரவில்லையென்றால் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றுக.

1. முதலில் Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab செல்லவும் .
2. அதில் System configuration என்ற பட்டையில் Turn off advanced text services என்ற வசதி டிக் செய்யப்பட்டு இருந்தால் அதை எடுத்து விடுக .

இதற்க்கு பின் கணிணியை Restart செய்ய வேண்டியிருந்தால் செய்க .

3. பின் Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Settings Tab சென்று
4. Language Bar என்பதை கிளிக் செய்க



5. Show the Language bar on the desktop என்பதை தேர்வு செய்து Ok செய்க

இதற்க்கு பின் உங்கள் Desktopல் கீழே உள்ள Icon தோன்றி இருக்கும் . அதை கிளிக் செய்க
அதில் Tamil வசதியை தேர்வு செய்து கொள்க . தேர்வு செய்த பின் தமிழ் விசைபலகை உங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுவிடும் . இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு
செய்யலாம் .





தமிழில் தட்டச்சு செய்யும் போது ஆங்கிலத்தில் அடிக்க Ctrl + G அழுத்தினால் ஆங்கிலத்திலும் மீண்டும் அழுத்தினால் தமிழிலும் தட்டச்சு செய்யலாம் .

WindowsXP தவிர Vista/Windows 7 பயன்படுத்துபவர்கள் மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்







Tuesday, February 8, 2011

புகைபடத்தில் வாட்டர்மார்க் சேர்க்க இலவச மென்பொருள்

பிளாக்கர்களுக்கான முக்கியமான ஒன்று புகைப்படத்தில் வாட்டர்மார்க் சேர்ப்பது.இதன் மூலம் உங்கள் பதிவை மற்றவர்கள் முழுவதுமாக திருடுவதை தவிர்க்கலாம். மேலும் உங்கள் வலைபூவின் முகவரியை வாட்டர்மார்க் ஆக சேர்க்கலாம்.Bytescout Watermarking என்ற இலவச மென்பொருள் எளிதாக வாட்டர்மார்க் சேர்க்க உதவுகிறது.கீழே வாட்டர்மார்க் சேர்த்த புகைப்படத்தை பார்க்கலாம்.



இது போல் உங்கள் உங்கள் புகைப்படத்தில் கீழேயோ ,மேலேயோ , நடுவிலோ என பல வழிகளில் வாட்டர்மார்க் சேர்க்கலாம். இதற்கு முதலில் மென்பொருளை திறந்து Add files என்பதை கிளிக் செய்து புகைப்படங்களை சேர்த்து கொள்க. ஒரே சமயத்தில் பல புகைப்படங்களுக்கு வாட்டர்மார்க் சேர்க்கலாம்.

BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking

உங்களுக்கு தேவையான எழுத்துருவையும்(font),கலரையும் தேர்வு செய்து கொள்ளலாம்.மேலும் preview கிளிக் செய்து மாதிரி பார்த்து கொள்ளலாம்.

BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking

கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்து மென்பொருளை டவுன்லோட் செய்க.

BrowseAll - Lucky Limat | Download Bytescout Watermarking freeware


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,லக்கி லிமட்


Saturday, February 5, 2011

எளிய இலவச மென்பொருள் - கோப்புகளை உலவ

Explorer ++ எளிதாக, விரைவாக கோப்புகளை உலவ என்ற பதிவில் கோப்புகளை, போல்டர்களை எளிதாக உலவ ,பார்க்க உதவும் மென்பொருள் பற்றி பதிவிட்டுள்ளேன். இந்த மென்பொருள் போலவே எளிதான 646kb அளவே உள்ள இன்ஸ்டால் செய்ய அவசியமில்லாத போர்டபிள் மென்பொருளான Q Dir கோப்புகளை உலவ நன்றாக உள்ளது.

இதில் நான்கு,மூன்று போன்ற பாகங்களாக கோப்புகளை உலவலாம்.கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாகி பார்க்க.

BrowseAll - Lucky Limat

மேலும் பல வழிகளில் பார்க்க வசதியுள்ளது.மேலே உள்ள படத்தில் வட்டம் போட்டு காட்டிஉள்ள பேனல்களை கிளிக் செய்து வேண்டும் வடிவில் மாற்றி கொள்ளலாம்.

BrowseAll - Lucky Limat

இந்த மென்பொருளின் போர்டபிள் டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க

Download Quad Explorer for Windows

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, February 3, 2011

அழித்த,பழுதடைந்த சிடி,டிவிடி,வன்தட்டுகளிலிருந்து கோப்புகளை மீட்க இலவச மென்பொருள்

சில நேரங்களில் உங்கள் சிடி,டிவிடிகள் பழுதடைந்து போகலாம் அல்லது உங்கள் வன்தட்டு பழுதடைந்து போகலாம் அல்லது நீங்கள் அழித்த கோப்புகள் மீண்டும் உங்களுக்கு தேவை ஏற்படலாம்.இதனால் நீங்கள் வைத்திருந்த புகைபடங்களையோ , கோப்புகளையோ இழக்க நேரிடலாம்.MiniTool Power Data Recovery என்ற இலவச மென்பொருள் உங்கள் கோப்புகளை மீட்க உதவுகிறது.இதனை பயன்படுத்துவதும் எளிது.

MiniTool Power Data Recovery

உங்களுக்கு தேவையான கோப்பு மீட்பு வசதியை கிளிக் செய்து நுழையவும்.பின் மீட்க வேண்டிய கோப்பு இருந்த வன்தட்டுகளையே,சிடி,டிவிடிகளையோ தேர்வு செய்க.பின் recover என்பதை கிளிக் செய்க

MiniTool Power Data Recovery

பின்னர் காட்டும் கோப்புகளில் தேவையானவற்றை தேர்வு செய்து சேமித்து கொள்க.

MiniTool Power Data Recovery

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை பயன்படுத்துக

Download MiniTool Power Data Recovery

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Tuesday, February 1, 2011

வீடியோவிலிருந்து ஆடியோவை பிரிக்க

நீங்கள் உங்கள் கணிணியில் பல திரைப்படங்களும் , மற்ற பல வீடியோகளும் வைத்திருப்பீர்கள். திரைப்படங்களில் இருந்தோ அல்லது மற்ற வீடியோகளில் இருந்தோ உங்களுக்கு குறிப்பிட்ட அல்லது முழு ஆடியோவை தனியே பிரிக்க நினைக்கலாம். மேலும் சில ஆடியோகளை உங்கள் போனில் ரிங்டோனாக கூட வைக்க நினைக்கலாம். இதற்கு பயன்படும் மென்பொருள் பற்றி பாப்போம்.

AoA Audio Extractor என்ற மென்பொருள் இந்த வசதியை உங்களுக்கு வழங்குகிறது.இந்த மென்பொருளில் இலவச பதிப்பும் மற்றும் மேலும் சில வசதிகளை கொண்ட இலவசமில்லாத பதிப்பும் உள்ளது. நமக்கு இலவச பதிப்பே போதுமானது.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து நிறுவிய பின் இயக்கினால் தோன்றும் திரையில் AoA Audio Extractor என்பதை தேர்வு செய்க.
AoA Audio Extractor: Extract Audio from Video

தேர்வு செய்து நுழைந்த பின் தோன்றும் திரையில் உங்கள் வீடியோ கோப்புகளை Add Files என்பதை கிளிக் செய்து தேர்வு செய்து கொள்க.இலவச பதிப்பில் ஒரே சமயத்தில் மூன்று வீடியோ கோப்புகளை மட்டுமே மாற்ற இயலும்.
AoA Audio Extractor: Extract Audio from Video

மேலும் நீங்கள் mp3, wmv , ac3 என்ற உங்களுக்கு தேவையான ஆடியோ கோப்புகளாக மாற்றி கொள்ளலாம்.

வீடியோவில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் ஆடியோவாக மாற்ற Movie clip என்பதை கிளிக் செய்து வீடியோவின் ஆரம்ப முடிவு நேரங்களை தேர்வு செய்து கொள்க

AoA Audio Extractor: Extract Audio from Video

கடைசியாக start என்பதை கிளிக் செய்து உங்கள் ஆடியோவை பெற்று கொள்ளலாம்.
AoA Audio Extractor: Extract Audio from Video

Output Path என்பதில் ஆடியோ கோப்பு save செய்ய வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொள்க.

டவுன்லோட் செய்ய AoA Audio Extractor: Extract Audio from Video


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்


Sunday, January 30, 2011

செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் - மீள்பதிவு

சிறந்த செல்போன் Games,Application,Themes,Ringtones டவுன்லோட் செய்ய உதவும் வலைத்தளங்களை பற்றி இந்த பதிவில் பார்த்தோம் .உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper உருவாக்க உதவும் வலைத்தளம் பற்றி இங்கு காண்போம்.அதற்க்கு முன்பு சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம் . வலைத்தளத்தின் பெயர் reddodo.com.இந்த  வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் . 











பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் . கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க  

 

உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia 6233 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க .

வலைதள முகவரி : http://reddodo.com/

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல், Tamil10 ல் அல்லது உலவு ல் பதிவு செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள் .

அன்புடன் ,
லக்கி லிமட்


Saturday, January 29, 2011

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க


நமது கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.

இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.

முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
Notepad

பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Notepad Save As

Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்.

Notepad Save dialog

பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம.உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.

கீழே நான் நிறுவி உள்ள Avira ஆண்டிவைரஸ் check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்வதை கீழே காணலாம்.

avira virus alert

Source:
http://en.wikipedia.org/wiki/EICAR


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்