Thursday, January 28, 2010

mp3cut - ஆன்லைனில் Mp3 ரிங்டோன் வெட்ட

வணக்கம் நண்பர்களே,
நாம் நமக்கு பிடித்தமான ringtone வைக்க திரைப்பட பாடல்களில் இருந்து கட் செய்து எடுப்போம்.இதற்க்கு பல மென்பொருள்கள் உண்டு. உதாரணமாக நான் கூட Audacity என்ற ஒரு மென்பொருள் பற்றி பதிவிட்டு உள்ளேன்.

ஆனால் இந்த மென்பொருளில் கூட ringtone கட் செய்வது சிறிது கடினமாக இருக்கும். எளிதாக ஆன்லைனில் ரிங்டோன் கட் செய்ய இந்த தளம் உதவி புரிகிறது.தளத்தின் பெயர் mp3cut.

கட் செய்ய முதலில் உங்களுக்கு பிடித்தமான mp3 ஐ இந்த தளத்தில் upload செய்ய வேண்டும். upload செய்த பின் கீழ்க்கண்டவாறு தோன்றும்

இதில் உங்களுக்கு தேவையான இடத்தில் இருந்து தேவையான் இடம் வரை தேர்வு செய்து கொள்ளவும். உதாரணமாக 18 வது வினாடியில் இருந்து 41 வது விநாடி வரை தேர்வு செய்துள்ளேன். பின் Split and Download என்ற பட்டனை கிளிக் செய்து டவுன்லோட் செய்து கொள்ளவும். அவ்வளவே !

தள முகவரி : http://mp3cut.net/

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Tuesday, January 26, 2010

Youtube மற்றும் Metacafe களில் இருந்து தரவிறக்கம் செய்ய சிறந்த மென்பொருள்

நண்பர்களே,
Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.இருந்தாலும் சமீபத்தில் நான் உபயோகிக்கும் இந்த மென்பொருள் நன்றாக உள்ளது. youtube, metacafe மட்டுமில்லாது MySpace, Dailymotion, Megavideo, Google, Yahoo!, Metacafe, Spike, Megarotic (unlimited), Yahoo!, CBS, Comedycentral, MyPlay, Globo, RTVE போன்ற தளங்களில் இருந்தும் வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவுகிறது.



டவுன்லோட் செய்யும் போதே நமக்கு தேவையான கோப்பு வடிவில் டவுன்லோட் செய்யலாம்.உதாரணமாக youtube ல் இருந்து வீடியோக்கள் FLV கோப்பு வடிவத்தில் டவுன்லோட் செய்ய கிடைக்கும் அதை டவுன்லோட் செய்யும் போதே AVI, MP4,WMV போன்ற வடிவங்களில் மாற்றி டவுன்லோட் செய்யலாம்.

மேலும் இது கோப்புகளை தனியே வேறு கோப்பு வடிவில் மாற்றும் வசதிகளையும் கொண்டுள்ளது.உங்கள் மொபைல் போன்களுக்கு தேவையான வடிவத்தில் வீடியோகளை மாற்றி கொள்ளும் வசதி உள்ளது.மேலும் வீடியோவிலிருந்து ஆடியோவை மட்டும் பிரிக்கும் வசதியும் உள்ளது.


இந்த மென்பொருள் மூலம் எந்த தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்யலாம் என்பதை இங்கு சென்று பார்க்க.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக்கவும்.


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Friday, January 22, 2010

Symptom Search - நோய் அறிகுறிகளின் தேடல்

பரபரப்பான உலகத்தில் இயங்கி கொண்டிருக்கும் நமக்கு தினமும் நமது உடலை நாம் சரியாக கவனிக்க நேரமில்லை.இதனாலயே பலவித நோய்கள் வருகின்றன.சாதாரண தலைவலி என்று நினைத்து மருத்துவரிடம் செல்லாமல் மருந்துக்கடையில் சென்று மருந்து வாங்கி சாப்பிடுவது பிரச்சனையில் கொண்டு போய் விடலாம்.சாதாரண தலைவலி என விட்டுவிடாமல் என்னவென்று பார்ப்பதே நலம். நாம் தேடு இயந்திரத்த்ில் எதைஎதையோ தேடுகிறோம்,சில அறிகுறிகளுக்கு ஏற்ப அது என்ன நோயாக இருக்கலாம் மற்றும் அதற்கு நாம் என்ன செய்யலாம் என்பதை Symptom Search என்ற தளம் வழங்குகிறது. உங்களுக்கு வரும் தலைவலி,தோள்வலி என எவையானாலும் இதில் வழங்கினால் அறிகுறிகளுக்கு ஏற்ப என்னவாக இருக்கலாம் என தருகிறது.


இதன் மூலம் மேலும் ஒரு நன்மை இருக்கிறது.சிலர் சாதாரண உடல் நல கோளாறுகளுக்கு கூட ஏதாவது நினைத்து கொண்டு பயப்படுவர்.இதில் உங்கள் கோளாறுகளை வழங்கி என்னவென்று தெரிந்து கொள்வதன் மூலம் வீண் பயத்தை தவிர்க்கலாம். வலைத்தள சுட்டி

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


Thursday, January 7, 2010

iBin - பென் டிரைவ்களுக்கான Recycle Bin

Recycle Bin பற்றி அனைவரும் அறிந்திருப்பர். நாம் Delete செய்யும் கோப்புகளை தற்காலிகமாக இங்கே இருக்கும்.நாம் தவறுதலாக Delete செய்யும் கோப்புகளை இங்கிருந்து எடுத்து விடலாம்.ஆனால் பென் டிரைவ் உபயோகிப்பவர்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்புகளை Delete செய்தால் இங்கே இருக்காது. பின் பென் டிரைவ்ல் இருந்து Delete செய்த கோப்புகளை நாம் மீட்டெடுக்க File Recovery மென்பொருள்கள் பயன்படுத்த வேண்டும். iBin என்ற இந்த மென்பொருள் பென் டிரைவ்களுக்கு Recycle Bin போல செயல்படுகிறது.

முதலில் iBin டவுன்லோட் செய்து அதில் உள்ள iBin.exe என்ற கோப்பை உங்கள் பென் டிரைவ்ல் copy செய்து கொள்க.இது வெறும் 216kb அளவு கொண்டதுதான். முதன் முதலில் ஒரு கோப்பை delete செய்யும் போது iBin உங்கள் பென் டிரைவ்ல் உள்ள கோப்பை delete செய்து விடவா? அல்லது iBin Folderல் தற்காலிகமாக வைத்து கொள்ளவா? என கேட்கும்.


Dump into iBin என்பதை கிளிக் செய்தால் உங்கள் பென் டிரைவ்ல் iBin என்ற Folder ஐ உருவாக்கும். இது தான் உங்கள் பென் டிரைவ்களுக்கான Recycle Bin Folder. இது உங்கள் பென் டிரைவ் இன் அளவிலிருந்து 10% எடுத்து கொள்ளும். வேண்டுமென்றால் நாம் அளவை நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம். இதற்க்கு உங்கள் System Tray ல் உள்ள iBin Icon ஐ கிளிக் செய்க
இதில் Custom Options என்பதை கிளிக் செய்க.இப்பொது கீழ்க்கண்ட Window தோன்றும் .
இதில் சென்று உங்களுக்கு தேவைக்கு ஏற்ப அளவை கூட்டவோ குறைக்கவோ செய்து கொள்ளலாம். மேலும் பல வசதிகளும் உள்ளன. எளிதாக நாம் Delete செய்த கோப்புகளை பார்க்கவோ அல்லது நீக்கவோ Dumping Management என்பதை கிளிக் செய்க .கீழ்க்கண்ட Window தோன்றும் .
இதன் மூலம் கோப்புகளை நீக்கவோ அல்லது மீண்டும் சேமிக்கவோ முடியும் .

இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்