Saturday, September 25, 2010

புகைபடங்களை மொத்தமாக ரீசைஸ் செய்ய

Digital கேமராவில் எடுத்த புகைப்படங்கள் அளவில்(Size) பெரிதாக இருக்கும்.அது போன்ற புகைப்படங்களை அதன் Quality மாறாது சிறிய அளவாக மாற்ற(Resize) இந்த மென்பொருள் உதவுகிறது.ஏற்கனவே சிறிய அளவாக மாற்றும்(Resize)Riot என்ற மென்பொருள் பற்றி பயன்படுத்தி பாருங்கள் - 4 ல் பதிவிட்டுள்ளேன்.ஆனால் அந்த மென்பொருளில் ஒவ்வொரு படமாக தான் மாற்ற இயலும்.இந்த மென்பொருளில் மொத்தமாக பல படங்களை நிமிடங்களில் சிறிய அளவாக மாற்றலாம்.

உங்கள் படங்கள் இருக்கும் போல்டரை தேர்வு செய்து Add என்ற பட்டனை கிளிக் செய்து வலப்புறம் கொண்டு செல்க.பல படங்கள் இருக்கும் போல்டர்கள் கூட தேர்வு செய்து கொள்ளலாம்.பின் உங்களுக்கு தேவையான பட பார்மட்(format- .jpg,.png,.gif) தேர்வு செய்து Convert என்பதை கிளிக் செய்தால் போதும்.(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)



அனைத்து படங்களும் அளவில் மாற்றப்பட்டு நீங்கள் கொடுத்த சேமிக்க வேண்டிய போல்டரில் சேமிக்கப்பட்டு விடும்.உங்கள் தேவைக்கு ஏற்றவாறு சிறிய அளவாக மாற்றி கொள்ளலாம்.



மேலும் இதில் படங்களை pdf ஆக மாற்றும் வசதியும் உள்ளது.



படங்களை மொத்தமாக பெயர் மாற்றும் வசதியும் உள்ளது.



இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்


Tuesday, September 21, 2010

நெருப்புநரி நீட்சி நிறுவுவது எப்படி?

தற்போது உள்ள இணைய உலவிகளில் மிகவும் பிரபலமானது நெருப்புநரி(Firefox).பலரால் IE உலவி பயன்படுத்த பட்டாலும் அவர்களில் பாதி பேர் நெருப்புநரி பற்றி அறியாதவர்கள் என கூறலாம்.குரோம் (Chrome) உலவி தற்போது பிரபலமாகி வந்தாலும் இன்னும் நெருப்புநரியே IE க்கு அடுத்து இரண்டாம் இடத்தில் உள்ளது.நெருப்புநரி நீட்சிகள்(Addons) என்னும் வசதி மேலும் பல வசதிகளை நெருப்புநரியில் கொண்டு வர வழி செய்கிறது. நெருப்புநரிக்கு புதியவர்களுக்கு எப்படி நெருப்புநரி நீட்சி நிறுவுவது என்பதற்கான பதிவு இது.

அண்மைய நெருப்புநரி பதிப்பை இந்த www.mozilla.com/firefox சுட்டிக்கு சென்று டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

நெருப்பு நரி நீட்சிளை இந்த சுட்டியில்(https://addons.mozilla.org/en-US/firefox/ )டவுன்லோட் செய்து கொள்ளலாம்.இந்த தளத்தில் அனைத்து நீட்சிகளும் தொகுக்கப்பட்டுள்ளன.

முதலில் உங்களுக்கு தேவையான நீட்சியை தேர்வு செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக ReminderFox என்னும் நீட்சியை எப்படி நிறுவது என பார்ப்போம்.தேவையான நீட்சியை தேர்வு செய்த பின் Add To Firefox என்பதை கிளிக் செய்க.

கிளிக் செய்தவுடன் கீழே உள்ள செய்தி நெருப்புநரியின் மேற்புறத்தில் தோன்றும்.அதில் Allow என்பதை கிளிக் செய்க.(படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)

கிளிக் செய்த பின் தோன்றும் கீழ்கண்ட திரையில் Install Now என்பதை தேர்வு செய்க.

இப்பொழுது நீட்சி Install ஆவதை காணலாம்.

நீட்சி நிறுவிய பின் கீழே உள்ள திரை தோன்றும்.அதில் Restart என்பதை கிளிக் செய்தால் நெருப்புநரி மூடி மீண்டும் திறக்கும்.


இப்போது Tools சென்று Addons என்பதை தேர்வு செய்து அதில் Extension என்பதை கிளிக் செய்து பார்த்தால் நீட்சி நிறுவ பட்டிருக்கும்.


ஏற்கனவே நான் பதிவிட்ட நெருப்பு நீட்சிகள் பதிவுகளை காண இங்கே கிளிக் செய்க.

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Sunday, September 19, 2010

பயனுள்ள நெருப்புநரி நீட்சி

பல நெருப்புநரி நீட்சிகளில் மிகவும் பயனுள்ள நீட்சி இந்த DownThemAll என்னும் டவுன்லோட் செய்ய உதவும் நீட்சி.வலைதளங்களில் உள்ள எந்தவொரு கோப்பையும் பதிவிறக்க என்ற பதிவில் கோப்புகளை பதிவிறக்க மற்றொரு வலைத்தளத்தை பயன்படுத்தினோம்.ஆனால் அதே வசதிகளை இந்த நெருப்புநரி நீட்சி வழங்குகிறது.இந்த நீட்சியை நெருப்புநரியில் நிறுவிய பின் நெருப்புநரியை Restart செய்க.

முதலில் இந்த நீட்சியை கொண்டு வலைதளங்களில் உள்ள எந்தவொரு கோப்பையும் எப்படி பதிவிறக்குவது என்பதை காண்போம்.முதலில் பதிவிறக்க வேண்டிய வலைதளத்திற்கு சென்ற பின் கீழ்கண்ட முறையில் வசதியை தேர்வு செய்க.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)

DownThemAll என்பதை கிளிக் செய்த பின் கீழே உள்ள Window தோன்றும்.

இதில் வலைதளத்தில் உள்ள அனைத்து கோப்புகளும் படங்கள்,வீடியோ உட்பட அனைத்தும் பட்டியலிடபட்டிருக்கும். உங்களுக்கு தேவையானவைகளை தேர்வு செய்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மேலும் வலைதளத்தில் உள்ள சுட்டிகள் சுட்டும் பக்கங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

மேலும் இந்த நீட்சி நீங்கள் பதிவிறக்கும் கோப்புகளை வேகமாக பதிவிறக்க மற்றும் நிறுத்தி வைத்து பின்னர் பதிவிறக்க வசதி போன்ற வசதிகளை கொண்ட சிறந்த Download Manager ஆகவும் பயன்படும்.

இதற்கு நெருப்புநரியில் ஒரு கோப்பை டவுன்லோட் செய்யும் போது காட்டும் windowவில் DownThemAll என்பதை தேர்வு செய்தால் போதும்.பின்னர் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுக.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)

கோப்பை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்க.

பின் start கிளிக் செய்தால் கோப்பு பதிவிறக்க ஆரம்பித்து விடும்.


இந்த நீட்சியை நிறுவ இங்கு செல்க.மேலும் விபரங்களுக்கு இங்கு செல்க.


இன்ட்லி,தமிழ்10ல் மற்றும் தமிழ்மணம் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....


அன்புடன் ,
லக்கி லிமட்


Saturday, September 18, 2010

ஆங்கிலம் கற்பவர்களுக்கு பயனுள்ள வலைத்தளம்

நமது தாய்மொழியாம் தமிழ் உடன் தற்போது ஆங்கிலம் அறிந்திருப்பது தற்போது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.ஆங்கிலம் தற்போது கற்று கொண்டு இருப்பவர்களுக்கு Word Hippo என்ற இந்த வலைத்தளம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


இந்த தளத்தில் உள்ள வசதிகள் சில

1.ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான பிற வார்த்தைகளை அறிய உதவுகிறது .

2.ஒரு ஆங்கில வார்த்தைக்கு எதிர்பத வார்த்தையை அறிய உதவுகிறது .

3.ஒரு ஆங்கில வார்த்தையை கொடுத்தால் அந்த ஆங்கில வார்த்தையை பயன்படுத்தி இருக்கும் ஆங்கில வரியை தருகிறது.

4.முக்கியமாக ஒரு ஆங்கில வார்த்தைக்கு இணையான ஒருமை(singular), பன்மை(plural),நிகழ்காலம்(present tense) மற்றும் எதிர்கால(past tense) ஆங்கில வார்த்தைகளை தருகிறது.

5.மேலும் ஒரு மொழியில் இருந்து வேறு மொழிக்கு மாற்றம் செய்யவும் செய்கிறது.



வலைத்தள சுட்டி



தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, September 16, 2010

பயன்படுத்தி பாருங்கள் - 7

Unstoppable Copier - எவ்வித தடங்கலுமின்றி பழுதடைந்த கோப்புகளை காப்பி செய்ய

நாம் நிறைய கோப்புகளை CD,DVD மற்றும் வேறு கணிணி பகுதிகளில் இருந்தோ காப்பி செய்யும் போது சில கோப்புகள் பழுதடைந்திருந்தாலோ அல்லது CD,DVD பழுதடைந்திருந்தாலோ நீங்கள் காப்பி செய்யும் போது பாதியில் நின்று விடும்.இது நமக்கு எரிச்சலை தரும்.

இந்த மென்பொருள் பழுதடைந்த கோப்புகளையும் தடங்கலின்றி காப்பி செய்கிறது.முடிந்தவரை பழுதடைந்த கோப்புகளின் பகுதிகளை காப்பி செய்கிறது.எதாவது ஒரு கோப்பு பழுதடைந்து காப்பி செய்ய முடியவில்லை எனில் பாதியிலேயே நின்று விடாமல் மற்ற கோப்புகளை காப்பி செய்து விடுகிறது.

முக்கியமாக பழுதடைந்த CD,DVDகளில் இருந்து கோப்புகளை எடுக்க பெரிதும் உதவுகிறது.இந்த மென்பொருளை இங்கிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.


DVD Flick - எந்தவொரு வீடியோ கோப்பையும் DVD ஆக மாற்ற


தற்போது நமக்கு வேண்டிய திரைப்படங்களையும்,வீடியோக்களையும் எளிதாக பதிவிறக்கி கொள்கிறோம்.அதை கணிணியிலும் பார்க்கிறோம் இருந்தாலும் TV யில் பார்ப்பதையே பல நண்பர்கள் விரும்புவர்.உங்கள் திரைப்படங்களையும்,வீடியோக்களையும் DVD ஆக மாற்ற இந்த இலவச மென்பொருள் உதவுகிறது.

உங்களுக்கு பிடித்த வீடியோகளை வகைப்படுத்தி DVD ஆக மாற்றி கொள்ளலாம்.


இதில் உங்கள் DVD அளவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும் இதில் DVD மெனுகளை(Menu) உருவாக்கி கொள்ளலாம்.

உங்கள் திரைப்படங்களுக்கு Subtitle இருந்தால் அதையும் இணைத்து கொள்ளலாம்.


மேலும் விபரங்களுக்கு மற்றும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்


Saturday, September 4, 2010

கொசுவை விரட்டும் மென்பொருள்



கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ தோன்றும் அதில் Active என்பதை கிளிக் செய்தால் இந்த மென்பொருள இயங்க ஆரம்பித்து விடும்.


Active என்பதை கிளிக் செய்தவுடன் இந்த மென்பொருள் கொசுவை விரட்டும் அல்ட்ரா ஒலிகளை வெளிபடுத்த ஆரம்பித்து விடும்.இந்த அல்ட்ரா ஒலிகளை நாம் கேட்க முடியாது.


மீண்டும் INACTIVE கிளிக் செய்து இந்த மென்பொருளின் இயக்கத்தை நிறுத்தலாம்.மேலும் Hide என்பதை கிளிக் செய்து பின்புலத்தில் இயக்கலாம்.


இந்த மென்பொருளில் இருந்து வரும் அல்ட்ரா ஒலி கொசுக்களை பறக்க விடாமல் கட்டுபடுத்துகிறது.இதனால் இதை இயக்கிய சில நிமிடங்களில் உங்கள் கணிணிக்கு அருகில் இருந்து கொசுக்கள் ஓடிவிடும்.நீங்கள் உங்கள் ஒலிப்பான்களை On செய்து வைத்திருந்தால் போதும்.CNET தளம் இந்த மென்பொருளில் எவ்வித வைரஸ்களும் இல்லை என உறுதி செய்துள்ளது.இந்த மென்பொருளை தரவிறக்க கீழ்க்கண்ட சுட்டிகளை பயன்படுத்தலாம்.

CNET தளத்தில் இருந்து தரவிறக்க இங்கு கிளிக் செய்க

மேலும் விபரங்களுக்கு மென்பொருளின் வலைத்தளத்திற்கு செல்ல இங்கு கிளிக் செய்க


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்