Sunday, January 30, 2011

செல்போனிற்கு உங்கள் பெயர் கொண்ட அழகான வால்பேப்பர் - மீள்பதிவு

சிறந்த செல்போன் Games,Application,Themes,Ringtones டவுன்லோட் செய்ய உதவும் வலைத்தளங்களை பற்றி இந்த பதிவில் பார்த்தோம் .உங்கள் பெயர் கொண்ட அழகான Wallpaper உருவாக்க உதவும் வலைத்தளம் பற்றி இங்கு காண்போம்.அதற்க்கு முன்பு சில மாதிரி Wallpaper களை கீழே காணலாம் . வலைத்தளத்தின் பெயர் reddodo.com.இந்த  வலைதளத்தில் அழகான Wallpaper மாதிரிகள் கொடுக்கப்பட்டிருக்கும். உங்களுக்கு தேவையான Wallpaper ஐ முதலில் தேர்வு செய்ய வேண்டும் . 











பின் உங்கள் செல்போன் வகை மற்றும் அதன் மாடல் எண்ணை குறிப்பிடவேண்டும் . பின் உங்கள் பெயரை அங்கே உள்ள TextBox ல் கொடுத்து கிளிக் செய்தால் உங்கள் பெயரோடு அழகான Wallpaper உங்களுக்கு கிடைக்கும் . இதை உங்கள் கம்ப்யூட்டரில் சேமித்து பின் செல்போனில் ஏற்றி கொள்ளலாம் . கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க  

 

உங்கள் செல்போன் Model அங்கு இல்லையெனில் உங்கள் செல்போன் Resolution மட்டும் கூறினால் போதும் . உதாரணமாத Nokia 6233 செல்போன் Resolution 240x320 அதை கொடுத்தால் போதும் கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பார்க்க .

வலைதள முகவரி : http://reddodo.com/

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல், Tamil10 ல் அல்லது உலவு ல் பதிவு செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள் .

அன்புடன் ,
லக்கி லிமட்


Saturday, January 29, 2011

உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க


நமது கணிணிகளுக்கு ஆண்டிவைரஸ் மிகவும் அவசியம் என்பது அனைவரும் அறிந்ததே. சிலர் விலை கொடுத்து ஆண்டிவைரஸ் வாங்கி பயன்படுத்துவார்கள். சிலர் இலவச ஆண்டிவைரஸ் பயன்படுத்துவார்கள்.எதுவாக இருந்தாலும் அது சரியாக இயங்கவில்லை எனில் பிரச்சனை தான்.உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்குகிறதா என கண்டுபிடிக்க European Institute for Computer Antivirus Research என்ற அமைப்பு EICAR test file என்னும் ஒரு முறையை கொடுத்துள்ளது.

இனி எப்படி கண்டுபிடிப்பது என்னும் வழிமுறையை பார்ப்போம்.

முதலில் உங்கள் கணிணியில் notepad(நோட்பேட்) திறந்து கொள்ளுங்கள்.
Notepad

பின் கீழே உள்ளவற்றை உள்ளது போல் உங்கள் notepad(நோட்பேட்)ல் டைப் செய்யுங்கள் அல்லது காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*

காப்பி செய்த பின் உங்கள் notepad(நோட்பேட்)ல் File -> Save AS... கொடுங்கள்.
Notepad Save As

Save செய்யும் போது .com என கோப்பு முடியுமாறு save செய்து கொள்ளுங்கள்.உதாரணமாக நான் check.com என்ற பெயரில் save செய்திருக்கிறேன்.

Notepad Save dialog

பின் அந்த கோப்பை இயக்கினாலோ அல்லது save செய்யும் போதோ உங்கள் ஆண்டிவைரஸ் இந்த check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்து நீக்க வேண்டும்.இல்லாவிடில் உங்கள் ஆண்டிவைரஸ் சரியாக இயங்கவில்லை என்று அர்த்தம.உடனே உங்கள் ஆண்டிவைரஸை தூக்கி விட்டு வேறு நிறுவுங்கள்.

கீழே நான் நிறுவி உள்ள Avira ஆண்டிவைரஸ் check.com கோப்பை வைரஸ் என எச்சரிக்கை செய்வதை கீழே காணலாம்.

avira virus alert

Source:
http://en.wikipedia.org/wiki/EICAR


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Saturday, January 22, 2011

ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளுக்கு போட்டியாக ராக்மெல்ட்


ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளுக்கு போட்டியாக ராக்மெல்ட் என்ற மற்றொரு உலவி களத்தில் குதித்துள்ளது. குரோம் உலவி உருவாக்கப்பட்ட குரோமியம் என்ற ஓபன் சோர்ஸ் மூலத்திலிருந்து தான் இந்த ராக்மெல்ட் உலவியும் உருவாக்கப்பட்டுள்ளது.ஃபயர்பாக்ஸ்,குரோம் உலவிகளில் இல்லாத பல வசதிகள் இதில் உள்ளன.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)



RockMelt Browser
குரோமியம் என்ற ஓபன் சோர்ஸ் மூலத்திலிருந்து உருவாக்கப்பட்டதால் கிட்டதட்ட பார்க்க குரோம் போலவே இருக்கும் இதில் உள்ள முக்கியமான சிலவசதிகளை பற்றி பார்ப்போம்.

உங்கள் facebook நண்பர்களை எளிதாக இனி நீங்கள் கையாளலாம்.இந்த உலவியிலேயே நீங்கள் facebook கணக்கில் நுழைந்து கொள்ளலாம்.நுழைந்தவுடன் உங்கள் நண்பர்கள் இந்த உலவியின் சைடு பாரிலேயே தெரிவார்கள்.மேலும் facebook தளத்தில் போகாமலே நண்பர்களின் செய்திகளை அறிந்து கொள்ளலாம். கீழே உள்ள படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க
RockMelt Browser FaceBook

facebook கணக்கை போல் ட்விட்டர் கணக்கையும் பயன்படுத்தலாம் ,ட்வீட் செய்யலாம்.
RockMelt Browser Twitter
மேலும் கூகிள் தேடல்களை தனி டேப் இல் எளிதாக காட்டுகிறது.
RockMelt Browser Google Search

இந்த உலவியை டவுன்லோட் செய்து நிறுவும் போது கீழே உள்ளது போல் உங்கள் facebook கணக்கில் நுழைய வேண்டியதிருக்கும்.


இந்த உலவியில் உள்ள மேலும் பல வசதிகளை கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்க.


டவுன்லோட் செய்ய இங்கே செல்க Download RockMelt Browser

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்


சாப்ட் அண்ட் வெப் - 4

Can You Run It? - நீங்கள் வீடியோ கேம் பிரியராக இருந்தால் உங்களுக்கு பயன்படும் வெப்சைட் இது. நீங்கள் விளையாட நினைக்கும் கேம்கள் உங்கள் கணிணியில் இயங்குமா? இயங்காதா? மற்றும் இயக்க உங்கள் கணிணியில் என்ன மென்பொருள் அல்லது வன்பொருள் தேவைப்படும் என தெளிவாக கூறுகிறது.

Go Can You Run It?



AllVideoDownloader - 280 வீடியோ தளங்களிருந்து உங்களுக்கு பிடித்த வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவுகிறது. 3.19MB அளவே கொண்ட எளிய மற்றும் ஒரே சமயத்தில் 20 வீடியோகளை டவுன்லோட் செய்ய உதவும் மென்பொருள்.
All Video Downloader

Download AllVideoDownloader




PDFescape - ஆன்லைனிலேயே PDF கோப்புகளை எடிட் செய்ய உதவும் வலைத்தளம்.
PDFescape - Free PDF Editor & PDF Form Filler

PDFescape - Free PDF Editor & PDF Form Filler


Gun Girl 2 - ஆக்சன் கேம் பிரியர்களுக்கான அட்டகாசமான ஆக்சன் கேம். இது இலவச வீடியோ கேம் மற்றும் எவ்வித கிராபிக்ஸ் கார்டு போன்றவை தேவைப்படாத விளையாட்டு. கீழே டிரைலர் பாருங்கள்.


Download Gun Girl 2


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Saturday, January 15, 2011

சாப்ட் அண்ட் வெப் , டெக்னாலஜி நியூஸ் - 3

Microsoft Mathematics 4.0
Microsoft Mathematics 4.0 - மாணவர்களுக்கான மைக்ரோசாப்ட்ன் எளிதாக கணக்குகளை போட ,பழக உதவும் மென்பொருள். அல்ஜிபிரா , திரிகோணவியல் , இயற்பியல் , வேதியியல் , கால்குலஸ் போன்ற கணக்குகளை போடவும்,பழகவும் முடியும்.ஒரு முழுமையான அறிவியல் கால்குலேடர் போலவும் பயன்படும். Download Microsoft Mathematics 4.0
avidPDF
avidPDF - ஆன்லைனில் எளிதாக PDF கோப்புகளை மட்டும் தேடவும் , தேடிய கோப்புகளை டவுன்லோட் செய்யாமல் ஆன்லைனிலேயே திறந்து பார்க்கவும் உதவுகிறது இந்த வலைத்தளம். PDF கோப்புகளை zoom செய்து பெரிதாகி தனி திரையில் பார்க்கும் வசதியும் உள்ளது. GO avidPDF




உஷாராக இருங்கள் - கலிபோர்னியாவை சேர்ந்த பிரான்க் என்பவன் பல பெண்களின் நிர்வாண படங்களை அவர்களது ஈமெயில் கணக்கில் இருந்து திருடி பேஸ்புக்கில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.மேலும் விசாரித்ததில் சுமார் 3200 நபர்களின் ஜிமெயில் மற்றும் யாஹூ ஈமெயில் கணக்குகளை ஹேக் செய்து அவர்களது ஈமெயில்களை திருடியுள்ளான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவன் ஹேக் செய்ய எவ்வித மென்பொருளும் பயன்படுத்தவில்லை.இவன் ஹேக் செய்த அனைவரின் ஈமெயில் கணக்குகளின் செக்யூரிட்டி கேள்விகள் எளிதாக இருக்கவே அதை எளிதாக யூகித்து பதில் அளித்து அவர்கள் பாஸ்வோர்ட் பெற்று அவர்களது கணக்கில் புகுந்துள்ளான். Gmail Security Questionsஎனவே நண்பர்களே உங்கள் ஈமெயில் கணக்கின் செக்யூரிட்டி கேள்விகளை எளிதாக வைக்காமல் உங்களுக்கு மட்டுமே பதில் தெரியுமாறு பார்த்து கொள்ளவும்.முடிந்தவரை Write my own Question? என்னும் வசதியை தேர்ந்தெடுத்து யூகிக்கமுடியாத கேள்வியாக மாற்றி கொள்ளுங்கள்.




Firefox 4 Beta 9 - ஃபயர்ஃபாக்ஸ்(நெருப்பு நரி) இன் அடுத்து வெளிவர இருக்கும் பதிப்பு Firefox 4. தற்போது ஃபயர்ஃபாக்ஸ் 4 இன் பீட்டா பதிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக நேற்று பீட்டா 9 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Download Firefox 4 Beta 9


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....


இதற்கு முந்தைய சாப்ட் அண்ட் வெப் பதிவு - சாப்ட் அண்ட் வெப் ,வீடியோ - 2

அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, January 13, 2011

உங்கள் ஜிமெயில் மெயில்களை பாதுகாக்க

இன்று இணையத்தில் ஜிமெயில் பயன்படுத்தாதவர்களே இல்லை எனலாம். அந்தஅளவுக்கு ஜிமெயில் பலரால் பயன்படுத்த படுகிறது.பல அவர்களுடைய பல தகவல்களை, கோப்புகளை,புகைப்படங்களை சேமித்து வைக்க ஜிமெயிலையே பயன்படுத்துகின்றனர்.நாம் ஜிமெயிலில் வைத்திருக்கும் மெயில்களை பாதுகாப்பது நமக்கு அவசியம்.

என்றாவது உங்கள் ஜிமெயில் கணக்கை திடீரென யாரவது முடக்கினாலோ அல்லது ஏதோ ஒரு காரணத்தினாலோ உங்கள் மெயில்கள் அழிந்து போனாலோ அல்லது உங்களால் மெயில்களை பார்க்க முடியாமல் போனாலோ நமக்கு இழப்பு தான்.இதற்கு நாம் உங்கள் ஜிமெயில்களை பேக்அப் எடுத்து கொண்டால் கவலையின்றி இருக்கலாம்.

Gmail Backup என்னும் இலவச மென்பொருள் இதற்கு பெரிதும் உதவுகிறது.உங்கள் மெயில்களை பேக்அப் எடுத்து கொண்டு வேறு ஒரு ஜிமெயில் கணக்குக்கு கூட மாற்றி கொள்ளலாம்.இந்த மென்பொருளை பயன் படுத்துவதற்கு முன்னர் உங்கள் ஜிமெயில் கணக்கில் IMAP என்னும் வசதியை Enable செய்ய வேண்டும்.

இதற்கு Setting -> Forwarding and POP/IMAP செல்க. பின் Enable IMAP என்பதை தேர்வு செய்க



இதன் பிறகு நிறுவிய Gmail Backup மென்பொருளுக்கு சென்று உங்கள் மெயில் முகவரி,பாஸ்வோர்ட் கொடுத்து Directory என்பதை கிளிக் செய்து உங்கள் கணிணியில் பேக்அப் ஆக வேண்டிய இடத்தை தேர்வு செய்க.எந்த தேதியிலிருந்து மெயில்கள் வேண்டுமோ அதையும் குறிப்பிட்டு கொள்ளலாம். கடைசியாக Backup என்ற பட்டனை சொடுக்கினால் உங்கள் மெயில்கள் பதிவிறங்க ஆரம்பித்து விடும்.



வேறொரு கணக்கில் இந்த மெயில்களை சேமிக்க விரும்பினால் அந்த கணக்கின் விபரங்களை கொடுத்து, கணிணியில் பேக்அப் இருக்கும் இடத்தை தேர்வு செய்து Restore என்ற பட்டனை சொடுக்கினால் மெயில்கள் அந்த கணக்கில் சேர்ந்து விடும்.

ஜிமெயிலில் இருக்கும் label வசதியையும் சேர்ந்து பேக்அப் எடுக்கும் வசதியை கொண்டுள்ளது.இந்த மென்பொருள் windows மற்றும் linux இரண்டுக்கும் கிடைக்கிறது.

டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,லக்கி லிமட்

Wednesday, January 12, 2011

உங்கள் வரவு செலவுகளை கணக்கிட

"ஆற்றிலே கொட்டினாலும் அளந்து கொட்டனும்" என்பது பழமொழி.எதையும் எண்ணிச் செலவு செய்ய வேண்டும், யாருக்குக் கொடுத்தாலும் அளவாகக் கொடுக்க வேண்டும், அதாவது இன்னதற்கு இவ்வளவுதான் செலவு செய்ய வேண்டும் என்பதைத் திட்டமிட்டுச் செய்ய வேண்டும் என்று பலர் கூற கேட்டிருக்கலாம் மற்றும் உண்மையும் கூட.

நமது வேலைகளுக்கிடையே அன்றாட வரவு செலவுகளை கணக்கிடுவது சற்று சிரமமான காரியமே.நமக்கே தெரியாமல் சில வழிகளில் நாம் பணத்தை செலவிடுவது உண்டு.இவையெல்லாம் வரவு செலவுகளை கணக்கிடாமல் கண்டுபிடிப்பது கஷ்டம.

மேலும் நாம் மாதா மாதம் பல வகையான பில்களை கட்ட வேண்டியது உண்டு.உதாரணமாக கடன் அட்டை தொகை,மாதா வாடகை,மின்சார கட்டணம் மற்றும் பல உண்டு.இவைகளை நாம் சரியாக நினைவு வைத்திருந்து கட்ட வேண்டும் மற்றும் இவைகளையும் நாம் கணக்கிட வேண்டும்.

Buxfer
என்ற வலைத்தளம் பல வழிகளில் நமக்கு உதவுகிறது.நாம் அன்றாடம் செய்யும் செலவுகளையும் , வரவுகளையும் இதில் எளிதாக பதிந்து கொள்ளலாம்.இந்த தளத்திற்கு சென்று இலவச கணக்கை துவங்கினால் போதும்.


மேலும் மாதா மாதம் கட்ட வேண்டிய பில்களை பதிவு செய்து கொண்டால் அந்த தேதிக்கு நமக்கு மெயில் அனுப்பி நினைவு படுத்துகிறது.உங்கள் வரவு செலவுகளை தனிதனியாக வகைபடுத்திகொள்ளலாம்.இதன் மூலம் எளிதாக எதற்கு அதிகமாக செலவுகளை செய்தோம் என எளிதாக காணலாம்.உதாரணமாக நீங்கள் அந்த மாதத்தில் காய்கறிகளுக்காக மற்றும் பொழுதுபோக்கிற்க்காக எவ்வளவு செலவு செய்தோம் என்பதை தனியாக காணலாம்.


வரவு செலவுகளை நமது இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிட மாற்றி கொள்ளலாம்.மேலும் பட்ஜெட் போட்டு கொள்ளும் வசதியும் உள்ளது.

வீட்டு செலவுகளை கணக்கிட எளிதில் கணக்கிட உதவுவது மட்டுமில்லாமல் மாதவாரியாக வரவு செலவுகளை பட்டியல் இட்டு காட்டுகிறது.பயன்படுத்தி பாருங்கள் மிக உதவியாக இருக்கும்.

வலைதள சுட்டி


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,லக்கி லிமட்

Tuesday, January 11, 2011

வீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய

தற்போது நாம் இணையத்தில் டவுன்லோட் செய்யும் அனைத்து திரைப்படங்களுக்கும் சப்டைட்டில் கிடைக்கிறது.இப்போது பலரும் சப்டைட்டிலோடு படம் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. வீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய பல மென்பொருள்கள் உள்ளன.ஆனாலும் நாம் மென்பொருளை வைத்து என்ன தான் முன்னே பின்னே சப்டைட்டிலை சரி செய்தாலும் சில சப்டைட்டில் சரியாக பொருந்தாது.இவ்வகை சப்டைட்டிலை எவ்வாறு சரி செய்வது என பார்ப்போம்.

Subtitle Tool - submagic சப்டைட்டில் மென்பொருளான இதை டவுன்லோட் செய்து கொள்ளவும்.

சப்டைட்டிலும் , வீடியோவும் பொருந்தாதற்கு காரணம் வீடியோவின் Frame Rate மற்றும் சப்டைட்டில் Frame Rate வேறு வேறாக இருப்பதே காரணம்.சப்டைட்டில் Frame Rate நீங்கள் சப்டைட்டில் டவுன்லோட் செய்யும் இணைய தளத்திலேயே கொடுக்க பட்டிருக்கும்.வீடியோவின் Frame Rate காண கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றவும்.

வீடியோவை Right Click செய்து Properties தேர்வு செய்க.தோன்றும் திரையில் Summary என்பதை தேர்வு செய்க.தோன்றும் திரையில் Frame Rate குறித்து கொள்க


பொதுவாக 23.976 அல்லது 25 ஆகிய இரு Frame Rateகளில் வீடியோ கோப்புகள் இருக்கும்.மேற்கண்ட திரையில் 23 என இருப்பதை நீங்கள் 23.976 என எடுத்து கொள்ளலாம்.உங்கள் வீடியோவும் சப்டைட்டிலும் ஒரே Frame Rate இல் இருக்க வேண்டும்.உங்கள் வீடியோ 25 Frame Rate என கொள்வோம்,சப்டைட்டில் 23.976 Frame Rateல் இருப்பதாக கொள்வோம்.


Subtitle Tool - submagic சப்டைட்டில் மென்பொருளை திறந்து கொள்க.அதில் உங்கள் சப்டைட்டிலை திறந்து கொள்க.பின் FrameRate என்னும் பட்டையை கிளிக் செய்க.தோன்றும் திரையில் புதிய frame rate அதாவது 25 கொடுத்து convert என்பதை கிளிக் செய்க.(கீழே உள்ள படத்தை பார்க்க).



இப்போது உங்கள் சப்டைட்டில் உங்கள் வீடியோவோடு பொருந்துமாறு மாறி இருக்கும்.
இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,லக்கி லிமட்

பர்சனல் போல்டர்களை பாதுகாக்க இலவச மென்பொருள்

நமது பர்சனல் அல்லது முக்கியமான போல்டர்களையும் , கோப்புகளையும் பிறர் தெரிந்தோ தெரியாமலோ அழித்து விடவோ அல்லது பார்த்து விடவோ வாய்ப்புண்டு. விண்டோஸில் Hide வசதியை பயன்படுத்தினாலும் அதையும் எளிதாக பார்த்து விடலாம்.

Password Folder என்னும் மென்பொருள் உங்கள் பர்சனல் போல்டர்களுக்கு Password வைத்து கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பர்சனல் போல்டர்களை பிறரிடமிருந்து பாதுகாக்கலாம். இந்த மென்பொருள் எப்படி செயல் படுகிறது என பார்ப்போம்.

மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழே உள்ள விண்டோ தோன்றும்,இதன் மூலம் உங்கள் Password ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.



பின்னர் தோன்றும் விண்டோவில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய போல்டர்களையும் , கோப்புகளையும் தேர்வு செய்து கொள்ளுங்கள்.


கீழே உள்ள Lock & Exit என்ற பட்டனை கிளிக் செய்தால் நீங்கள் தேர்வு செய்த போல்டர்களும் , கோப்புகளும் நீங்கள் கொடுத்த Password மூலம் பாதுகாக்கபடும்.

போல்டர்களை மறைத்தல்(Hide),படிக்க முடியாமல் செய்தல்(Deny Read),எந்த மாற்றங்கள் செய்ய முடியாமல் தடுத்தல்(Deny Write) போன்ற மூன்று வழிகள் மூலம் உங்கள் போல்டர்களை பாதுகாக்கலாம்.



நீங்கள் பாதுகாக்கும் போல்டரை யாராவது பார்க்க நினைத்தால் கீழே உள்ளது போல் பிழைசெய்தி வரும்.



நீங்கள் மீண்டும் பாதுகாத்த போல்டரை பார்க்க நினைத்தால் மென்பொருளை திறந்து போல்டரை தேர்வு செய்து Unlock என்ற பட்டனை கிளிக் செய்தால் போதும்.

இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி Password Folder

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,லக்கி லிமட்

சாப்ட் அண்ட் வெப் ,வீடியோ - 2

PDFill PDF Tools
PDFill PDF Tools - ஒரே மென்பொருளில் PDF கோப்புகளில் Merge, Split, Reorder, Encrypt, Decrypt, Rotate, Crop, Reformat, Header, Footer, Watermark, Images to PDF, PDF to Images போன்ற பல செயல்களுக்கு உதவும் சிறந்த மென்பொருள். Download - PDFill PDF Tools





CoinMill.com - The Currency Converter<br />
CoinMill - எந்த ஒரு நாட்டின் பண மதிப்பையும் வேறொரு நாட்டின் பண மதிப்பில் பார்க்க இந்த தளம் உதவுகிறது.ஒவ்வொரு நாட்டின் அன்றைய மதிப்பிலேயே பண மதிப்பை சொல்கிறது. Go CoinMill.com - The Currency Converter


My Cool Desktop
My Cool Desktop - உங்கள் டெஸ்க்டாப்பில் உள்ள ஐகான்களை அழகாக பல்வேறு வடிவில் அமைக்க இந்த மென்பொருள் உதவுகிறது.உதாரணமாக ஐகான்களை இதயம் , டைமண்ட் ,பிறைநிலா , வட்டம் , நட்சத்திரம் போன்ற வடிவங்களில் அழகாக அமைத்து தருகிறது. My Cool Desktop - Make your desktop look amazingly cool




Simple Sticky Notes

Simple Sticky Notes
- சிறிதாக எளிதாக குறிப்பு அல்லது நோட்ஸ் எடுத்துக்கொள்ள வசதியான 800kb க்கும் குறைவான அளவு கொண்ட சிறந்த மென்பொருள்.நீங்கள் எடுக்கும் குறிப்புகளை பிரிண்ட் செய்யவும்,மெயில் அனுப்பவும் மற்றும் கலர்,எழுத்துரு மாற்றும் வாதிகளையும் கொண்டுள்ளது.(படத்தை பெரிதாக்கி பார்க்க)Simple Sticky Notes - Free Sticky Notes Software




200 Countries, 200 Years, 4 Minute
- இருநூறு நாடுகளின் மக்கள் தொகை வளர்ச்சி,பொருளாதார வளர்ச்சி 1810 முதல் 2010 வரை இருநூறு ஆண்டுகளில் எப்படி இருந்தது என்பது பற்றிய நான்கு நிமிட வீடியோ.கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்று.

Hans Rosling's 200 Countries, 200 Years, 4 Minutes


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,லக்கி லிமட்

சாப்ட் அண்ட் வெப் - 1

WinToFlash - நாம் எப்போதும் விண்டோhttp://www.blogger.com/img/blank.gifஸ் இயங்குதளத்தை CD அல்லது DVD போன்றவற்றில் இருந்து தான் நிறுவுவோம்.உங்கள் பென்டிரைவ்லிருந்து(USB) விண்டோஸ் இயங்குதளத்தை நிறுவ இந்த மென்பொருள் வழிவகை செய்கிறது.WinToFlash - Install Windows from usb<





Kaspersky Virus Removal Tool 2010
- பிரபல ஆண்டி வைரஸ் நிறுவனமான Kaspersky தரும் இலவச ஆண்டி வைரஸ் மென்பொருள்.உங்கள் கணிணியில் உள்ள வைரஸ்களை நீக்கி உங்கள் கணிணியை சுத்தம் செய்கிறது. Download Kaspersky Virus Removal Tool 2010





SearchMyFiles
- உங்கள் விண்டோஸ் கணிணியில் உள்ள கோப்புகளை அல்லது போல்டர்களை தேட விண்டோஸ் தரும் Search For Files and Folders விட வேகமான,பல வசதிகளை கொண்ட மென்பொருள். மேலும் இதில் டுப்ளிகேட் கோப்புகளை கண்டறியும் வசதியும் உள்ளது. SearchMyFiles - Alternative to the standard Search For Files And Folders module of Windows



YouTube - YouTubeல் அனைத்து திரைப்படங்களிhttp://www.blogger.com/img/blank.gifன் Trailerகளை நாம் பார்ப்பதுண்டு. YouTube இன் Trailerகளுக்கான பிரத்யோக தனி வலைபக்கம் இருக்கிறது.இதில் அண்மையில்,விரைவில் வரவிருக்கும் படங்களின் Trailerகள் வகைபடுத்தப்பட்டு எளிதாக பார்க்கும் வண்ணம் உள்ளது. வீடியோ கேம்களின் Trailerகளும் உள்ளது. YouTube - Trailers



AIMP2 - winamp போன்று பல வசதிகளையும்,பல வகையான ஆடியோ கோப்புகளை சப்போர்ட் செய்யும் சிறந்த மியூசிக் பிளேயர்.மேலும் பார்க்க அழகிய தோற்றங்களை கொண்டும் உள்ளது.AIMP - Free Music Player


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,லக்கி லிமட்