Saturday, November 28, 2009

Thumbs.db மற்றும் FOUND.000 இவைகள் வைரஸ்களா?

Thumbs.db
WindowsXP பரவலாக அனைவரும் உபயோகபடுத்த படுகிறது.WindowsXP Folder களில் Thumbs.db என்ற ஒரு File இருப்பதை பார்த்துருக்கலாம் .இதை பார்க்கும் போது நமக்கு ஏதோ வைரஸ் என தோன்றலாம் . ஆனால் இவை வைரஸ் இல்லை. WindowsXP யின் System File ஆகும்.

நீங்கள் WindowsXP யில் Folder View Option இல் Thumbnails என்ற Option ஐ பார்த்துருக்கலாம் . புகைப்படங்களின் சிறிய வடிவத்தை காட்டும் வசதி ஆகும் .இந்த புகைப்படத்தின் சிறிய வடிவம் விரைவாக தெரிய WindowsXP ஆல் உருவாக்கப்படும் ஒரு File அவ்வளவே. இது மிகச்சிறிய அளவே இடத்தை (Size) எடுத்து கொள்ளும் . இது போன்ற Files உங்கள் கணினியில் நிறைய இருந்தால் வேண்டுமானால் நீங்கள் இதை Delete செய்து கொள்ளலாம் .

இவ்வகை Files உருவாகாமல் இருக்க கீழ்க்கண்ட வழிமுறையை கடை பிடிக்கவும் .

1. My Computer -> Tools -> Folder Options செல்லவும்
2. View Tab கிளிக் செய்து அதில் Do not cache thumbnails என்பதை தேர்வு செய்யவும் .





FOUND.000
இதுவும் WindowsXP ஆல் உருவாக்கப்படும் File ஆகும். இது WindowsXP ஆல் ScanDisk உபயோகபடுத்தும் போது உருவாகப்படும் Files ஆகும் . இவை ந்மக்கு தேவையில்லாத Files எனவே இதனை நாம் அழித்து கொள்ளலாம் . இவை WindowsXP ஆல் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் . இவை உங்கள் கணினியில் தெரிந்தால் கீழ்க்கண்ட முறையில் மறைக்கலாம் .

1. My Computer -> Tools -> Folder Options செல்லவும்
2. View Tab கிளிக் செய்து அதில் Hide protected Operating System Files and Folders என்பதை தேர்வு செய்யவும் .



அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Friday, November 27, 2009

Mininova,Demonoid தளங்களுக்கு மாற்று தளங்கள்



பிரபலமான டோரன்ட் வழங்கும் தளங்களான Mininova,Demonoid தற்போது டோரன்ட் தருவதை நிறுத்தி உள்ளன . Demonoid தளம் ஏற்கனவே இரண்டு மாதங்களாக செயல் படவில்லை . தற்போது Mininova சட்டரீதியான டோரன்ட் தருவதை நிறுத்தி உள்ளது . Demonoid தளம் இயங்காதததை Mininova பூர்த்தி செய்து வந்தது . தற்போது இதுவும் நிறுத்தியதால் டோரன்ட் மூலம் Movies,Softwares டவுன்லோட் செய்து கொண்டிருந்தவர்களுக்கு பெரிய இழப்பாக உள்ளது .இதில் Demonoid தளம் விரைவில் இயங்கும் என கூறபடுகிறது .பிரபலமான இந்த இரு தளங்களுக்கு மாற்றாக சில தளங்கள் உள்ளன . டோரன்ட் ரசிகர்கள் இவைகளில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் .








1. thepiratebay.org/

2. isohunt.com

3. www.torrentbox.com/

4. http://www.h33t.com/

5. http://www.seedpeer.com/


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Tuesday, November 24, 2009

இரட்டையான கோப்புகளை அழிக்க உதவும் மென்பொருள்

தற்போது இணையம் வீட்டில் கணினி வைத்திருப்பவர்கள் அனைவராலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொவரும் அவர்களுக்கு தேவையானவற்றை உதாரணமாக songs,ebooks,ringtones,wallpaper டவுன்லோட் செய்வது உண்டு . பல கோப்புகளை டவுன்லோட் செய்யும் போது ஒரே மாதிரியான கோப்புகள் மீண்டும் டவுன்லோட் செய்ய வாய்ப்பு உண்டு. அதாவது Duplicate ஆக வாய்ப்பு உண்டு.இதே போல் பல இரட்டையான கோப்புகள் உங்கள் கணினியில் இருக்கலாம். இது போன்ற இரட்டையான கோப்புகளை நாமே தேடி பிடித்து அழிப்பது மிகவும் கடினம். இவைகளை அழிக்க ஒரு மென்பொருள் உள்ளது பெயர் Auslogics Duplicate File Finder

இந்த மென்பொருளில் உங்களுக்கு தேவையான Folders,Drives தேர்வு செய்து இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கலாம்.




மேலும் பெயர் மட்டுமன்றி Size,Content மற்றும் தேதி ஆகியவற்றை வைத்தும் இரட்டையான கோப்புகளை கண்டுபுடிக்கும் வசதி இதில் உண்டு.





இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்