Friday, June 25, 2010

வெற்று போல்டர்களை நீக்க

நமது கணிணியில் சில நேரங்களில் எந்த கோப்புகளும் இல்லாத வெற்று போல்டர்கள் உருவாகிவிடுவதுண்டு.இவற்றை ஒவ்வொன்றாக தேடி அளிப்பது கடினம்.இதற்கு உதவும் மென்பொருளை பற்றி பார்ப்போம்.

vanityremover என்ற இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை.தரவிறக்கிய பிறகு இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.



உங்களது கணிணியில் வெற்று போல்டர்களை நீக்க வேண்டிய பகுதியை(டிரைவ்) கொடுத்தால் போதும். உதாரணமாக C:\,D:\ .


நீங்கள் கொடுத்த டிரைவில் உள்ள அனைத்து வெற்று போல்டர்களையும் நீக்கி விடும்.இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, June 24, 2010

கோப்புகளை கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க விடாமல் தடுக்க

நாம் அவரவர் கணிணியில் பல கோப்புகளை வைத்திருப்போம் அவற்றில் நமக்கு தேவையான அல்லது முக்கியமான பல கோப்புகள் இருக்கும்.நாம் கணிணியை விட்டு அகன்றிருக்கும் போது யாராவது அதை தெரியாமல் அழிக்கவோ அல்லது நமக்கு தெரியாமல் காப்பி செய்து கொள்ளவோ முடியும்.இதை தடுக்க Prevent என்ற இந்த மென்பொருள் பயன்படுகிறது.

இந்த மென்பொருளை நிறுவிய பின் இயக்கினால் கீழ்க்கண்ட Window தோன்றும்.


இதில் Define Hotkey என்பதில் உங்களுக்கு எளிதான அல்லது நினைவு கொள்ளகூடிய வகையில் எதாவது Key தேர்வு செய்து கொள்க. உதாரணமாக Ctrl + B அல்லது Ctrl + C என ஏதாவது தேர்வு செய்து கொள்க.

தேர்வு செய்த பின் Activate என்ற பட்டனை அழுத்துக.பின் கீழ்க்கண்ட Window தோன்றும்.

இதில் OK கொடுத்த பின் நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்கவோ முடியாது.மேலும் கோப்பின் மேல் Right Click செய்து பார்த்தாலும் அனைத்து வசதிகளும் முடக்கப்பட்டிருக்கும்.கீழே உள்ள படத்தை பார்க்க.


உங்களுக்கு கோப்புகளை அழிக்க வேண்டுமானால் முன்பு தேர்வு செய்த key அழுத்தினால் போதும்.அதாவது முன்னர் Ctrl +B கொடுத்திருந்தால் அதை தற்போது அழுத்தினால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து விடும்.

தற்போது நீங்கள் எந்தவொரு கோப்புகளையும் கட்,பேஸ்ட்,காப்பி மற்றும் அழிக்க முடியும்.
இந்த மென்பொருளை தரவிறக்க இங்கே கிளிக் செய்க


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்


Monday, June 21, 2010

மென்பொருள் - உலககோப்பை கால்பந்து 2010 முடிவுகள்,அணிகளின் நிலைகளை உடனே அறிய

தற்போது உலககோப்பை கால்பந்து 2010 போட்டிகள் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டன. அனைவரும் கால்பந்து போட்டிகளின் முடிவுகளை உடனுக்குடனே அறிந்து கொள்ள ஆர்வமாக இருப்போம். மேலும் பல அணிகள் விளையாடுவதால் அந்த அணி எதனை எப்படி வென்றது என்பதையெல்லாம் நினைவு வைத்து கொள்ளவது கடினம்.இதற்காக ஒரு மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் பெயர் SOUTH AFRICA 2010.

இந்த மென்பொருளை நிறுவிய பின் முதலில் நம் நேரத்தை தேர்வு செய்து கொள்க.வெளிநாடு அன்பர்கள் அவர்கள் நாடுகளின் நேரத்தை தேர்வு செய்து கொள்க.


இந்த மென்பொருளில் ஒவ்வொரு குழு வாரியாக பிரிக்கபட்டிருக்கும் அணிகளின் போட்டிகள் விவரங்கள் குறித்து தனிதனியாக இருக்கும்.முதல் நிலை ,இரண்டாம் நிலை போட்டிகள் பிரிக்கபட்டிருப்பது தனிதனியாக இருக்கும்.

File -> Online Update... கிளிக் செய்து தற்போதைய போட்டி நிலைகளை அப்டேட் செய்து கொள்ளலாம்.


லீக் போட்டிகளுக்கான முடிவுகள் மற்றும் கால அட்டவணைகள் குழு வாரியாக


இரண்டாம் நிலை போட்டிகளுக்கான முடிவுகள் மற்றும் கால அட்டவணைகள்



அனைத்து அணிகளின் நிலை விவரங்கள்


அனைத்து போட்டிகளின் விவரங்கள், முடிவுகள்


File -> Online Update... கிளிக் செய்து போட்டி நிலைகளை உடனுக்குடன் அப்டேட் செய்து
கொள்ளலாம்.இந்த மென்பொருள் Mac,Linux,Windows போன்ற அனைத்து OSகளுக்கும் கிடைக்கிறது.இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே செல்லுங்கள்.

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Saturday, June 19, 2010

நெருப்புநரி நீட்சி Status Bar ல் தரவிறக்கங்களை பார்க்க

நெருப்புநரியில் நீட்சிகள் பல வகையில் நமக்கு பல வசதிகளை தருகின்றன.அவற்றில் ஒரு பயனுள்ள நீட்சி Download Statusbar.நான் நெடுங்காலமாக பயன்படுத்திகொண்டிருக்கும் நீட்சி இது.நாம் நெருப்புநரியில் தரவிறக்கி கொண்டிருக்கும் கோப்புகளையும்,தரவிறக்கப்பட்ட கோப்புகளையும் பார்க்க Download என்னும் தனி windowவை திறந்து பார்க்க வேண்டும்.



நீங்கள் உலவியில் உலவி கொண்டிருக்கும் போது தரவிறக்கங்கள் போட்டிருந்தால் அவ்வப்போது Download என்னும் தனி windowவை திறந்து பார்க்க வேண்டும்.இதற்கு பதிலாக எளிதாக உங்கள் நெருப்புநரி உலவியில் Status Bar ல் தரவிறக்கங்களை பார்க்க இந்த நீட்சி உதவுகிறது.உதாரணமாக கீழே உள்ள படத்தை பாருங்கள்.



மேலும் இதை Switch to Mini Mode கிளிக் செய்வதன் மூலம் மறைத்து கொள்ளலாம்.



வேண்டுமென்றால் கிளிக் செய்து Vertical மெனு போல பார்த்து கொள்ளலாம்.



தரவிறக்கங்களை தரவிறக்க வேகம்,தரவிறக்கம் நிறைவடைய இருக்கும் நேரம் போன்றவற்றையும் சேர்த்து காட்டுகிறது.இந்த நீட்சியை நிறுவ சுட்டி

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, June 17, 2010

பயனுள்ள பல வசதியுள்ள காலேண்டர்

விண்டோஸில் இருக்கும் காலேண்டர் நமக்கு பயன்பட்டாலும் சில அடிப்படை வசதிகளை மட்டுமே கொண்டுள்ளது.நாம் பார்க்க போகும் காலேண்டர் பல வசதிகளை கொண்டுள்ளது.



Calendar Magic என்னும் இந்த மென்பொருளை நிறுவிய பின் எந்த நாடு பின் எந்த ஊர் அல்லது நகரம் என தேர்ந்தேடுத்து கொள்ளலாம்.




நாம் அதிகமாக பயன்படுத்தும் ஆங்கில காலேண்டர் முதல் பல காலேண்டர் வசதிகள் உள்ளன.நமக்கு எது வேண்டுமென நாம் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். நான் இங்கே ஒரு மாதிரிக்கு Hindu காலேண்டர் தேர்ந்தெடுத்து உள்ளேன்.இது நமது தமிழ் மாதங்களுக்கு இணையான நாட்களையும் காட்டுகிறது.



மேலும் நமது ஹிந்து பண்டிகைகள் போன்றவற்றையும் காட்டுகிறது. 2000 முதல் 2040 வரை ஹிந்து பண்டிகைகளை காட்டுகிறது.இது ஹிந்து பண்டிகைகளுக்கு மட்டுமே.



மேலும் இது காலேண்டர் மட்டுமல்லாமல் மேலும் பல வசதிகளை கொண்டுள்ளது.அவற்றில் சிலவற்றை கீழே உள்ள படத்தை பெரிதாக்கி பாருங்கள்.



இதில் உள்ள பல வசதிகளை அறிய இங்கே கிளிக் செய்க.இந்த காலேண்டர் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Tuesday, June 15, 2010

நெருப்புநரி நீட்சி : பொறுமையாக படிக்க விரும்புவதை புக்மார்க் செய்ய

உலவிகளில் புக்மார்க் எனும் வசதியை நாம் அறிவோம்.நாம் அடிக்கடி பர்ர்க்கும் இணையதளங்களையும்,பொறுமையாக படிக்க விரும்பும் இணையதளங்களையும் புக்மார்க் மூலம் சுட்டிகளை சேமித்து விட்டு எளிதாக மீண்டும் தேவைப்படும் நேரத்தில் பார்க்கலாம்.

ஆனால் நீங்கள் அடிக்கடி பர்ர்க்கும் இணையதளங்கள்,பொறுமையாக படிக்க விரும்பும் இணையதளங்கள் என புக்மார்க் சுட்டிகளை பிரிக்கலாம்.அடிக்கடி பர்ர்க்கும் இணையதள சுட்டிகள் நமக்கு எப்போதும் தேவைப்படும். ஆனால் சில இணையதள பக்கங்களை அப்புறமாக பொறுமையாக படிக்க விரும்புவோம். ஆனால் படித்தவுடன் இந்த சுட்டிகள் தேவைபடாது.

இரண்டு வகை புக்மார்க்குகளையும் தனித்தனியே பிரித்து அறிவது கடினமாக இருக்கும்.இதற்கு பதிலாக தனியாக ஒரு போல்டரில் போட்டாலும் ஒவ்வொரு முறையும் அந்த போல்டரில் இணைப்பதும் சலிப்பூட்டும்.

இதற்கு Save To Read என்ற நெருப்புநரி நீட்சி உதவுகிறது. இந்த நீட்சியை நிறுவிய பின் நீங்கள் பொறுமையாக படிக்க விரும்பும் பக்கத்தின் Address Barஇல் தோன்றும் + என்ற குறியீடை கிளிக் செய்தால் அந்த பக்கம் தனியாக சேமிக்க பட்டுவிடும்



இந்த சுட்டி தனியே கீழ்க்கண்ட முறையில் சேமிக்க பட்டு இருக்கும்.



இதன் மூலம் பொறுமையாக படிக்க விரும்புவதை எளிதாக தனியாக வைத்து கொள்ளலாம்.இந்த சுட்டிகளை மொத்தமாக காண கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தவும்.

View -> Toolbars -> Cutomize சென்று கிளிக் செய்க



தோன்றும் windowவில் உள்ள கீழ்க்கண்ட ஐகானை Drag செய்து உங்கள் Tool Barஇல் போட்டு கொள்ளவும்.



பின் அந்த ஐகானை கிளிக் செய்தால் அனைத்து புக்மார்களும் தோன்றும்.



Address Barஇல் தோன்றும் - என்ற குறியீடை கிளிக் செய்வதன் மூலம் அந்த பக்கத்தை புக்மார்க்கில் இருந்து நீக்கலாம்.

இந்த நெருப்புநரி நீட்சியை இங்கிருந்து நிறுவி கொள்ளலாம்.


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Protected by Copyscape Online Copyright Search

Monday, June 14, 2010

உங்கள் கணிணிக்கு அழகான Dock மெனு

நமது கணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் மென்பொருள்கள்,போல்டர்ஸ் போன்றவற்றிற்கு விரைவில் பயன்படுத்த ShortCut வைத்திருப்போம். அதற்க்கு பதிலாக கீழே உள்ளது போல் அழகான மெனுவாக வைத்து கொள்ளலாம்.



இந்த மெனு செயல்படும் விதம பற்றிய கீழே உள்ள வீடியோவை பாருங்கள்.




உங்களுக்கு தேவையான மென்பொருள்கள்,அப்ளிகேசன்ஸ் போன்றவற்றை இதில் சேர்த்து கொள்ளலாம்.சேர்ப்பதற்கு Drag & Drop முறையில் எளிதாக சேர்த்து கொள்ளலாம். மேலும் உங்களுக்கு பிடித்த முறையில் மெனு வடிவத்தை மாற்றி கொள்ளலாம்.



இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய சுட்டி


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Friday, June 11, 2010

பயன்படுத்தி பாருங்கள் - 6

XnView

புகைபடங்களை பெரிதாக்கி,சிறிதாக்கி போன்று பலவாறு பார்க்கவும்,வேறொரு புகைப்பட கோப்பாக மாற்றவும் பயன்படுகிறது.மேலும் Red Eye நீக்குதல்,Screen Capture ,Scan செய்ய ,புகைப்படங்களை slide showவாக பார்க்க மற்றும் புகைப்படங்களின் அளவை(Size) ஐ குறைக்க போன்று பல வசதிகளை கொண்டுள்ளது.



டவுன்லோட் செய்ய சுட்டி

Color Cop

சிறந்த முறையில் கலர் தேர்ந்தெடுக்கும் ஒரு மென்பொருள்.இதன் செயல்பாடு மற்றும் பயன்களை கீழே படத்தில் பாருங்கள்



டவுன்லோட் செய்ய சுட்டி

CopyChangedFiles

ஒரு Folder ல் பல கோப்புகள் இருக்கின்றன அவற்றில் பலவற்றை மாற்றி அமைத்து சேமித்து உள்ளீர்கள்.இவற்றில் குறிப்பிட்ட நாளில் இருந்து மாற்றியமைக்கப்பட்ட அதாவது Changed கோப்புகளை மட்டும் தனியே பிரித்து வேறொரு இடத்தில் சேமிக்க உதவுகிறது.



டவுன்லோட் செய்ய சுட்டி

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, June 10, 2010

கூகிள் Docs போல் மைக்ரோசாப்ட்ன் ஆபீஸ்

Google Docs பற்றி நாம் அறிந்திருப்போம்.Word,Excel போன்ற கோப்புகளை உருவாக்கவும்,பதிவேற்றி சேமித்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் உதவுகிறது. ஆனால் தற்போது கூகுளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட் தற்போது களமிறங்கி உள்ளது.

மைக்ரோசாப்ட் தற்போது மைக்ரோசாப்ட்ன் ஆபீஸ்(Microsoft Office) எனும் சேவையை துவங்கி உள்ளது.இதில் மைக்ரோசாப்ட்ன் Word,Excel,Powerpoint போன்ற கோப்புகளை உருவாக்கவும்,பதிவேற்றி சேமித்து கொள்ளவும், மாற்றியமைக்கவும் செய்யலாம்.




இதை பயன்படுத்த Windows Live ல் கணக்கு துவக்கி கொண்டால் போதும். மேலும் உங்கள் கோப்புகளை மைக்ரோசாப்ட் வழங்கும் SkyDrive எனும் சேவையில் பதிவேற்றி கொள்ளலாம். இது உங்களுக்கு 25GB அளவு இடம் தருகிறது.




மைக்ரோசாப்ட்ன் ஆபீஸ் சேவையை பயன்படுத்த சுட்டி

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Tuesday, June 8, 2010

சில பயனுள்ள விண்டோஸ் ரன் கட்டளைகள்



விண்டோஸில் Run என்னும் வசதியை பற்றி பலரும் அறிந்திருப்போம்.எந்த ஒரு அப்ளிகேஸனையும் விரைவில் திறக்க பயன்படுகிறது. உதாரணமாக கால்குலேட்டர் வேண்டுமானால் Run விண்டோ திறந்து Calc என டைப் செய்து Enter தட்டினால் போதும்.

இது போல பல கட்டளைகள் உள்ளன.அவற்றில் சிலவற்றை Pdf கோப்பாக கீழே தந்துள்ளேன்.அவற்றில் சில

அப்ளிகேஷன்ஸ் கட்டளைகள்
Add/Remove Programs appwiz.cpl
Administrative Toolscontrol admintools
Adobe Acrobat (if installed)acrobat
Adobe ImageReady
imageready
Adobe Photoshop
photoshop
Automatic Updateswuaucpl.cpl
Bluetooth Transfer Wizardfsquirt
Calculatorcalc



இங்கே கிளிக் செய்து Pdf கோப்பை டவுன்லோட் செய்க

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

Monday, June 7, 2010

உங்கள் Recycle Bin இல் மேலும் சில வசதிகள்

நாம் தற்போது பயன்படுத்தும் விண்டோஸில் உள்ள Recycle Bin ல் குறிப்பிட்ட சில வசதிகளே உள்ளது.விண்டோஸ் வழங்காத மேலும் சில மிகவும் பயன்படக்கூடிய வசதிகளை தற்போது நாம் பார்க்க போகும் RecycleBinEx என்ற மென்பொருள் தருகிறது.



விண்டோஸில் உள்ள Recycle Bin ல் நிறைய கோப்புகள் சேரும் போது அவைகளை பிரித்து பார்ப்பது எளிதல்ல.இந்த மென்பொருள் வழங்கும் வசதிகளில் முக்கியமான ஒன்று கோப்புகளை 2,7,15 நாட்களுக்கு முன்பு மற்றும் 1,2,3 மாதங்களுக்கு முன்பு Delete செய்யப்பட்ட கோப்புகள் என உங்கள் வச்திகேற்றவாறு பிரித்து அறியலாம்.மேலே உள்ள படத்தை பெரிதாக்கி காண்க.

மேலும் இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் Recycle Bin ல் Right கிளிக் செய்தால் 2,7,15 நாட்களுக்கு முன்பு மற்றும் 1,2,3 மாதங்களுக்கு முன்பு Delete செய்யப்பட்ட கோப்புகளை Recycle Bin ல் இருந்து நீக்க வசதிகள் இருக்கும்.இதன் மூலம் எளிதாக கோப்புகளை நீக்க முடியும்.கீழே உள்ள படத்தை பெரிதாக்கி காண்க.



உங்கள் தலையீடு இல்லாமல் தானாகவே சில நாட்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கு முந்தைய கோப்புகளை நீக்குமாறு வசதி செய்து கொள்ளலாம்.



இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Sunday, June 6, 2010

கூகுளில் முகப்பு பக்கம் Background ஐ மாற்றும் வசதி அறிமுகம்

கூகிள் தனது முகப்பு பக்கத்தின் Background ஐ மாற்றி கொள்ளும் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.Bing தளத்தில் Background இல் புகைப்படங்கள் இருக்கும் பார்க்க அழகாக இருக்கும்.ஆனால் கூகுளில் வெள்ளையாக இருக்கும்.இதனால் தற்போது கூகிள் இவ்வசதியை அறிமுகபடுத்தி உள்ளது.

இதற்கு கூகிள் முகப்பு பக்கம் செல்லுங்கள் பின் கீழ் இடது ஓரம் உள்ள Change background என்பதை கிளிக் செய்க


பின் தோன்றும் windowவில் உங்களுக்கு தேவையான புகைபடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை உங்கள் கணிணியில் இருந்து ஏற்றி தேர்வு செய்து கொள்ளுங்கள்.



தேர்வு செய்த பின் நீங்கள் அந்த புகைப்படத்தை Background ஆக அமைத்து கொள்ளலாம்.கீழே உள்ளது போல் உங்கள் கூகிள் முகப்பு பக்கம் மாறி விடும்.



நீங்களாக கொடுக்கும் புகைப்படம் .jpeg, .tif, .tiff, .bmp, .gif, .psd, .png, .tga போன்ற படங்களில் ஒன்றாகவும்,அளவு 800 x 600 உடையதாகவோ அல்லது மேலாகவோ இருக்கலாம்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Saturday, June 5, 2010

கணிணி எடுக்கும் மின்திறனை கணக்கிடும் மென்பொருள்

நமது அத்தியாவசிய பொருளில் ஒன்றாக மாறி கொண்டிருக்கும் ஒன்று கணிணி.உங்கள் கணிணி எவ்வளவு மின்சாரத்தை எடுக்கிறது என்பதை கணக்கிட மென்பொருள் ஒன்றை Microsoft அறிமுகபடுத்தியுள்ளது.



இந்த மென்பொருள் உங்கள் கணிணியின் திரை(Monitor),நினைவகம்(Memory) மற்றும் CPU எவ்வளவு மின்சாரத்தை பயன்படுத்துகின்றன என்பதை தனித்தனியாகவும் , மொத்தமாகவும் கணக்கிட்டு கூறுகிறது.இந்த மென்பொருளின் பெயர் Joulemeter.



இந்த மென்பொருளை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம்.ஆனால் இந்த மென்பொருளை இயக்க .NET Framework 3.5 தேவை.மேலும் மடிக்கணிணிகளுக்கான இந்த மென்பொருள் விரைவில் வெளியிட போவதாக Microsoft அறிவித்துள்ளது.


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....


அன்புடன் ,
லக்கி லிமட்

Friday, June 4, 2010

எளிய முறையில் புகைப்படத்தில் red eye நீக்க ஒரு Netதளம்

டிஜிட்டல் கேமராவில் புகைப்படங்கள் எடுக்கப்படும் போது சில நேரங்களில் Red eye விழுந்து நம் புகைப்படங்களை கெடுக்கும்.அதை நீக்க ஒரு வலைத்தளம் பற்றி காண்போம்.

முதலில் Red iGone வலைத்தளம் சென்று Red Eye விழுந்த புகைப்படத்தை பதிவேற்றி கொள்ளவும்.



பின் பதிவேற்றிய புகைப்படத்தில் Red Eye விழுந்த பகுதியை தேர்வு செய்து Continue கிளிக் செய்யவும்.




Continue கிளிக் செய்த பின் பார்த்தால் Red Eye நீக்கிய புகைப்படத்தை உங்களுக்கு தரும்.இதை நீங்கள் பதிவிறக்கி கொள்ளலாம்.



வலைதள சுட்டி



தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, June 3, 2010

MS Wordக்கு பதிலாக மாற்று மென்பொருள் DevVicky Word 2010

MS Word அனைவரும் பயன்படுத்தும் ஒன்று.இதற்கு மாற்றாக MS Word வசதிகள் கொண்ட இலவச மென்பொருள் DevVicky Word 2010.இதன் வசதிகளை பார்ப்போம்.




இந்த மென்பொருளின் சிறப்பம்சம் MS Word போலவே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது.மேலும் இதில் அனைத்து doc,docx கோப்புகளையும் திறந்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு doc கோப்பும் தனிதனி windowக்கு பதிலாக Tab வசதியை கொண்டுள்ளது.மேலே படத்தில் பார்க்க.



மேலும் word கோப்புகளை Pdf ஆக மாற்றும் வசதியும் உள்ளது.இதன் அளவு 7.13 MB மட்டுமே.மேலும் இதை Windows 7 இல் பயன்படுத்தலாம். ஆனால் MS Word மிக அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு இதனை பயன்படுத்த சிரமமாக இருக்கும்.மற்றபடி doc கோப்புகளை படிக்க மற்றும் சிறிய பயன்பாடுகளுக்கு பயன்படுத்துபவர்கள் இதை பயன்படுத்தலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்