Monday, May 31, 2010

நெருப்புநரி நீட்சி : அனைத்து Tabகளும் ஒரே இடத்தில்

நண்பர்களே,
நெருப்புநரியில் நீட்சி அதாவது Addon எனும் வசதி மூலம் பல பயன்பாடுகள் உள்ளன. அனைத்து Tabகளும் ஒரே Windowவில் காண உதவும்(கீழே உள்ள படத்தை பர்ர்க்க) ஒரு நீட்சி பற்றி இங்கே பாப்போம். ஏற்கனவே நான் பதிவிட்டுள்ள நெருப்புநரி நீட்சி பற்றிய பதிவுகளை இங்கே காணலாம்.



மேலே படத்தில் உள்ளது போல் அனைத்து Tabகளும் ஒரே இடத்தில் பார்க்க Tile Tabs எனப்படும் நீட்சி உதவுகிறது.இந்த நீட்சியை நிறுவிய பின் நீங்கள் நெருப்புநரியில் நீங்கள் பயன்படுத்தி கொண்டிருக்கும் அனைத்து tabகளையும் உங்கள் வசதிக்கேற்ப ஒரே Windowவில் வரவழைத்து கொள்ளலாம்.




மேலே படத்தில் காட்டிஉள்ளவாறு Menu Barஇல் Tile மெனுவுக்கோ அல்லது Right Click செய்தோ வரவழைத்து கொள்ளலாம். மீண்டும் பழைய நிலைக்கு வரவோ அல்லது மீண்டும் இந்த வசதிக்கு வரவோ வேண்டுமெனில் F9 அழுத்தினால் போதும். ஒரே நிலையிலோ அல்லது ஒரே வரிசையிலோ உள்ள Tabகளை Scroll செய்து பார்க்க F8 ஒருமுறை அழுத்தி விட்டு Scroll செய்யலாம்.

இந்த நீட்சியை நிறுவ இங்கே கிளிக் செய்யுங்கள்.


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....


அன்புடன் ,
லக்கி லிமட்

Thursday, May 27, 2010

பாக்டீரியா - ஒரு புகைப்படம், பல தகவல்கள்



நண்பர்களே,
பாக்டீரியா பற்றி நாம் அறியாத பல விஷயங்களை கீழே உள்ள ஒரு புகைப்படம் மூலம் அறிந்து கொள்ளலாம்.இந்த புகைப்படத்தை Online PhD Programs என்ற தளம் வெளியிட்டு உள்ளது. இந்த புகைப்படத்தில் உள்ள சில சுவராசியமான தகவல்கள் சில

* டாய்லெட்டை விட 100 மடங்கு அதிகமான பாக்டீரியா செல்போனில் உள்ளது.

* சாதாரணமான ஒரு பல் துலக்கும் பிரஸ்ஸில் ஒரு பாக்டீரியா உள்ளன.

* ஆண்களை விட பெண்கள் 50% அதிகமான பாக்டீரியாகளை கையில் கொண்டுள்ளனர்.

* கைகளை கழுவுவதன் மூலம் மிக குறைந்த அளவே நீக்கப்படுகிறது.

* அனைத்து பாக்டீரியாகளும் ஆபத்தானவை அல்ல.

* நமது கைகளில் 150க்கும் மேலான வகையான பாக்டீரியாகள் உள்ளன.



What You Need to Know about Bacteria


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்

ஜாக்கிரதை ! போலி ஜிமெயில் மெயில்

நண்பர்களே,

ஜிமெயில் போன்ற பிரபலமான தளங்களை குறி வைத்து பல ஹேக்கர்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கின்றது. ஜிமெயில் பயன்படுத்துபவர்களை குறி வைத்து 'Phishing' எனப்படும் தாக்குதல் தற்போது நடப்பதாக தெரியவந்துள்ளது.

Phishing உங்களது பர்சனல் தகவல்களை உங்களை ஏமாற்றி பெறுவது ஆகும். உதாரணமாக உங்கள் ஜிமெயில் கணக்கு பெயர்(User Name) மற்றும் கடவு சொல்லை(Password) அறிவது.

தற்போது ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயிலில் இருந்து வருவது போல் மெயில் வருகிறது. அந்த மெயில் கூறபடுவது என்னவென்றால்

ஜிமெயில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உங்கள் User Name,Password,Birth Date,Country ஆகிய தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டும். தவறினால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.


இப்படி வரும் மெயில்கள் ஜிமெயிலில் இருந்து அனுப்பபடுபவை அல்ல.ஹேக்கர்களால் அனுப்பபடும் ஒன்று. இதை நம்பி யாராவது தகவல்களை அனுப்பினால் அவர்களது பர்சனல் தகவல்களை ஹேக்கர்கள் அறிந்து கொள்வர்.

இப்படி வரும் மெயில்களின் ஆங்கில வடிவம்

The Gmail Team is working on total security on all accounts and as a result of this security upgrade we require all Gmail members to verify their account with Google. To prevent your account from disability you will have to update your information by clicking the reply button and filling the space below.

User Name:

Password:

Birth date:

Country:

Account owner that refuses to update his or her account within 72hours of receiving this warning will lose his or her account permanently.

Thank you for using Gmail!

The Gmail Team


ஆகவே நண்பர்களே இப்படி வரும் மெயில்களை நம்பி யாரும் உங்கள் தகவல்களை அனுப்ப வேண்டாம்.



தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்



Wednesday, May 26, 2010

GetFolderSize - ஃபோல்டர்களின் அளவை அறிய, ஆராய

நண்பர்களே,

நமது கணிணியில் பல கோப்புகள் வைத்திருப்போம்.பல கோப்புகளும் பல ஃபோல்டர்களில் வைத்திருப்போம். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது அதை அவைகளில் தேவையற்றவைகளை நீக்குவது சிறிது கடினம்.

சில ஃபோல்டர்களில் பல தேவையில்லாத கோப்புகள் இருக்கும். அவை உங்கள் கணினியின் கணிசமான அளவை ஆக்ரமித்து கொண்டு இருக்கும். சில நேரங்களில் நாம் கோப்புகளை இடம் மாற்றும் போது மாற்றி விட்டு இரண்டு இடங்களிலும் அதே கோப்புகளை வைத்து விடுவோம்.

GetFolderSize எந்த இந்த Softபொருள் சில பயன்களை நமக்கு தருகிறது. இதை நமது கணிணியை அலசி எந்த போல்டர்கள் அதிக இடத்தை ஆக்ரமித்து கொண்டிருக்கிறது என நமக்கு பட்டியல் இட்டு தருகிறது.



நமது கணிணி நினைவகத்தை Partition என்று பல பகுதிகளாக(Drive Ex., A:,C:,D:) பிரித்திருப்போம். ஒவ்வொன்றிலும் பல கோப்புகள் இருக்கும். இந்த Softபொருள் Drives களையும், நீங்கள தேர்வு செய்திருக்கும் டிரைவ்வில் உள்ள ஃபோல்டர்களையும் பட்டியல் இடுகிறது.

அளவு பெரிதாக உள்ள ஃபோல்டர்களை முதலிருந்து வரிசைபடுத்தி காட்டுகிறது.இதன் அதிகமான அளவு கொண்ட ஃபோல்டர்களை நாம் எளிதாக கண்டறிய முடியும்.மேலும் அளவு மட்டுமல்லாமல் ஃபோல்டர்கள் பிடித்திருக்கும் அளவு சதவீதத்தையும் காட்டுகிறது. வேண்டுமானால் நாம் குறைந்த அளவுள்ள ஃபோல்டர்களை முதலிருந்து வரிசைபடுத்தி காட்டுமாறு மாற்றி கொள்ளலாம். ஃபோல்டர்களின் அளவை Bytes, Kilobytes(kb), Megabytes(MB) and Gigabytes(GB) என எது உங்களுக்கு தேவையோ அந்த அளவில் அறிந்து கொள்ளலாம்.

இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்


blog counter

blog counter

Friday, May 14, 2010

பயன்படுத்தி பாருங்கள் - 5

Universal Extractor



Zip, rar, 7z, exe , bin|.cue, iso, போன்ற அனைத்து வகையான கோப்புகளையும் Extract செய்ய உதவும் ஒரு Softபொருள்.


Cleano




CCleaner போன்ற தற்காலிக கோப்புகளை துப்புரவு செய்யும் Softபொருள்களே துப்புரவு செய்ய முடியாத சில மறைமுக கோப்புகளையும் துப்புரவு செய்யும் சிறிய Softபொருள்.

Billy

எளிதாக பயன்படுத்தகூடிய 665kb அளவே உள்ள சிறந்த பாடல்கள் கேட்க உதவும் Softபொருள்.

http://www.uploadnsell.com/



உங்கள் ஓவியங்களை,படைப்புகளை,புத்தகங்களை மற்றும் உங்கள் கோப்புகளை விற்க உதவும் ஒரு Netதளம்.


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Thursday, May 13, 2010

ஜிமெயிலில் புகைப்படங்களையும் இனி நேரடியாக இணைக்கலாம்

நண்பர்களே,
ஜிமெயிலில் கோப்புகளை Drag & Drop முறையில் இணைப்பதை பற்றி ஏற்கனவே பதிவிட்டேன். இதை இங்கு ஜிமெயிலில் கோப்புகளை இணைக்க புதிய வசதி பார்க்கலாம். தற்போது புகைப்படங்களை இணைக்கும் வசதி வந்துள்ளது.




நாம் ஜிமெயிலில் புகைப்படங்களை நேரடியாக Compose செய்யும் போது இணைக்கவேண்டுமானால் Gmail Lab என்பதில் insert Images என்பதை Enable செய்து இணைக்க வேண்டும். ஆனால் தற்போது கோப்புகளை இணைப்பதை போல Drag & Drop முறையில் இணைக்கும் வசதி அறிமுகபடுத்த்பட்டுள்ளது. ஆனால் இந்த வசதி தற்போது google chrome இல் மட்டுமே பயன்படுத்த முடியும் விரைவில் அனைத்து உலவிகளுக்கும் வந்துவிடும்.

இதற்க்கு வசதியாக முதலில் உங்கள் Compose window வை தனியாக திறந்து கொள்க.இதற்கு Shift + Compose Mail என்பதை கிளிக் செய்யவேண்டும்.பின் இணைக்க வேண்டிய புகைப்படங்களை இழுத்து கொண்டு வந்து விட்டாலே போதும் அதுவே இணைந்து விடும். கீழே உள்ள புகைப்படத்தை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க.




தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Saturday, May 8, 2010

Explorer ++ எளிதாக, விரைவாக கோப்புகளை உலவ

நண்பர்களே,
வழக்கமாக நமது விண்டோஸ் கணிணியில் கோப்புகளை பார்க்கவோ,திறக்கவோ,செல்லவோ சுருக்கமாக சொன்னால் கோப்புகளை உலவ விண்டோஸ் தரும் Explorer பயன்படுத்துவோம்.Explorer++ என்பது ஒரு Softபொருள்.இதனை மேம்படுத்தப்பட்ட Explorer எனலாம்.வழக்கமாக நாம் பயன்படுத்தும் சாதாரண Explorer உடன் பல வசதிகளை சேர்த்து தருகிறது.

மேலும் இந்த Softபொருளை நாம் நிறுவ(Install) செய்ய தேவையில்லை.டவுன்லோட் செய்து அப்படியே Explorer++.exe என்பதை கிளிக் செய்து பயன்படுத்த ஆரம்பித்து விடலாம்.இதன் பயன்கள்...

எளிதாக கோப்புகளை தேடி செல்லலாம்,Browser களை போல Tab வசதி உண்டு.(கீழே படத்தில் பாருங்கள்) மேலும் Browser களை போல எளிதாக புக்மார்க்(BookMark) மற்றும் Shortcut வைத்து கொள்ளலாம்.கடைசியாக இந்த Size வெறும் 952kb தான்.



இந்த மென்பொருளை இந்த சுட்டியில் இருந்து டவுன்லோட் செய்து கிடைக்கும் explorer++_1.1_x86.zip என்ற கோப்பை Extract செய்து Explorer++.exe என்பதை கிளிக் செய்து பயன்படுத்த ஆரம்பித்து விடலாம்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Wednesday, May 5, 2010

நெருப்புநரியில் பல You Tube வீடியோகளை ஒரே நேரத்தில் தரவிறக்க

நண்பர்களே,
Youtube, Metacafe தளங்களில் இருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய நிறைய மென்பொருள்கள் உள்ளன.aTube Catcher என்ற Youtube வீடியோகளை டவுன்லோட் செய்ய மென்பொருள் பற்றி நான் ஏற்கனவே பதிவிட்டு உள்ளேன்.ஆனால் இந்த நெருப்புநரி Addon பல Youtube வீடியோகளை ஒரே நேரத்தில் தரவிறக்க உதவுகிறது.

இந்த Addon பெயர் BYTubeD.இதை நெருப்புநரியில் நிறுவிய பின் Youtube தளத்திற்கு செல்லவும்.உங்களுக்கு பிடித்தமான வீடியோகளை Search செய்து கொள்ளவும்.பின் நெருப்புநரியில் உள்ள Tools -> BYTubeD என்பதை கிளிக் செய்யவும்.கீழே உள்ள படத்தை பெரிதாக்கி பார்க்க.

கிளிக் செய்தவுடன் அந்த பக்கத்தில் உள்ள அனைத்து வீடியோகளும் கீழே உள்ளது போல் ஒரு window வில் தோன்றும் அதில் தேவையான வீடியோகளை தேர்வு செய்து start கிளிக் செய்து டவுன்லோட் செய்யவும்.


இந்த addon ஐ நெருப்புநரியில் நிறுவ இந்த சுட்டிக்கு சென்று Add to Firfox என்பதை கிளிக் செய்யவும்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Sunday, May 2, 2010

pdf கோப்புகளை இணைக்க மற்றும் பிரிக்க


நண்பர்களே,
Pdf கோப்புகள் அனைவரும் அறிந்ததே.பல தளங்கள் மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் கோப்பாக உள்ளது. பிரிண்ட் எடுப்பதற்கு உகந்த கோப்பாக மற்றும் ebook ஆகவும் அதிகம் பயன்படுகிறது.ஏற்கனவே நான் பதிவிட்ட இணைய பக்கங்களை pdf கோப்பாக மாற்றுவது பற்றிய பதிவை இந்த சுட்டியில் இணைய பக்கங்களை Pdf ஆக சேமிக்க பார்க்கவும்.

pdf கோப்புகளை இணைக்க மற்றும் பிரிக்க ilovepdf என்ற Netதளம் உதவுகிறது.இந்த Netதளத்தின் மூலம் 10 pdf கோப்புகளை ஒன்றாக ஒரே கோப்பாக இணைக்கலாம்.


மேலும் பல பக்கங்கள் உள்ள pdf கோப்பை தனி தனி pdf கோப்புகளாக பிரிக்கலாம்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Saturday, May 1, 2010

உங்கள் பென் டிரைவ்க்கு Start Menu

நண்பர்களே,
தற்போது பென் டிரைவ் ஏறக்குறைய கணிணி பயன்படுத்துபவர்கள் அனைவரும் பயன்படுத்துகிறார்கள்.CD,DVD யை விட பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால் பெரும்பாலும் கோப்புகளை எடுத்துச்செல்ல பயன்படுத்தபடுகிறது.64 GB அளவு பென் டிரைவ் கூட வந்துவிட்டது.

பென் டிரைவ்வை கையாள உதவும் ஒரு Softபொருள் பற்றி இங்கு பார்ப்போம். Windowsல் start menu அனைவரும் அறிந்துருப்போம். அது போல் நமது பென் டிரைவ்க்கு Start Menu போல் மெனு தருகிறது இந்த Softபொருள்.

இந்த மென்பொருளை நிறுவும் பொது உங்கள் பென் டிரைவ்ல் நிறுவி கொள்க.கீழே உள்ள புகைப்படத்தை பெரிதாக்கி பார்க்க படத்தில் உள்ளது போல் பென் டிரைவ்ல் நிறுவி கொள்க.


பின் பென் டிரைவ்ல் நிறுவி உள்ள psmenu.exe என்ற கோப்பை இயக்குக.முதன்முதலில் இயக்கும் போது கீழ்க்கண்ட செய்தி வரும் அதில் create AUTORUN file என்பதை தேர்வு செய்து கொள்க.இதன் மூலம் உங்கள் பென் டிரைவ்வை கணிணியில் இணைத்தவுடன் இயங்க தொடங்கி விடும்.


இந்த மென்பொருள் இயங்க தொடங்கிய பின் Tray யில் ஸ்டார்ட் மெனு போல் வந்து விடும் அதில் Settings தேர்வு செய்து கீழே உள்ளது போல் நீங்கள் அடிக்கடி பயன்படுத்தும் கோப்புகள்,Applications ஆகியவற்றை இணைத்து கொள்ளலாம்.


பென் டிரைவ்க்காண Start Menu கீழே உள்ளது போல் தோன்றும் .இதன் மூலம் உங்கள் பென் டிரைவ்வை எளிதாக பயன்படுத்தலாம்.



மெனுவில் உள்ள Close all running applications கிளிக் செய்வதன் மூலம் பென் டிரைவ்வை எளிதாக நீக்கலாம்.


இந்த Softபொருளை டவுன்லோட் செய்ய சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்