Tuesday, March 30, 2010

Multi Links - நெருப்புநரியில் ஒரே கிளிக்கில் பல சுட்டிகளை திறக்க

நண்பர்களே,
இன்று பல அன்பர்கள் பயன்படுத்தும் உலவியாக நெருப்புநரி( Firefox ) மாறிவருகிறது. நெருப்புநரியில் உள்ள Add-On வசதி மூலம் பல வசதிகளை ஏற்படுத்தி கொள்ளலாம். அதனலாயே நெருப்புநரி மிகவும் பிரபலமாகி வருகிறது.ஒரு உபயோகமான நெருப்புநரி வசதி பற்றி இங்கு பார்ப்போம்.

நாம் தினமும் பல வலைதளங்களை உலவுகிறோம்,பல சுட்டிகளை கிளிக் செய்து செல்கிறோம்.நாம் இங்கு பார்க்கப்போவது பல சுட்டிகளை ஒரே கிளிக்கில் திறக்க உதவும் ஒரு add-on வசதி.இதன் பெயர் Multi Links.

நீங்கள் கூகிள் போன்ற தேடுதளங்களை பயன்படுத்தும் போது பல சுட்டிகளை திறந்து பார்க்க வேண்டியதிருக்கும். அதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து திறக்க வேண்டும் இதை எளிதாக்க இந்த அத்து-on உதவுகிறது.இதை நெருப்புநரியில் நிறுவிய பின் உங்கள் நெருப்புநரியின் கீழ்வலது மூலையில் கீழ்க்கண்ட ஐகான் தோன்றும்.


இந்த ஐகானை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை On/Off செய்யலாம்.



மேலே படத்தில் உள்ளது போல் பல சுட்டிகள் உள்ள தளத்தில் உங்கள் Mouseன் Right கிளிக் பயன்படுத்தி சுட்டிகளை தேர்வு செய்தால் அனைத்தும் சுட்டிகளும் ஒரே நேரத்தில் திறக்கும்.சுட்டிகள் தனித்தனி Windowவில் தோன்ற வேண்டுமா அல்லது தனித்தனி tabஇல் தோன்ற வேண்டுமா என்பதை ஐகான் மீது Right கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட Windowவில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த add-on வசதியை இங்கிருந்து நிறுவி கொள்ளலாம்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Saturday, March 27, 2010

RapidTyping - உங்கள் தட்டச்சு வேகத்தை கூட்ட

நண்பர்களே,
மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.தற்போது கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.கணிணியில் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பும் போதோ,அலுவலக விடயமாக தட்டச்சு செய்யும் போது டைப்ரைட்டிங் தெரியவில்லை என்றால் நாம் தட்டச்சு பலகையில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் பார்த்து பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்.தற்போது நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் தட்டச்சு பழக தனியாக பயிற்சி செல்வது கடினம்.

rapidtyping என்ற எந்த மென்பொருள் நாம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட உதவுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் என்ன மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க


பின் உங்கள் தட்டச்சு பலகையின் வகையை தேர்வு செய்து கொள்க


அடுத்த படியாக இந்த மென்பொருள் தரும் பயிற்சிகளை செய்வதின் மூலம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட முடியும்.பயன்படுத்திபாருங்களேன்...


இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.


தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Thursday, March 11, 2010

Netதளங்கள் 11-மார்ச்-2010

நண்பர்களே,

Netதளம் 1

கோப்புகளை நண்பர்களிடம் பகிர்வதற்க்காக அல்லது சேமித்து வைக்க பல பதிவேற்றும் தளங்கள் Rapidshare,megaupload,sendspace,mediafire உள்ளன.இவற்றில் உங்கள் கோப்புகளை பதிவேற்றி பின் தளங்கள் தரும் சுட்டிகள் மூலம் கோப்புகளை நண்பர்களிடம் பகிரலாம்.இந்த தளங்களில் நீங்கள் வைத்திருக்கும் கணக்குகளை பொறுத்து கோப்புகள் சில நாட்களோ அல்லது பல நாட்களோ இருக்கும்.ஆனால் இந்த சில மணி நேரங்கள் வரை மட்டும் கோப்புகள் இருக்கும் படி செய்ய இயலாது.


senduit என்ற இந்த தளத்தில் நீங்கள் கோப்புகளை ஏற்றி எவ்வளவு நேரம் இருக்க வேண்டும் என தேர்வு செய்து கொள்ளலாம்.பின் இந்த தளம் தரும் சுட்டி மூலம் நீங்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் உங்கள் நண்பரையோ அல்லது மற்றவருடனோ கோப்பை பகிர்ந்து கொள்ளலாம்.Netதள சுட்டி.


Netதளம் 2

உங்கள் வலைப்பூவின் பதிவு சுட்டியோ அல்லது நீங்கள் கொடுத்த வேறு சுட்டிகளோ எத்தனை முறை மற்றவர்கள் சுட்டியுள்ளார்கள் என அறிய ClickMeter என்ற தளம் உதவுகிறது.


இந்த தளத்தில் உங்கள் சுட்டிகளை கொடுத்து இத்தளம் தரும் சுட்டியை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் சுட்டி எத்தனை முறை கிளிக் செய்யப்பட்டுள்ளது என அறியலாம்.Netதள சுட்டி.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


அருமை நண்பர்களே சான்றோர்களே.

பதிவர் செ.சரவணகுமாரின் இந்த பதிவை படித்ததும் கணத்தது மனது.
அவரின் விடுமுறையைக்கூட கழிக்காமல் தன் உயிர் நண்பர் கிருஷ்ணமூர்த்தி என்னும் வெள்ளந்தி மனிதருக்கு நாளை நடக்கப்போகும் பெரிய அறுவை சிகிச்சைக்காக பணத்திற்காக அலைந்து கொண்டிருக்கிறார். சிறு துளி பெறு வெள்ளம் என நாம் அறிவோம்.

உங்களால் முடிந்த தொகையை அவருக்கு அனுப்பியோ,மதுரை,சிவகாசிக்கு அருகே இருக்கும் அன்பர்கள் அவரிடம் நேரடியாக அழைத்தேவோ கொடுத்து உதவும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.பதிவர்கள் தங்கள் பதிவுகளில் இதை பதிவாக போட்டால் உதவ முடிகிறவர்களுக்கு ஏதுவாய் இருக்கும்

C.SARAVANAKUMAR.
STATE BANK OF INDIA
THIRUTHTHANGAL BRANCH
NEAR SIVAKASI
TAMIL NADU
AC NO:-20039361678
MOBILE NO:-+91 984851423

Thursday, March 4, 2010

விண்வெளியை உலவ ஒரு டெலஸ்கோப்


நண்பர்களே,
நாம் டெலஸ்கோப் பற்றி அறிந்துருப்போம்.விண்வெளியை காண உதவும் கருவி.இதை பயன்படுத்தி விண்வெளியை நாம் அனைவரும் பார்த்திருக்க மாட்டோம்.விண்வெளியை டெலஸ்கோப்பில் பார்ப்பது போல் நாம் பார்க்க Microsoft வழிசெய்துள்ளது.Microsoft ன் worldwidetelescope என்ற தளத்தின் மூலம் இந்த வசதியை பெறலாம்.



இந்த தளத்தின் மூலம் நமது பூமி,சூரியன்,சந்திரன் மேலும் ஒன்பது கோள்கள் ஆகியவற்றை விண்வெளியில் பார்க்கமுடியும்.மேலும் நமது பால்வெளிதிரள் மற்றும் சூரிய குடும்பம் முழுவதையும் பார்க்கலாம். இந்த தளத்திற்கு சென்றால் கீழ்க்கண்ட ஒரு வசதிகள் மூலம் பார்க்கலாம்.



ஒன்று இந்த தளத்திலேயே பார்வையிடலாம் அல்லது மென்பொருளை தரவிறக்கி நமது கணிணியில் நிறுவியும் பார்க்கலாம்.வலைத்தள சுட்டி


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்



Wednesday, March 3, 2010

உலவிகளின் தொகுப்பு



நண்பர்களே,
நாம் இணையத்தில் உலவ பல உலவிகளை(Browsers) பயன்படுத்துகிறோம்.இவைகளில் பெரும்பான்மையானவர்கள் IE மற்றும் Firefox பயன்படுத்துகின்றனர்.அடுத்தபடியாக தற்போது Google Chrome பயன்படுத்துகிறார்கள்.

Opera உலவியின் 10.5 தொகுப்பு நேற்று வெளியானது.புதிய Opera உலாவியானது வேகமாக இணையதளங்களை தரவிறக்குவதாக கருத்துகள் கூறுகின்றன.இவை தவிர Safari,Flock என பல உலவிகள் உள்ளன.

ஒவ்வொரு உலவியும் சில பயன்களை கொண்டுள்ளன.இணையத்தை உலவ உதவும் உலவிகளை ஒரே இடத்தில் தருகிறது browserchoice என்ற தளம்.



அனைத்து உலவிகளை பற்றிய தகவல்களுடன் டவுன்லோட் சுட்டிகளையும் தருகிறது.வலைத்தள சுட்டி

பல உலவிகள் இருந்தாலும் பாதுகாப்புடனும்,பல வசதிகளுடன் சிறந்த உலவியாக இருப்பது Firefox என்பது எனது கருத்து. உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்