Tuesday, September 22, 2009

புகைப்படங்களை தேவைக்கேற்ப மாற்ற


உங்கள் புகைப்படங்களை அல்லது உங்களுக்கு பிடித்த புகைப்படங்களை உங்களுக்கு பிடித்த மாதிரி மாற்ற நினைக்கலாம். உதாரணமாக உங்கள் புகைப்படத்தை கருப்பு வெள்ளையாக மாற்ற , புகைப்படத்தின் Size குறைக்க , புகைப்படத்திலிருந்து தேவையான பகுதியை வெட்ட விரும்பலாம்.இவை அனைத்தும் ஒரே தளத்தில் செய்ய வசதி உள்ளது. இத்தளத்தின் பெயர் Changes Images.இத்தளத்தில் என்னென்ன வசதிகள் உள்ளது என காண்போம்.

உங்கள் புகைப்படத்தின் Size ஐ மாற்றி அமைக்க உதவுகிறது. புகைப்படத்தை Upload செய்து என்ன Size என கொடுத்தால் போதும். அதை width,height மூலம் கொடுக்கலாம்.கீழே உள்ள படத்தை பார்க்க


புகைப்படங்களில் இருந்து தேவையான பகுதிகளை வெட்ட Crop Image வசத்ியை பயன்படுத்தலாம்.


கீழ்க்கண்ட படத்தில் உள்ள Image Effects பயன்படுத்தி உங்கள் படத்தை மேலும் உங்கள் விருப்பமான முறையில் மாற்றலாம் .


மேலும் உங்கள் புகைப்படத்தை வேற ஒரு format க்கு மாற்றவும் உதவுகிறது . உதாரணமாக jpg லிருந்து gif,பங் ஆகா மாற்றி கொள்ளலாம் . PDF ஆகா கூட மாற்றி கொள்ளலாம்.


தள முகவரி : http://www.change-images.com/ 
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Thursday, September 10, 2009

திரைப்படங்களின் Subtitle Edit செய்ய உதவும் மென்பொருள்


சிலர் ஆங்கில படங்களை Subtitle உதவியோடு பார்ப்பதுண்டு. Subtitle டவுன்லோட் செய்ய பல தளங்கள் உள்ளன. அவற்றில் சிறந்த  சில   தளங்கள் www.opensubtitles.org/ , http://subscene.com/



நாம் டவுன்லோட் செய்த சில Subtitles நம்மிடம் உள்ள திரைப்படத்தோடு பொருந்தாது போலாம் அல்லது 1 விநாடியோ , இரு விநாடிகளோ  முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ ஓடலாம். இவற்றை சரி செய்து சரியான முறையில் திரைப்படத்தை ரசிக்க இந்த மென்பொருள் உதவுகிறது. இதன் பெயர் SubMagic .இது ஒரு இலவச மென்பொருள். இதை எவ்வாறு உபயோகிக்கலாம் என்பதை பற்றி காண்போம் .

இந்த மென்பொருளில் வசதி என்ன என்றால் நம் திரைப்படத்தை இதில் Open செய்து மற்றும் Subtitle File ஐஉம் உடன் Open செய்து இரண்டையும் காணலாம். தவறாக உள்ள வார்த்தைகளை நாம் Edit செய்யலாம். கீழ்க்கண்ட புகைபடத்தை பார்க்க . அதில் வட்டமிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் வார்த்தைகளை Edit செய்யலாம் . மேலும் செவ்வக கோடிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் வரிகளை சேர்க்கலாம் ,வெட்டலாம் ,பிரிக்கலாம் மற்றும் இடமற்றலாம் .


மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த Subtitle File  1 விநாடியோ , இரு விநாடிகளோ  முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ இருந்தால் அவற்றை கீழ்க்கண்ட முறையில் சரிசெய்யலாம். கீழே உள்ள புகைப்படத்தை பார்க்க .அதில் செவ்வக கோடிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியில் இரு Options இருக்கும் .

ஒன்று All Subtitles மற்றொன்று Selection 

 
All Subtitles Option ஐ பயன்படுத்தி அனைத்து வரிகளையும் எவ்வளவு மணிகளோ,நிமிடங்களோ,விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்யலாம்.
  
Selection Option ஐ பயன்படுத்தி உங்களுக்கு தேவையான   வரிகளை மட்டும்  எவ்வளவு மணிகளோ,நிமிடங்களோ,விநாடிகளோ முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்யலாம். 
  
இதில் Sooner மற்றும் Later என உள்ள இரு Options முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ வர செய்ய உதவுகிறது .


மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த Subtitle File சில பிழைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் உதவுகிறது . கீழ்க்கண்ட புகைபடத்தை பார்க்க . அதில் வட்டமிட்டு காட்டபட்டிருக்கும் பகுதியின் மூலம் பிழைகளை சரி படுத்தலாம் .

Fix Now என்ற Option ஐ கிளிக் செய்தால் பிழைகளை சரிசெய்து தந்து விடும் .  மேலும் விபரங்களுக்கு மற்றும் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க .

படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் அல்லது Tamil10ல் அல்லது உலவு ல் பதிவு செய்து அனைவரும் அறிந்து கொள்ள உதவுங்கள் .


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

Thursday, September 3, 2009

Firefox போலவே CometBird மேலும் சில வசதிகளுடன்

Firefox Browser ஐ அறியாதவர்கள் இருக்க முடியாது.தற்போது பலர் Firefox  Browser ஐ உபயோகபடுத்துகிறார்கள். Firefox ல் உள்ள Addons மற்றும் Themes உபயோகம் அனைவருக்கும் பிடித்த ஒன்று.Firefox Mozilla Gecko Engine எனப்படும் மென்பொருளை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது . இதைபோலவே Mozilla Gecko Engine ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு Browser CometBird.இந்த Browser Firefox ஐ கொண்டு உருவாக்கப்பட்டு மேலும் சில வசதிகளை சேர்த்து உருவாக்கப்பட்டு உள்ளது .
 

 Mozilla Gecko Engine ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் பார்பதற்கு Firefox போலவே இருக்கும். Firefox ல் நாம் உபயோகபடுத்தும் அனைத்து வசதிகளையும் இதிலும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் . அதாவது Addons,Themes போன்றவற்றை .இது தவிர மேலும் இதில் சில உபயோகமுள்ள வசதிகள் உள்ளன. அவை என்னவென்று பார்போம் .


youtube ல் இருந்து நாம் நமக்கு பிடித்த Video டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் அது முடியாது . அதற்கென்று சில மென்பொருள் இன்ஸ்டால் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும். CometBird ல் இதற்கு வசதி உண்டு நீங்கள் youtube ல் வீடியோ பார்க்கும் போதே அதை டவுன்லோட் செய்யும் வசதி இதில் தரப்பட்டுள்ளது .

 

youtube ல் வீடியோ பார்க்கும் அதன் மேல் Right Click செய்தால் தோன்றும் மெனுவில் Download Media Files என்பதை தேர்வு செய்தால் தற்போது நீங்கள்  பார்க்கும் Video வின் Link இருக்கும் அதை கிளிக் செய்தால் video டவுன்லோட் ஆகி விடும் .

மேலும் தற்போது நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் install செய்துள்ள மென்பொருட்க்களின் latest version என்ன என்பதை காட்டும் வசதியும் உள்ளது . 



 நீங்கள் எதிபராதவிதமாக பார்த்து கொண்டிருந்த window வை close செய்து விட்டால் அதை ஒரே கிளிக் மூலம் திரும்ப கொண்டு வரும் Undo Tab வசதி உள்ளது .

இந்த Browser Firefox ஐ கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதால் Firefox new updates வெளிஇடும் போது இதற்கும் update வெளியடப்படும். எனவே இதனை எவ்வித security பற்றிய பயமும் இல்லாமல் உபயோகிக்கலாம்.டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க.மேலும் விபரங்களுக்கு ...


படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் அல்லது Tamil10ல் அல்லது உலவு ல் பதிவு இடுங்கள் .


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்