Thursday, September 3, 2009

Firefox போலவே CometBird மேலும் சில வசதிகளுடன்

Firefox Browser ஐ அறியாதவர்கள் இருக்க முடியாது.தற்போது பலர் Firefox  Browser ஐ உபயோகபடுத்துகிறார்கள். Firefox ல் உள்ள Addons மற்றும் Themes உபயோகம் அனைவருக்கும் பிடித்த ஒன்று.Firefox Mozilla Gecko Engine எனப்படும் மென்பொருளை உபயோகப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது . இதைபோலவே Mozilla Gecko Engine ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள மற்றொரு Browser CometBird.இந்த Browser Firefox ஐ கொண்டு உருவாக்கப்பட்டு மேலும் சில வசதிகளை சேர்த்து உருவாக்கப்பட்டு உள்ளது .
 

 Mozilla Gecko Engine ஐ பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளதால் பார்பதற்கு Firefox போலவே இருக்கும். Firefox ல் நாம் உபயோகபடுத்தும் அனைத்து வசதிகளையும் இதிலும் உபயோகப்படுத்தி கொள்ளலாம் . அதாவது Addons,Themes போன்றவற்றை .இது தவிர மேலும் இதில் சில உபயோகமுள்ள வசதிகள் உள்ளன. அவை என்னவென்று பார்போம் .


youtube ல் இருந்து நாம் நமக்கு பிடித்த Video டவுன்லோட் செய்ய வேண்டுமென்றால் அது முடியாது . அதற்கென்று சில மென்பொருள் இன்ஸ்டால் செய்து டவுன்லோட் செய்ய வேண்டும். CometBird ல் இதற்கு வசதி உண்டு நீங்கள் youtube ல் வீடியோ பார்க்கும் போதே அதை டவுன்லோட் செய்யும் வசதி இதில் தரப்பட்டுள்ளது .

 

youtube ல் வீடியோ பார்க்கும் அதன் மேல் Right Click செய்தால் தோன்றும் மெனுவில் Download Media Files என்பதை தேர்வு செய்தால் தற்போது நீங்கள்  பார்க்கும் Video வின் Link இருக்கும் அதை கிளிக் செய்தால் video டவுன்லோட் ஆகி விடும் .

மேலும் தற்போது நீங்கள் உங்கள் கம்ப்யூட்டரில் install செய்துள்ள மென்பொருட்க்களின் latest version என்ன என்பதை காட்டும் வசதியும் உள்ளது . 



 நீங்கள் எதிபராதவிதமாக பார்த்து கொண்டிருந்த window வை close செய்து விட்டால் அதை ஒரே கிளிக் மூலம் திரும்ப கொண்டு வரும் Undo Tab வசதி உள்ளது .

இந்த Browser Firefox ஐ கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளதால் Firefox new updates வெளிஇடும் போது இதற்கும் update வெளியடப்படும். எனவே இதனை எவ்வித security பற்றிய பயமும் இல்லாமல் உபயோகிக்கலாம்.டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்க.மேலும் விபரங்களுக்கு ...


படித்த பின் உங்கள் கருத்துகளை பதிவு செய்க.

இப்பதிவு உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் வாக்கை Tamilish ல் அல்லது Tamil10ல் அல்லது உலவு ல் பதிவு இடுங்கள் .


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.