Thursday, April 15, 2010

Dexpot - ஒன்றிற்கு மேற்பட்ட Desktopகள்

நண்பர்களே ,
Windows க்கான ஒரு பயனுள்ள softபொருள் Dexpot ஆகும்.Windows பயன்படுத்தும் அனைவரும் தங்களுக்கு பிடித்த மாதிரி Desktop ஐ மாற்றி கொள்வர்.உதாரணமாக நமக்கு பிடித்த புகைப்படங்களை Background ஆக வைத்து கொள்வது, நமக்கு தேவையான மென்பொருள்களின் Shotcut வைத்து கொள்வது.மேலும் விதவிதமான desktop themes நிறுவிகொள்வது போன்றவை.

சில பேர் Background ஐ மாற்றி கொண்டே இருப்பர்.ஒரு desktopக்கே இப்படி என்றால் பல desktopகள் இருந்தால் எப்படி இருக்கும்.நமக்கு பிடித்த மாதிரி பல டெஸ்க்டாப் இருந்தால் உதாரணமாக நான்கு இருந்தால் ஒவொன்றையும் ஒவ்வொரு மாதிரி வைத்து கொள்ளலாம்.Dexpot என்ற Softபொருள் இந்த வசதியை தருகிறது.


இதை நிறுவிய பின் நீங்கள் ஒன்றிற்கு மேற்பட்ட Desktopகள் வைத்து கொள்ளலாம்.ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு விதமாக வைத்து கொள்ளலாம்.Linuxல் workspace என இருக்கும் வசதியை போல் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த Softபொருளின் உதவி கொண்டு 20 Desktopகள் வரை வைத்து கொள்ளலாம்.

மிக எளிதாக எந்த டெஸ்க்டாப் வேண்டுமானாலும் மாறிகொள்ளலாம்.அலுவலகத்தில் இதை பயன்படுத்தி ஒன்றில் அலுவலக வேலைகளையும்,மற்றொன்றில் உங்களது மற்ற வேலைகலையோ அல்லது பொழுதுபோக்குகளையோ பார்த்து கொள்ளலாம்.


இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.