நமது கணிணியில் பல கோப்புகள் வைத்திருப்போம்.பல கோப்புகளும் பல ஃபோல்டர்களில் வைத்திருப்போம். கோப்புகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது அதை அவைகளில் தேவையற்றவைகளை நீக்குவது சிறிது கடினம்.
சில ஃபோல்டர்களில் பல தேவையில்லாத கோப்புகள் இருக்கும். அவை உங்கள் கணினியின் கணிசமான அளவை ஆக்ரமித்து கொண்டு இருக்கும். சில நேரங்களில் நாம் கோப்புகளை இடம் மாற்றும் போது மாற்றி விட்டு இரண்டு இடங்களிலும் அதே கோப்புகளை வைத்து விடுவோம்.
GetFolderSize எந்த இந்த Softபொருள் சில பயன்களை நமக்கு தருகிறது. இதை நமது கணிணியை அலசி எந்த போல்டர்கள் அதிக இடத்தை ஆக்ரமித்து கொண்டிருக்கிறது என நமக்கு பட்டியல் இட்டு தருகிறது.

நமது கணிணி நினைவகத்தை Partition என்று பல பகுதிகளாக(Drive Ex., A:,C:,D:) பிரித்திருப்போம். ஒவ்வொன்றிலும் பல கோப்புகள் இருக்கும். இந்த Softபொருள் Drives களையும், நீங்கள தேர்வு செய்திருக்கும் டிரைவ்வில் உள்ள ஃபோல்டர்களையும் பட்டியல் இடுகிறது.
அளவு பெரிதாக உள்ள ஃபோல்டர்களை முதலிருந்து வரிசைபடுத்தி காட்டுகிறது.இதன் அதிகமான அளவு கொண்ட ஃபோல்டர்களை நாம் எளிதாக கண்டறிய முடியும்.மேலும் அளவு மட்டுமல்லாமல் ஃபோல்டர்கள் பிடித்திருக்கும் அளவு சதவீதத்தையும் காட்டுகிறது. வேண்டுமானால் நாம் குறைந்த அளவுள்ள ஃபோல்டர்களை முதலிருந்து வரிசைபடுத்தி காட்டுமாறு மாற்றி கொள்ளலாம். ஃபோல்டர்களின் அளவை Bytes, Kilobytes(kb), Megabytes(MB) and Gigabytes(GB) என எது உங்களுக்கு தேவையோ அந்த அளவில் அறிந்து கொள்ளலாம்.
இந்த Softபொருளை தரவிறக்க சுட்டி
தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
blog counter
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.