![]() Microsoft Mathematics 4.0 - மாணவர்களுக்கான மைக்ரோசாப்ட்ன் எளிதாக கணக்குகளை போட ,பழக உதவும் மென்பொருள். அல்ஜிபிரா , திரிகோணவியல் , இயற்பியல் , வேதியியல் , கால்குலஸ் போன்ற கணக்குகளை போடவும்,பழகவும் முடியும்.ஒரு முழுமையான அறிவியல் கால்குலேடர் போலவும் பயன்படும். Download Microsoft Mathematics 4.0 |
avidPDF - ஆன்லைனில் எளிதாக PDF கோப்புகளை மட்டும் தேடவும் , தேடிய கோப்புகளை டவுன்லோட் செய்யாமல் ஆன்லைனிலேயே திறந்து பார்க்கவும் உதவுகிறது இந்த வலைத்தளம். PDF கோப்புகளை zoom செய்து பெரிதாகி தனி திரையில் பார்க்கும் வசதியும் உள்ளது. GO avidPDF |
உஷாராக இருங்கள் - கலிபோர்னியாவை சேர்ந்த பிரான்க் என்பவன் பல பெண்களின் நிர்வாண படங்களை அவர்களது ஈமெயில் கணக்கில் இருந்து திருடி பேஸ்புக்கில் வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளான்.மேலும் விசாரித்ததில் சுமார் 3200 நபர்களின் ஜிமெயில் மற்றும் யாஹூ ஈமெயில் கணக்குகளை ஹேக் செய்து அவர்களது ஈமெயில்களை திருடியுள்ளான். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் அவன் ஹேக் செய்ய எவ்வித மென்பொருளும் பயன்படுத்தவில்லை.இவன் ஹேக் செய்த அனைவரின் ஈமெயில் கணக்குகளின் செக்யூரிட்டி கேள்விகள் எளிதாக இருக்கவே அதை எளிதாக யூகித்து பதில் அளித்து அவர்கள் பாஸ்வோர்ட் பெற்று அவர்களது கணக்கில் புகுந்துள்ளான்.
Firefox 4 Beta 9 - ஃபயர்ஃபாக்ஸ்(நெருப்பு நரி) இன் அடுத்து வெளிவர இருக்கும் பதிப்பு Firefox 4. தற்போது ஃபயர்ஃபாக்ஸ் 4 இன் பீட்டா பதிப்புகளை வெளியிட்டு கொண்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக நேற்று பீட்டா 9 பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Download Firefox 4 Beta 9
இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
இதற்கு முந்தைய சாப்ட் அண்ட் வெப் பதிவு - சாப்ட் அண்ட் வெப் ,வீடியோ - 2
அன்புடன் ,
லக்கி லிமட்
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.