Thursday, November 22, 2012

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க - பாகம் 2

டவுன்லோட் செய்த படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க –  பாகம் 1 என்ற முதல் பதிவில் டவுன்லோட் செய்த திரைப்படங்களை டிவிடி பிளேயரில் பார்க்க வேண்டுமானால் அவை எவ்வகை வீடியோ கோப்பாக இருக்க வேண்டும் மற்றும் எவ்வகை வீடியோ கோப்பாக மற்றும் அமைப்பாக இருக்க வேண்டும் என்பதை பற்றி பார்த்தோம்.இப்பதிவில் இலவச மென்பொருள்களை பயன்படுத்தி எவ்வாறு DivX,XviD வீடியோ கோப்புகளாக மாற்றுவது மற்றும் எவ்வாறு டிவிடி(DVD) வீடியோ கோப்புகளாக பற்றி பார்ப்போம்.

முதலில் DivX அல்லது XviD சப்போர்ட் செய்யாத டிவிடி பிளேயருக்கு எந்தவொரு வீடியோ கோப்புகளிலிருந்து டிவிடி(DVD) அமைப்பு வீடியோ கோப்புகளாக மாற்றுவது பற்றி பார்ப்போம். இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள் உள்ளன. சில சிறந்த இலவச மென்பொருள்களே உள்ளன. அவற்றில் ஒன்று DVDFlick. இந்த மென்பொருளை இந்த Download DVD Flick சுட்டியை கிளிக் செய்து டவுன்லோட் செய்து நிறுவி கொள்க.

நிறுவிய பின் DVD Flick மென்பொருளை இயக்கினால் கீழே உள்ள திரை தோன்றும். அதில் டிவிடி(DVD) வீடியோ கோப்புகள் கணிணியில் எங்கே அல்லது எந்த போல்டரில்  வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க.


பின் Add Title என்பதை கிளிக் செய்து உங்கள் வீடியோ கோப்புகளை அல்லது திரைபடத்தை தேர்வு செய்து கொள்க. உதாரணமாக நான் இரு mkv  வீடியோ கோப்புகளை சேர்க்க போகிறேன்.



அடுத்தபடியாக Project Settings என்பதை கிளிக் செய்து, தோன்றும் திரையில் General என்பதை தேர்வு செய்து உங்கள் DVD அளவை தேர்வு செய்து கொள்க. பொதுவாக நாம் பயன்படுத்துவது DVD (4.3GB) இதை தேர்வு செய்து கொள்க.



பின் Video என்பதை கிளிக் செய்து உங்கள் DVD வகையை (Format) தேர்வு செய்து கொள்க. இதில் நீங்கள் PAL என்பதை தேர்வு செய்து கொள்க. PAL வகை DVDகளையே நமது நாட்டு டிவிடி பிளேயர்கள் சப்போர்ட் செய்யும். NTSC வகை DVDகளை சில நாட்டு டிவிடி பிளேயர்கள் சப்போர்ட் செய்யும் உதாரணம் அமெரிக்கா. ஆனால் தற்போது வரும் டிவிடி பிளேயர்கள் இரண்டையுமே சப்போர்ட் செய்கின்றன. PAL வகையை தேர்வு செய்வது சிறந்தது நமக்கு.



அடுத்து Burning என்பதை கிளிக் செய்து , உங்களுக்கு வீடியோ மாற்றம் செய்தவுடன் டிவிடியில் பதிய(Write or Burn) வேண்டுமானால் Burn project to disc என்ற வசதியை தேர்வு செய்து கொள்க. பிறகு நீங்களே தனியாக வேறொரு மென்பொருளை கொண்டு பதிய(Write or Burn) போகிறீர்கள் என்றால் தேர்வு செய்யாமல் விட்டுவிடுங்கள்.



அனைத்து முடிந்தவுடன் Accept என்பதை கிளிக் செய்து முகப்பு(Main) திரைக்கு வந்து அதில் குறிப்பிட்ட அல்லது அனைத்து வீடியோ கோப்புகளின் பெயரை மாற்ற வேண்டுமானால் Edit Title என்பதை கிளிக் செய்து தோன்றும் திரையில் மாற்றி கொள்ளலாம். மேலும் இந்த திரையில் கீழே படத்தில் உள்ளது போல்



Target aspect ratio –> Normal(4:3) மற்றும் WideScreen(16:9) என இரு வசதிகள் இருக்கும். உங்கள் டிவி சாதாரண டிவி என்றால் Normal(4:3), பெரிய அகலமான திரை கொண்ட LCD,LED டிவி என்றால் WideScreen(16:9) தேர்வு செய்து கொள்க.

மேலும் உங்கள் படத்துக்கு சப்டைட்டில் (Subtitle) இருந்தால் அது வீடியோ கோப்பின் பெயரிலே அதே போல்டரில் இருந்தால் தானே எடுத்து கொள்ளும். இல்லாவிடில் மேலே உள்ள திரையில் subtitle tracks என்பதை கிளிக் செய்து உங்கள் சப்டைட்டில் கோப்பை இணைத்து கொள்ளலாம்.

அடுத்தபடியாக Menu Settings கிளிக் செய்து உங்களுக்கு பிடித்த DVD Menu வகையை தேர்வு செய்து கொள்ளலாம்.



மேலே தேர்வு செய்த மெனு வகைக்கு கீழே உள்ளது போல் மெனு இருக்கும்.




கடைசியாக Create DVD கிளிக் செய்து டிவிடி வீடியோ கோப்புகள் உருவாகும் வரை காத்திருக்க.



நீங்கள் முன்னர் Burn project to disc என்ற வசதியை தேர்வு செய்திருந்தால் DvdFlick உடன் சேர்ந்து வரும் imgburn மென்பொருள் மூலம் பதிய(Write or Burn) பட்டு விடும். இல்லாவிடில் நீங்கள் முதலில் கொடுத்த கணிணி இடத்தில் (இங்கே நான் கொடுத்தது F:\dvd ) dvd என்னும் போல்டர் உள்ளே கீழே உள்ள அமைப்பில் கோப்புகள் இருக்கும்.



உங்கள் DVD பதிவு செய்யும்(Write or Burn) மென்பொருளில் மேலே உள்ள இரு போல்டர்களை மட்டும் தேர்வு செய்து டிவிடியில் பதிந்து(Write or Burn) கொள்க. நான் இங்கே தனியாக CDBurnerXP என்ற மென்பொருளை பயன்படுத்தி உள்ளேன்.



பதிந்த(Write or Burn) பின் உங்கள் டிவிடி பிளேயரில் டிவிடியை போட்டு உங்கள் டிவியில் கண்டு ரசிக்கலாம். அடுத்த பதிவில் DivX,XviD கோப்புகளாக மாற்றுவதை பார்க்கலாம்.




Download DVD Flick : http://www.dvdflick.net/download.php
Download CDBurnerXP : http://cdburnerxp.se/en/download

17 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிகப் பயனுள்ள பகிர்வு. நன்றி + புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. பயனுள்ள பதிவு. நான் இவ்வளவு நாள் பாவித்த ConvertXtoDVD என்ற மென்பொருளும் இதே போல் மிகவும் பயனுள்ளது.

    இதையும் ட்ரை செய்து பார்க்கிறேன்.

    ReplyDelete
  4. நல்ல பதிவு. இந்த மென்பொருளில் எந்திரன் திரைப்படத்தை டிவிடியாக மாற்றினேன். நேரம் தான் அதிகமாக எடுத்துக் கொள்கிறது.

    ReplyDelete
  5. ஹாலிவுட்ரசிகன் அவர்களே,
    நானும் ConvertXtoDVD தான் பயன்படுத்துகிறேன். அது தான் மிக சிறந்த மென்பொருள். ஆனால் அது கட்டண மென்பொருள் அதனால் தான் இதை பற்றி பதிவில் எழுதினேன்

    ReplyDelete
  6. பொன்மலர்,
    பொதுவாக அனைத்து டிவிடியாக மாற்றும் மென்பொருளும் மெதுவாகவே இருக்கிறது. நான்' பயன்படுத்தும் ConvertXtoDVDயும் அப்படிதான். நமது கணிணியின் வேகம் அதிகமாக இருப்பின் வேகமாக மாற்றங்களை பெறலாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  7. RMY பாட்சா ,கணேஷ் ,
    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  8. நன்றி!மிக அருமையான பதிவு.நானும் இந்த மென் பொருளைத்தான் பயன் படுத்துகிறேன்.\\இதற்கு பல சிறந்த கட்டண மென்பொருள்கள்\\.என எழுதியுள்ளீர்கள்.அவை என்ன? என்பதையும் தெரியப் படுத்தவும்.மேலும் ஒரு சந்தேகம்.டி வி டி இல் frame height and with அதிக பட்சம் 720-480 ஆகவே இருக்கிறது.இதை அதிகப்படுத்த முடியுமா?முடியுமென்றால் விளக்கவும்.

    ReplyDelete
  9. எசாலத்தான் நண்பரே,
    சிறந்த கட்டண மென்பொருள் ConvertXtoDVD - http://www.vso-software.fr/products/convert_x_to_dvd/

    டிவிடியில் அதிகபட்ச பிக்ஸல்(Pixel) 720x480 வரை. டிவிடி High Definition கிடையாது. bluray disc மட்டுமே High Definition கொண்டது. 1080p படங்கள் bluray discஇல் மட்டுமே சாத்தியம்

    ReplyDelete
  10. anaivarukkum ubayogamulla padhivu nandri surendra
    surendranath1973@gmail.com

    ReplyDelete
  11. நன்றி அய்யா.தங்களின் உடனடி பதிலுக்கு.கோபப்படாமல், என்னுடைய இன்னுமொரு சந்தேகத்தையும் தீர்க்கமுடியுமா?//டிவிடியில் அதிகபட்ச பிக்ஸல்(Pixel) 720x480 வரை. டிவிடி High Definition கிடையாது. bluray disc மட்டுமே High Definition கொண்டது. 1080p படங்கள் bluray discஇல் மட்டுமே சாத்தியம்// எனக் கூறியிருக்கிறீர்கள்.bluray disc ஐ
    டி வி டி பிளேயரில் உபயோகிக்க முடியுமா?முடியுமென்றால் எப்படி?தங்களின் பதில் கிடைக்குமென்ற நம்பிக்கையில் முன்கூட்டிய நன்றிகளுடன் - புத்தாண்டு வாழ்த்துகள்.நன்றி

    ReplyDelete
  12. எசாலத்தான் அவர்களே,

    முடியாது நண்பரே. Bluray disc Bluray பிளேயரில் மட்டுமே பயன்படுத்த முடியும். டிவிடியை ரெட்(red) லேசர்(laser) பயன்படுத்தி டிவிடி பிளேயர் read செய்கிறது. Bluray discஐ ப்ளூ(blue) லேசர்(laser) பயன்படுத்தி Bluray பிளேயர் read செய்கிறது.

    நீங்கள் High Definition வீடியோ bluray player தவிர கணிணியில் பார்க்கலாம்

    ReplyDelete
  13. எப்போதும் தேவைப்படும் பதிவு! நன்றி நண்பரே! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. நன்றி!மிக்க நன்றி!

    ReplyDelete
  15. நன்றி. பயனுள்ள பதிவு.

    ReplyDelete
  16. Thank u sir many days i was searched this. Today i am find out . This is my first visit and now am following you.

    ReplyDelete
  17. நண்பரே u torrentல் திரைப்படம் c:driveல் dataவாக உள்ளது அதை எப்படி
    காலி dvdல் copy செய்வது படம் பார்ப்பது
    plese help me

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.