Friday, July 24, 2009

Abduction - வலைப்பக்கங்களை Picture ஆக சேமிக்க உதவும் Firefox Addon

நீங்கள் Firefox உபயோகிப்பவரா இதோ ஒரு உபயோகமான Firefox Addon ,

சிலருக்கு தமக்கு பிடித்த வலைப்பக்கங்களை Picture ஆக படம் பிடித்து வைத்துக்கொள்ள அல்லது யாருக்காவது மெயில் அனுப்ப விரும்பலாம் .விண்டோஸ் இல் 'Print Screen' button உபயோகப்படுத்தி சிலர் வலைபக்கங்களை புகைப்படமாக எடுப்பார். ஆனால் இதில் screen இல் தெரியும் வரை தான் எடுக்க இயலும் . முழு வலைபக்கத்தையும் புகைப்படமாக சேமிக்க இந்த Firfox Addon Abduction உதவுகிறது.இதை இங்கிருந்து Firefox இல் நிறுவிக்கொள்ளலாம் .

இதை நிறுவிய பின் ஒருதடவை Firefox ஐ Restart செய்ய வேண்டும்.பின் பிடித்த வலைபக்கத்தில் Right Click செய்க.செய்தவுடன் தோன்றும் கீழ்க்கண்ட மெனு வில் Save Page As Image - Option ஐ கிளிக் செய்க

Save Page As Image - Option ஐ கிளிக் செய்தவுடன் கீழ்க்கண்ட window தோன்றும். அதில் உங்களுக்கு தேவையான வலைபக்க பகுதிகளை அல்லது முழு வலைபக்கத்தையும் சேமித்து கொள்ளலாம்

மேலும் உங்களுக்கு தேவையான Format இல் (PNG,JPG,GIF) என எது தேவையோ அதில் சேமித்து கொள்ளலாம் . மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்க




1 comment:

  1. நண்பரே புதிய வலைப்பூவிற்கு முதலில் என் வாழ்த்துக்கள்.

    பயனுள்ள தகவல்களை வழங்கியிருக்கிறீர்கள். தொடரட்டும் உங்கள் அதிரடி.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.