மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி.தற்போது கணிணியை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகம்.கணிணியில் நண்பர்களுக்கு ஈமெயில் அனுப்பும் போதோ,அலுவலக விடயமாக தட்டச்சு செய்யும் போது டைப்ரைட்டிங் தெரியவில்லை என்றால் நாம் தட்டச்சு பலகையில் உள்ள ஒவ்வொரு எழுத்துகளையும் பார்த்து பார்த்து தட்டச்சு செய்ய வேண்டும்.தற்போது நமக்கு இருக்கும் வேலைப்பளுவில் தட்டச்சு பழக தனியாக பயிற்சி செல்வது கடினம்.
rapidtyping என்ற எந்த மென்பொருள் நாம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட உதவுகிறது. இந்த மென்பொருளை நிறுவிய பின் என்ன மொழியில் தட்டச்சு செய்ய வேண்டும் என்பதை தேர்வு செய்து கொள்க

பின் உங்கள் தட்டச்சு பலகையின் வகையை தேர்வு செய்து கொள்க

அடுத்த படியாக இந்த மென்பொருள் தரும் பயிற்சிகளை செய்வதின் மூலம் எளிதாக தட்டச்சு பழக மற்றும் தட்டச்சு வேகத்தை கூட்ட முடியும்.பயன்படுத்திபாருங்களேன்...

இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி.
தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்
excellent typing tutor
ReplyDelete