Saturday, April 10, 2010

Launchy - Start Menuவை மறந்து விடுங்கள்

நண்பர்களே,
Windows ல் Start Menu அனைவருக்கும் தெரிந்ததே. நிறுவிய அனைத்து மென்பொருட்களையும் நாம் திறக்க உதவுகிறது. மென்பொருள்கள்,Control Panel,My Computer போன்ற அனைத்தையும் இதன் மூலம் சென்றடையமுடியும்.

ஆனால் பல மென்பொருள்கள் நிறுவிய உள்ள நண்பர்களுக்கு start menu பயன்படுத்தும் போது நமக்கு வேண்டிய மென்பொருளை தேடி பிடித்து கிளிக் செய்து நிறுவ வேண்டும். Launchy என்ற Softபொருள் இதனை எளிதாக்குகிறது. Start Menuவையே நீங்கள் பயன்படுத்த தேவையில்லை.இந்த மென்பொருளை நிறுவிய பின் இதை(Alt+Space) இயக்கினால் கீழே உள்ளது போல் தோன்றும்.


இதில் நமக்கு தேவையான மென்பொருளின் முதல் சில எழுத்துகளை டைப் செய்தால் போதும் நிறுவியிருக்கும் மென்பொருள்களை பட்டியலிடும். அதில் நமக்கு தேவையான மென்பொருளை கிளிக் செய்து உடனே திறந்து விடலாம்.இதன் மூலம் எளிதாக வேகமாக திறக்கலாம்.


இந்த softபொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

1 comment:

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.