Thursday, May 27, 2010

ஜாக்கிரதை ! போலி ஜிமெயில் மெயில்

நண்பர்களே,

ஜிமெயில் போன்ற பிரபலமான தளங்களை குறி வைத்து பல ஹேக்கர்கள் தாக்குதல் நடத்திய வண்ணம் இருக்கின்றது. ஜிமெயில் பயன்படுத்துபவர்களை குறி வைத்து 'Phishing' எனப்படும் தாக்குதல் தற்போது நடப்பதாக தெரியவந்துள்ளது.

Phishing உங்களது பர்சனல் தகவல்களை உங்களை ஏமாற்றி பெறுவது ஆகும். உதாரணமாக உங்கள் ஜிமெயில் கணக்கு பெயர்(User Name) மற்றும் கடவு சொல்லை(Password) அறிவது.

தற்போது ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயிலில் இருந்து வருவது போல் மெயில் வருகிறது. அந்த மெயில் கூறபடுவது என்னவென்றால்

ஜிமெயில் சில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக உங்கள் User Name,Password,Birth Date,Country ஆகிய தகவல்களை உடனடியாக அனுப்ப வேண்டும். தவறினால் உங்கள் கணக்கு முடக்கப்படும்.


இப்படி வரும் மெயில்கள் ஜிமெயிலில் இருந்து அனுப்பபடுபவை அல்ல.ஹேக்கர்களால் அனுப்பபடும் ஒன்று. இதை நம்பி யாராவது தகவல்களை அனுப்பினால் அவர்களது பர்சனல் தகவல்களை ஹேக்கர்கள் அறிந்து கொள்வர்.

இப்படி வரும் மெயில்களின் ஆங்கில வடிவம்

The Gmail Team is working on total security on all accounts and as a result of this security upgrade we require all Gmail members to verify their account with Google. To prevent your account from disability you will have to update your information by clicking the reply button and filling the space below.

User Name:

Password:

Birth date:

Country:

Account owner that refuses to update his or her account within 72hours of receiving this warning will lose his or her account permanently.

Thank you for using Gmail!

The Gmail Team


ஆகவே நண்பர்களே இப்படி வரும் மெயில்களை நம்பி யாரும் உங்கள் தகவல்களை அனுப்ப வேண்டாம்.



தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்



6 comments:

  1. அனைவரும் அறிந்து கொள்ளவேண்டிய தகவல்

    ReplyDelete
  2. வணக்கம்
    நண்பர்களே

    உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

    உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
    நன்றி
    தலைவன் குழுமம்

    www.thalaivan.com

    ReplyDelete
  3. மிகவும் உபயோகமான தகவல் .நன்றி.

    ReplyDelete
  4. மக்கள் நலனில் அக்கறை கொண்டு நீங்கள் பகிரும் செய்திகளுக்கு நன்றி.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.