
முதலில் இந்த நீட்சியை கொண்டு வலைதளங்களில் உள்ள எந்தவொரு கோப்பையும் எப்படி பதிவிறக்குவது என்பதை காண்போம்.முதலில் பதிவிறக்க வேண்டிய வலைதளத்திற்கு சென்ற பின் கீழ்கண்ட முறையில் வசதியை தேர்வு செய்க.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)
DownThemAll என்பதை கிளிக் செய்த பின் கீழே உள்ள Window தோன்றும்.
இதில் வலைதளத்தில் உள்ள அனைத்து கோப்புகளும் படங்கள்,வீடியோ உட்பட அனைத்தும் பட்டியலிடபட்டிருக்கும். உங்களுக்கு தேவையானவைகளை தேர்வு செய்து எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்.மேலும் வலைதளத்தில் உள்ள சுட்டிகள் சுட்டும் பக்கங்களையும் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மேலும் இந்த நீட்சி நீங்கள் பதிவிறக்கும் கோப்புகளை வேகமாக பதிவிறக்க மற்றும் நிறுத்தி வைத்து பின்னர் பதிவிறக்க வசதி போன்ற வசதிகளை கொண்ட சிறந்த Download Manager ஆகவும் பயன்படும்.
இதற்கு நெருப்புநரியில் ஒரு கோப்பை டவுன்லோட் செய்யும் போது காட்டும் windowவில் DownThemAll என்பதை தேர்வு செய்தால் போதும்.பின்னர் கீழ்காணும் வழிமுறைகளை பின்பற்றுக.(படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்க)
கோப்பை சேமிக்கும் இடத்தை தேர்வு செய்க.
பின் start கிளிக் செய்தால் கோப்பு பதிவிறக்க ஆரம்பித்து விடும்.
இந்த நீட்சியை நிறுவ இங்கு செல்க.மேலும் விபரங்களுக்கு இங்கு செல்க.
இன்ட்லி,தமிழ்10ல் மற்றும் தமிழ்மணம் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
0 comments:
Post a Comment
உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.