Monday, February 21, 2011

வீடியோ கேம் - பழி வாங்கும் பறவைகள்



ஐபோன்(iPhone) விளையாட்டாக அறிமுகபடுத்தப்பட்ட இந்த வீடியோ கேம் ஐபோன் கேம்களிலேயே கொடி கட்டி பறந்தது. ஐபோன் கேம் டவுன்லோட் தளமான ஐடியூன்ஸ்(iTunes) தளத்தில் அதிகமாக டவுன்லோட் செய்யப்பட்ட கேம்களில் ஒன்று. தற்போது விண்டோஸ் இயங்குதளத்தில் விளையாட அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.

இந்த விளையாட்டின் கதை பழிவாங்கல் தான். வில்லன்களான பன்றிகள் பறவைகளின் முட்டைகளை களவாடி சென்று விட கோபமான பறவைகள் பன்றிகளை பழிவாங்குகின்றன.பன்றிகள் இரும்பு,கல் மற்றும் ஐஸ் ஆகிவற்றில் ஆன கட்டிடங்களில் ஒளிந்து கொள்ள பறவைகள் தங்களை கவன் வில்லின் மூலம் ஏறிய செய்து கட்டிடங்களை இடித்து பன்றிகளை கொல்கின்றன.






முதலில் எளிதாக உடையும் கட்டிடங்கள் பின் அடுத்தடுத்த லெவல் செல்ல செல்ல நமது திறமைக்கு சவால் விடுகின்றன. எங்கே இடித்தால் கட்டிடம் உடையும்,எந்த பறவையை கொண்டு உடைத்தால் உடையும் என யோசித்து விளையாட வேண்டியது உள்ளது.கட்டிடத்தை உடைக்க ஆறு விதமான பறவைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான இயல்புகளை கொண்டுள்ளன.







சிவப்பு பறவையிடம் சிறப்பான இயல்பு எதுவுமில்லை நேரே சென்று இலக்கை தாக்கும்.

நீல நிற பறவை பாய்ந்தவுடன் மீண்டும் ஒரு கிளிக் செய்தால் மூன்றாக சென்று தாக்கும்.இது ஐஸ் கட்டிகளை உடைக்க வல்லது.

மஞ்சள் பறவை மரகட்டைகளை உடைக்க வல்லது.பாய்ந்தவுடன் மீண்டும் ஒரு கிளிக் செய்தால் படு வேகமாக செல்லும்.தொலைதூர இலக்கை தாக்கவும் சிறந்தது.

கறுப்பு பறவை கற்களை உடைக்க வல்லது.இலக்கை அடைந்து வெடிக்கும் இயல்பு உடையது.

வெள்ளை பறவை பாய்ந்தவுடன் மீண்டும் ஒரு கிளிக் செய்தால் முட்டை இட்டு வெடிக்க செய்யும்.

பச்சை பறவை பூமராங் இயல்பு கொண்டது. பூமராங் போல் திரும்பி வந்து தாக்கும்.



இந்த விளையாட்டு அனைவரையும் கவரும். மேலும் இந்த விளையாட்டு தனியாக கிராபிக்ஸ் கார்டு எதுவும் தேவையில்லை. ஆனால் உங்களது Display driver இதற்க்கு உடன்பட வேண்டும் இல்லாவிடில் இயங்காது. எனது XP SP2 இல் இயங்கவில்லை. ஆனால் Windows 7 இயங்குதளத்தில் SlimDriver கொண்டு Display driver அப்டேட் செய்த பின் இயங்குகிறது. மற்றொரு விஷயம் இது இலவசம் கிடையாது. ஆனால் டோர்ரன்ட் தேடினால் கிடைக்கிறது.மேலும் தகவலுக்கு கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்க.

Rovio - Angry Birds


இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....அன்புடன் ,
லக்கி லிமட்

2 comments:

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.