Friday, February 11, 2011

கூகுளின் தமிழ் விசைபலகை - மீள்பதிவு

கூகிள் பிற மொழிகளுக்கான விசைபலகை மென்பொருளை தருகிறது. இதன் மூலம் இணைய இணைப்பு இல்லாமலே இனி நீங்கள் தமிழில் தட்டச்சு செய்யலாம் . இதன் பெயர் Google IME. இது தனியாக வேறு எங்கும் செல்லாமல் எங்கு தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமோ அங்கு செய்யலாம். உதாரணமாக நீங்கள் Notepadல் தமிழில் தட்டச்சு செய்ய வேண்டுமானால் செய்யலாம் , வலைப்பூவில் பதிவு போடும் போதும் பயன்படுத்தலாம் .



இதை இங்கிருந்து( Download Google IME ) டவுன்லோட் செய்து கொள்க .


டவுன்லோட் செய்த பின் உங்கள் கணிணியில் நிறுவவும் . நிறுவிய பின் WindowsXPல் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றுக .

உங்கள் கணிணியில் Task Bar ல் Right Click செய்து Language Bar என்னும் வசதியை தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதி உங்களுக்கு வரவில்லையென்றால் கீழ்க்கண்ட வழிமுறையை பின்பற்றுக.

1. முதலில் Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Advanced Tab செல்லவும் .
2. அதில் System configuration என்ற பட்டையில் Turn off advanced text services என்ற வசதி டிக் செய்யப்பட்டு இருந்தால் அதை எடுத்து விடுக .

இதற்க்கு பின் கணிணியை Restart செய்ய வேண்டியிருந்தால் செய்க .

3. பின் Control Panel -> Regional and Language Options -> Languages tab -> Text services and input languages (Details) -> Settings Tab சென்று
4. Language Bar என்பதை கிளிக் செய்க



5. Show the Language bar on the desktop என்பதை தேர்வு செய்து Ok செய்க

இதற்க்கு பின் உங்கள் Desktopல் கீழே உள்ள Icon தோன்றி இருக்கும் . அதை கிளிக் செய்க
அதில் Tamil வசதியை தேர்வு செய்து கொள்க . தேர்வு செய்த பின் தமிழ் விசைபலகை உங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுவிடும் . இனி நீங்கள் எங்கு வேண்டுமானாலும் தமிழில் தட்டச்சு
செய்யலாம் .





தமிழில் தட்டச்சு செய்யும் போது ஆங்கிலத்தில் அடிக்க Ctrl + G அழுத்தினால் ஆங்கிலத்திலும் மீண்டும் அழுத்தினால் தமிழிலும் தட்டச்சு செய்யலாம் .

WindowsXP தவிர Vista/Windows 7 பயன்படுத்துபவர்கள் மேலும் விபரங்களுக்கு இங்கே கிளிக்கவும்

இன்ட்லி,தமிழ்மணம் மற்றும் தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்







2 comments:

  1. நான் நீண்ட நாட்களாக பயன்படுத்தும் NHM Writer எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அது என்னவோ கூகிள் உள்ளீட்டுக் கருவி என் கணினியில் மெதுவாக இயங்குகிறது.

    ReplyDelete
  2. நீண்டகால தேடலை எனக்கு காண்பித்த நண்பருக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.