Friday, December 4, 2009

Guerrilla Mail - கொரில்லா மெயில் - தற்காலிக உபயோகத்திற்கு

இணையத்தில் பல இணைய தளங்கள் புதியது புதியதாக வருகின்றன . நாமும் தினமும் பல புதிய இணைய தளங்களை பார்க்கிறோம் . அவை Forum அல்லது விளையாட்டு தளமாக கூட இருக்கலாம் . உங்களுக்கு தேவையான சில தகவல்கள் Forum ல் இருக்கலாம் அல்லது கொஞ்ச நேரம் நீங்கள் விளையாட்டு தளத்தில் விளையாட நினைக்கலாம் .ஆனால் Forum ல் இருந்து தகவலை பெறவோ , விளையாட்டு தளத்தில் விளையாடவோ உங்களை புதிய கணக்கு உருவாக்க அந்த தளம் சொல்லலாம் . மேலும் அதற்க்கு உங்களது மெயில் முகவரி கொடுக்கவேண்டியது வரலாம் .அப்படி நீங்கள் உங்கள் மெயில் முகவரி கொடுத்து அதற்க்கு அவர்கள் அனுப்பும் சுட்டியை கிளிக் செய்வதன் மூலம் தான் புதிய கணக்கு உருவாக்க முடியும் .

இந்நிலையில் நீங்கள் உங்கள் மெயில் முகவரி கொடுக்கவேண்டிய நிலை வரும் . இப்படி உங்கள் மெயில் முகவரி கொடுப்பதால் உங்கள் மெயில் முகவரிக்கு நிறைய Spam மெயில் வரலாம் .ஆனால் உங்களுக்கு புதிய கணக்கு துவக்க மெயில் முகவரி தேவை .இந்நிலையில் நீங்கள் கொரில்லா மெயில் பயன்படுத்தலாம் .

இந்த கொரில்லா மெயில் தளம் உங்களுக்கு ஒரு தற்காலிக மெயில் முகவரி தரும் . இந்த மெயில் முகவரி ஒரு மணி நேரம் வரை நீடிக்கும் .




நீங்கள் இந்த மெயில் முகவரியை பயன்படுத்தி புதிய கணக்கு துவக்கி கொள்ளலாம் . இது ஒரு மணி நேரம் வரி நீடிப்பதால் நீங்கள் புதிய கணக்கு துவக்கும் தளத்தில் இருந்து வரும் மெயில் களை இதில் பார்த்து கொள்ளலாம் . அங்கிருந்து வரும் Verification mail களை இங்கேயே பார்த்து கொள்ளலாம் . இதன் மூலம் நீங்கள் உங்கள் மெயில் முகவரி தராமல் புதிய கணக்கு துவக்கி கொள்ளலாம் .


வலைதள சுட்டி


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.