Monday, December 14, 2009

அனைத்து மென்பொருள்களும் ஒரே நிறுவலில்

வழக்கமாக நம் கணிணியில் தேவையான மென்பொருள்களை ஒவ்வொன்றாக இணையதளத்தில் டவுன்லோட் செய்து பின் அதை நம் கணிணியில் நிறுவுவோம் . புதியதாக ஒரு கணிணி வாங்கினால் இதேபோல் டவுன்லோட் செய்து நிறுவுவது சற்று சலிப்பூட்டும் வேலையாக இருக்கும் .

ஏற்கனவே Backup எடுத்து வைத்திருந்தாலும் நாம் நிறுவும் மென்பொருளுக்கு புதிய பதிப்பு வந்திருந்தாள் அதை டவுன்லோட் செய்ய வேண்டும் . இதே உங்கள் கண்ணியை நீங்கள் format செய்தாலும் அனைத்து தேவையான மென்பொருள்களையும் நிறுவ வேண்டும் .

இதற்கு Ninte என்ற இணைய தளம் உதவி புரிகிறது .இந்த இணைய தளத்தில் பிரபலமான இலவச மென்பொருள்கள் அனைத்தும் தரப்பட்டிருக்கும் . அவற்றில் நமக்கு தேவையான மென்பொருள்களை தேர்வு செய்யவேண்டும் .


தேர்வு செய்த பின் Get Installer என்ற பட்டனை கிளிக் செய்தால் அனைத்து மென்பொருள்களும் நிறுவ ஒரே நிறுவி கிடைக்கும் .



இதை டவுன்லோட் செய்து பின் இயக்கினால் , அனைத்து மென்பொருள்களையும் டவுன்லோட் செய்து உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து விடும் .

இணைய தள சுட்டி . இதே வசதி தரும் மற்றொரு இணையதள சுட்டி





அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

5 comments:

  1. உபயோகமான தகவல். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நல்ல தகவல்...

    ஆனால் வேறு ஸ்பை வேர் ஏதாவது கூட ஏறிவிடப் போகிறது !

    ReplyDelete
  3. அண்ணாமலையான் , அறிவன் ,
    வருகைக்கும் , கருத்துகளுக்கும் நன்றி நண்பர்களே .

    அறிவன் நான் என் கணிணியில் இன்ஸ்டால் செய்து பார்த்த பின்னரே பதிவிட்டேன் நண்பரே , Spyware எதுவும் இல்லை நண்பரே

    ReplyDelete
  4. Thank you for the info. Hi-tech ஆளுப்பா நீங்க.

    ReplyDelete
  5. தலைவா என்னுடிய pen drive ஏற்கனவே மென்பொருள் இருக்குது அதை ஆடோமாடிக்கா இன்ஸ்டால் செய்ய எதாவுது வலி இருக்கா பார்த்து சொல்லுங்க,எனக்கு தெரிந்த auto it என்ற மென்பொருள் உள்ளது அனால் அதை எப்படி பயன் படுத்த வேண்டும் என்று புரியவில்லை இதை பற்றி உங்கள் ப்ளோகில் கொஞ்சம் எழுதுங்களேன் .

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.