Tuesday, March 30, 2010

Multi Links - நெருப்புநரியில் ஒரே கிளிக்கில் பல சுட்டிகளை திறக்க

நண்பர்களே,
இன்று பல அன்பர்கள் பயன்படுத்தும் உலவியாக நெருப்புநரி( Firefox ) மாறிவருகிறது. நெருப்புநரியில் உள்ள Add-On வசதி மூலம் பல வசதிகளை ஏற்படுத்தி கொள்ளலாம். அதனலாயே நெருப்புநரி மிகவும் பிரபலமாகி வருகிறது.ஒரு உபயோகமான நெருப்புநரி வசதி பற்றி இங்கு பார்ப்போம்.

நாம் தினமும் பல வலைதளங்களை உலவுகிறோம்,பல சுட்டிகளை கிளிக் செய்து செல்கிறோம்.நாம் இங்கு பார்க்கப்போவது பல சுட்டிகளை ஒரே கிளிக்கில் திறக்க உதவும் ஒரு add-on வசதி.இதன் பெயர் Multi Links.

நீங்கள் கூகிள் போன்ற தேடுதளங்களை பயன்படுத்தும் போது பல சுட்டிகளை திறந்து பார்க்க வேண்டியதிருக்கும். அதை ஒவ்வொன்றாக கிளிக் செய்து திறக்க வேண்டும் இதை எளிதாக்க இந்த அத்து-on உதவுகிறது.இதை நெருப்புநரியில் நிறுவிய பின் உங்கள் நெருப்புநரியின் கீழ்வலது மூலையில் கீழ்க்கண்ட ஐகான் தோன்றும்.


இந்த ஐகானை கிளிக் செய்வதன் மூலம் இந்த வசதியை On/Off செய்யலாம்.



மேலே படத்தில் உள்ளது போல் பல சுட்டிகள் உள்ள தளத்தில் உங்கள் Mouseன் Right கிளிக் பயன்படுத்தி சுட்டிகளை தேர்வு செய்தால் அனைத்தும் சுட்டிகளும் ஒரே நேரத்தில் திறக்கும்.சுட்டிகள் தனித்தனி Windowவில் தோன்ற வேண்டுமா அல்லது தனித்தனி tabஇல் தோன்ற வேண்டுமா என்பதை ஐகான் மீது Right கிளிக் செய்தால் தோன்றும் கீழ்க்கண்ட Windowவில் தேர்வு செய்து கொள்ளலாம்.

இந்த add-on வசதியை இங்கிருந்து நிறுவி கொள்ளலாம்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்

1 comment:

  1. மிக நல்ல வலைப்பூ. ஆனால் வடிவமைப்பு சற்று distract செய்வதாக உள்ளது. இன்னும் சற்று எளிமையான வடிவமைப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.