Unstoppable Copier - எவ்வித தடங்கலுமின்றி பழுதடைந்த கோப்புகளை காப்பி செய்ய
நாம் நிறைய கோப்புகளை CD,DVD மற்றும் வேறு கணிணி பகுதிகளில் இருந்தோ காப்பி செய்யும் போது சில கோப்புகள் பழுதடைந்திருந்தாலோ அல்லது CD,DVD பழுதடைந்திருந்தாலோ நீங்கள் காப்பி செய்யும் போது பாதியில் நின்று விடும்.இது நமக்கு எரிச்சலை தரும்.
இந்த மென்பொருள் பழுதடைந்த கோப்புகளையும் தடங்கலின்றி காப்பி செய்கிறது.முடிந்தவரை பழுதடைந்த கோப்புகளின் பகுதிகளை காப்பி செய்கிறது.எதாவது ஒரு கோப்பு பழுதடைந்து காப்பி செய்ய முடியவில்லை எனில் பாதியிலேயே நின்று விடாமல் மற்ற கோப்புகளை காப்பி செய்து விடுகிறது.
முக்கியமாக பழுதடைந்த CD,DVDகளில் இருந்து கோப்புகளை எடுக்க பெரிதும் உதவுகிறது.இந்த மென்பொருளை இங்கிருந்து பதிவிறக்கி கொள்ளலாம்.
DVD Flick - எந்தவொரு வீடியோ கோப்பையும் DVD ஆக மாற்ற
தற்போது நமக்கு வேண்டிய திரைப்படங்களையும்,வீடியோக்களையும் எளிதாக பதிவிறக்கி கொள்கிறோம்.அதை கணிணியிலும் பார்க்கிறோம் இருந்தாலும் TV யில் பார்ப்பதையே பல நண்பர்கள் விரும்புவர்.உங்கள் திரைப்படங்களையும்,வீடியோக்களையும் DVD ஆக மாற்ற இந்த இலவச மென்பொருள் உதவுகிறது.
உங்களுக்கு பிடித்த வீடியோகளை வகைப்படுத்தி DVD ஆக மாற்றி கொள்ளலாம்.
இதில் உங்கள் DVD அளவை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம்.
மேலும் இதில் DVD மெனுகளை(Menu) உருவாக்கி கொள்ளலாம்.
உங்கள் திரைப்படங்களுக்கு Subtitle இருந்தால் அதையும் இணைத்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு மற்றும் இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்.
தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Thursday, September 16, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வாழ்த்துகள் நன்பரெ நானும் இப்படி பட்ட மென்பொருளை தான் தேடினேன்...
ReplyDeleteஉங்களுடைய அனைத்து பதிவுகளும் மிக அருமை..
பல நூறு ஆண்டு வாழ்க ...
பழுதடைந்த கோப்புகளை காப்பி செய்யும் மென்பொருள் மிகச்சிறந்த பகிர்வு. நன்றி!
ReplyDelete