Monday, December 7, 2009

foobar - எளிய சிறிய பயனுள்ள சிறந்த ஆடியோ பிளேயர்


நம் அன்றாட வாழ்வில் இசை என்பது பிரிக்க முடியாத ஒன்றாகி விட்டது . கணினியை உபயோகப்படுத்தும் போதும் , இணையத்தில் உலவும் போதும் பலர் பாடல்கள் கேட்டுக்கொண்டே உபயோகப்படுத்துவார்கள் .மேலும் சிலர் வீடுகளில் பாடல்கள் கேட்கவே கணினியை உபயோகிப்பது உண்டு .நாம் பாடல்கள் கேட்க ஆடியோ பிளேயர் பயன்படுத்துகிறோம் .நிறைய ஆடியோ பிளேயர்கள் உள்ளன. அவற்றில் சிறந்த ஒன்று foobar .இந்த foobar ஆடியோ பிளேயர் சில சிறப்பம்சங்களை கொண்டுள்ளது . இதன் size மிகவும் குறைவு வெறும் 2.31 MB அளவு கொண்டது .மற்ற ஆடியோ ப்ளேயர்கள் போலவே அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது .



இதன் Size ஐ போலவே இது பிடிக்கும் memory அளவும் குறைவே . உங்கள் கணினியில் இது இயங்க மிக குறைந்த அளவே memory போதுமானது . இதனால் வேகமாகவே இயங்குகிறது .மேலும் இது MP3, MP4, AAC, CD Audio, WMA, Vorbis, FLAC, WavPack, WAV, AIFF, Musepack, Speex, AU, SND... போன்ற பல ஆடியோ வகைகளையும் இயக்குகிறது .

மேலும் எளிதில் உபயோகபடுத்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது . பல வகையான Playlist பயன்படுத்தும் போது எளிதாக பயன்படுத்தும் வகையில் tab வசதியை கொண்டுள்ளது . கீழே உள்ள படத்தை காண்க .



இதை இங்கிருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் .


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்




1 comment:

  1. Ys, Its a lightweighted one similar to VLC PLayer.. Anyways, Thanks for the recommendation.

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.