Monitor Off
நாம் அலுவலகத்திலோ ,வீட்டிலோ கணிணியை பயன்படுத்தும் போது எங்காவது செல்ல நேர்ந்தால் கணிணியின் திரையை அணைத்து விட்டு செல்வோம் அல்லது Screensaver ஓட விட்டு செல்வோம் . திரையை அணைக்க நாம் திரையில் உள்ள பட்டனை அழுத்தி விட்டு செல்வோம் . இதற்க்கு பதிலாக ஒரே கிளிக்கில் திரையை அணைக்க மற்றும் Screensaver ஓட விட இந்த மென்பொருள் உதவுகிறது .
இதன் உதவி கொண்டு நீங்கள் கணிணி திரையை அணைக்க ஏதாவது பட்டனை தேர்வு செய்து கொள்ளாம் . உதாரணமாக Ctrl + Shift +1 என உங்கள் வசதிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம் . Screensaver இயக்குவதற்கும் ஏதாவது பட்டனை தேர்வு செய்து கொள்ளாம். இல்லாவிடில் ஒரே கிளிக் மூலம் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம் .
மேலும் இதில் கிளிக் செய்த பிறகு எவளவு நேரம் கழித்து திரையை அணைக்க வேண்டும் அல்லது Screensaver இயங்க வேண்டும் என சொல்லிவிடலாம் .
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்
Windows Access Panel
நாம் Control Panel வழியாக சென்று சில Windows இயக்கங்களை இயக்குவோம் . உதாரணமாக Service Manager,RegEdit போன்ற பல Applications Control Panel லில் மூலமாக இயக்க முடியும் . மேலும் Chkdisk,Disk cleanup போன்ற பல Application களை windows menuவில் தேடிபிடித்து சென்று இயக்க வேண்டும் . இதற்க்கு பதிலாக Windows Access Panel என்ற மென்பொருள் இவைகளை சுலபமாக இயக்க உதவி புரிகிறது .
இது போன்ற Applicationகளை தொகுத்து விரைவாக இயக்க வழி புரிகிறது . இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்
அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல பதிவு நண்பரே....இதே பயன்பாட்டினை விளக்கும் சாப்ட்வேர் ஒன்றினை நானும் பதிவிட்டுள்ளேன்....
ReplyDeleteவாழ்க வளமுடன்,
வேலன்.
நல்ல தகவல்கள். தொடரட்டும் உமது பணி.
ReplyDeleteஜிஆர்ஜி
புதுவை.
வேலன் ,ஜிஆர்ஜி ,
ReplyDeleteஆதரவுக்கு நன்றி நண்பர்களே
நல்ல தகவல்
ReplyDelete