Monday, December 21, 2009

பயன்படுத்தி பாருங்கள் - 1

Monitor Off
நாம் அலுவலகத்திலோ ,வீட்டிலோ கணிணியை பயன்படுத்தும் போது எங்காவது செல்ல நேர்ந்தால் கணிணியின் திரையை அணைத்து விட்டு செல்வோம் அல்லது Screensaver ஓட விட்டு செல்வோம் . திரையை அணைக்க நாம் திரையில் உள்ள பட்டனை அழுத்தி விட்டு செல்வோம் . இதற்க்கு பதிலாக ஒரே கிளிக்கில் திரையை அணைக்க மற்றும் Screensaver ஓட விட இந்த மென்பொருள் உதவுகிறது .

இதன் உதவி கொண்டு நீங்கள் கணிணி திரையை அணைக்க ஏதாவது பட்டனை தேர்வு செய்து கொள்ளாம் . உதாரணமாக Ctrl + Shift +1 என உங்கள் வசதிக்கு ஏற்றவாறு தேர்வு செய்து கொள்ளலாம் . Screensaver இயக்குவதற்கும் ஏதாவது பட்டனை தேர்வு செய்து கொள்ளாம். இல்லாவிடில் ஒரே கிளிக் மூலம் கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம் .

மேலும் இதில் கிளிக் செய்த பிறகு எவளவு நேரம் கழித்து திரையை அணைக்க வேண்டும் அல்லது Screensaver இயங்க வேண்டும் என சொல்லிவிடலாம் .


இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்




Windows Access Panel
நாம் Control Panel வழியாக சென்று சில Windows இயக்கங்களை இயக்குவோம் . உதாரணமாக Service Manager,RegEdit போன்ற பல Applications Control Panel லில் மூலமாக இயக்க முடியும் . மேலும் Chkdisk,Disk cleanup போன்ற பல Application களை windows menuவில் தேடிபிடித்து சென்று இயக்க வேண்டும் . இதற்க்கு பதிலாக Windows Access Panel என்ற மென்பொருள் இவைகளை சுலபமாக இயக்க உதவி புரிகிறது .


இது போன்ற Applicationகளை தொகுத்து விரைவாக இயக்க வழி புரிகிறது . இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கே கிளிக்கவும்


அன்புடன் ,
லக்கி லிமட்
Browse Comics - காமிக்ஸ் உலவல்


4 comments:

  1. நல்ல பதிவு நண்பரே....இதே பயன்பாட்டினை விளக்கும் சாப்ட்வேர் ஒன்றினை நானும் பதிவிட்டுள்ளேன்....

    வாழ்க வளமுடன்,
    வேலன்.

    ReplyDelete
  2. நல்ல தகவல்கள். தொடரட்டும் உமது பணி.

    ஜிஆர்ஜி
    புதுவை.

    ReplyDelete
  3. வேலன் ,ஜிஆர்ஜி ,
    ஆதரவுக்கு நன்றி நண்பர்களே

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.