Monday, June 7, 2010

உங்கள் Recycle Bin இல் மேலும் சில வசதிகள்

நாம் தற்போது பயன்படுத்தும் விண்டோஸில் உள்ள Recycle Bin ல் குறிப்பிட்ட சில வசதிகளே உள்ளது.விண்டோஸ் வழங்காத மேலும் சில மிகவும் பயன்படக்கூடிய வசதிகளை தற்போது நாம் பார்க்க போகும் RecycleBinEx என்ற மென்பொருள் தருகிறது.



விண்டோஸில் உள்ள Recycle Bin ல் நிறைய கோப்புகள் சேரும் போது அவைகளை பிரித்து பார்ப்பது எளிதல்ல.இந்த மென்பொருள் வழங்கும் வசதிகளில் முக்கியமான ஒன்று கோப்புகளை 2,7,15 நாட்களுக்கு முன்பு மற்றும் 1,2,3 மாதங்களுக்கு முன்பு Delete செய்யப்பட்ட கோப்புகள் என உங்கள் வச்திகேற்றவாறு பிரித்து அறியலாம்.மேலே உள்ள படத்தை பெரிதாக்கி காண்க.

மேலும் இந்த மென்பொருளை நிறுவிய பின் உங்கள் Recycle Bin ல் Right கிளிக் செய்தால் 2,7,15 நாட்களுக்கு முன்பு மற்றும் 1,2,3 மாதங்களுக்கு முன்பு Delete செய்யப்பட்ட கோப்புகளை Recycle Bin ல் இருந்து நீக்க வசதிகள் இருக்கும்.இதன் மூலம் எளிதாக கோப்புகளை நீக்க முடியும்.கீழே உள்ள படத்தை பெரிதாக்கி காண்க.



உங்கள் தலையீடு இல்லாமல் தானாகவே சில நாட்களுக்கோ அல்லது சில மாதங்களுக்கு முந்தைய கோப்புகளை நீக்குமாறு வசதி செய்து கொள்ளலாம்.



இந்த மென்பொருளை தரவிறக்க சுட்டி

தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.