Sunday, June 6, 2010

கூகுளில் முகப்பு பக்கம் Background ஐ மாற்றும் வசதி அறிமுகம்

கூகிள் தனது முகப்பு பக்கத்தின் Background ஐ மாற்றி கொள்ளும் வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.Bing தளத்தில் Background இல் புகைப்படங்கள் இருக்கும் பார்க்க அழகாக இருக்கும்.ஆனால் கூகுளில் வெள்ளையாக இருக்கும்.இதனால் தற்போது கூகிள் இவ்வசதியை அறிமுகபடுத்தி உள்ளது.

இதற்கு கூகிள் முகப்பு பக்கம் செல்லுங்கள் பின் கீழ் இடது ஓரம் உள்ள Change background என்பதை கிளிக் செய்க


பின் தோன்றும் windowவில் உங்களுக்கு தேவையான புகைபடத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள். இல்லாவிடில் உங்களுக்கு பிடித்த புகைப்படத்தை உங்கள் கணிணியில் இருந்து ஏற்றி தேர்வு செய்து கொள்ளுங்கள்.



தேர்வு செய்த பின் நீங்கள் அந்த புகைப்படத்தை Background ஆக அமைத்து கொள்ளலாம்.கீழே உள்ளது போல் உங்கள் கூகிள் முகப்பு பக்கம் மாறி விடும்.



நீங்களாக கொடுக்கும் புகைப்படம் .jpeg, .tif, .tiff, .bmp, .gif, .psd, .png, .tga போன்ற படங்களில் ஒன்றாகவும்,அளவு 800 x 600 உடையதாகவோ அல்லது மேலாகவோ இருக்கலாம்.

தமிழிஷில் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....

அன்புடன் ,
லக்கி லிமட்

0 comments:

Post a Comment

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.