Tuesday, June 15, 2010

நெருப்புநரி நீட்சி : பொறுமையாக படிக்க விரும்புவதை புக்மார்க் செய்ய

உலவிகளில் புக்மார்க் எனும் வசதியை நாம் அறிவோம்.நாம் அடிக்கடி பர்ர்க்கும் இணையதளங்களையும்,பொறுமையாக படிக்க விரும்பும் இணையதளங்களையும் புக்மார்க் மூலம் சுட்டிகளை சேமித்து விட்டு எளிதாக மீண்டும் தேவைப்படும் நேரத்தில் பார்க்கலாம்.

ஆனால் நீங்கள் அடிக்கடி பர்ர்க்கும் இணையதளங்கள்,பொறுமையாக படிக்க விரும்பும் இணையதளங்கள் என புக்மார்க் சுட்டிகளை பிரிக்கலாம்.அடிக்கடி பர்ர்க்கும் இணையதள சுட்டிகள் நமக்கு எப்போதும் தேவைப்படும். ஆனால் சில இணையதள பக்கங்களை அப்புறமாக பொறுமையாக படிக்க விரும்புவோம். ஆனால் படித்தவுடன் இந்த சுட்டிகள் தேவைபடாது.

இரண்டு வகை புக்மார்க்குகளையும் தனித்தனியே பிரித்து அறிவது கடினமாக இருக்கும்.இதற்கு பதிலாக தனியாக ஒரு போல்டரில் போட்டாலும் ஒவ்வொரு முறையும் அந்த போல்டரில் இணைப்பதும் சலிப்பூட்டும்.

இதற்கு Save To Read என்ற நெருப்புநரி நீட்சி உதவுகிறது. இந்த நீட்சியை நிறுவிய பின் நீங்கள் பொறுமையாக படிக்க விரும்பும் பக்கத்தின் Address Barஇல் தோன்றும் + என்ற குறியீடை கிளிக் செய்தால் அந்த பக்கம் தனியாக சேமிக்க பட்டுவிடும்



இந்த சுட்டி தனியே கீழ்க்கண்ட முறையில் சேமிக்க பட்டு இருக்கும்.



இதன் மூலம் பொறுமையாக படிக்க விரும்புவதை எளிதாக தனியாக வைத்து கொள்ளலாம்.இந்த சுட்டிகளை மொத்தமாக காண கீழ்க்கண்ட வழிமுறையை பயன்படுத்தவும்.

View -> Toolbars -> Cutomize சென்று கிளிக் செய்க



தோன்றும் windowவில் உள்ள கீழ்க்கண்ட ஐகானை Drag செய்து உங்கள் Tool Barஇல் போட்டு கொள்ளவும்.



பின் அந்த ஐகானை கிளிக் செய்தால் அனைத்து புக்மார்களும் தோன்றும்.



Address Barஇல் தோன்றும் - என்ற குறியீடை கிளிக் செய்வதன் மூலம் அந்த பக்கத்தை புக்மார்க்கில் இருந்து நீக்கலாம்.

இந்த நெருப்புநரி நீட்சியை இங்கிருந்து நிறுவி கொள்ளலாம்.


தமிழிஷில்,தமிழ்10ல் ஓட்டு போட மறவாதீர் நண்பர்களே....
அன்புடன் ,
லக்கி லிமட்
Protected by Copyscape Online Copyright Search

1 comment:

  1. If you use google tool bar, it has bookmarks option.It can be installed in IE, FIREFOX [More may be possible]. Google bookmarks can be accessed as a web page also. You can read it in any system, any browser later. [Here, you can read just in the particular system, particular browser.].

    ReplyDelete

உங்கள் கருத்துகள் எதுவானாலும் இங்கே பதிவு செய்க.உங்களை பற்றி நானும் இங்கு வருபவர்களும் அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும்.